
மக்கள் உண்மையை தெரிந்து கொள்வதற்கு தான் செய்திகள், பத்திரிக்கை துறை! ஆனால், அது இன்று மக்களிடையே ஒரு போலியான பிம்பத்தை, கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,ஏற்படுத்தியதன் விளைவு !
இன்றைய விமர்சனங்கள், ரீல்ஸ் எல்லாம் செய்தியாக, அது ஒரு போலியான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. எது உண்மை? எது பொய் ?அதை சொல்வதுதான் பத்திரிக்கை!
அது சொல்லத் தகுதி இல்லாமல் நானும் பத்திரிகை என்று சமூக ஊடகங்கள்! பல! கேள்விகளை மக்களிடம் கேட்கிறார்கள்? யாரிடம் கேட்க வேண்டும்? அர்த்தம் தெரியாதவனிடம் கேள்வி கேட்டு ,என்ன பிரயோஜனம்? மேலும்,

தற்போது சமூக ஊடகங்களில் உதயநிதி கைது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ன நினைக்க சொல்கிறீர்கள்? மக்களுக்குத் தெரியாததனால், உண்மையை வெளிப்படுத்துவது ,பத்திரிகைகளின் வேலை.

ஆனால் ,அதை மக்களிடமே போய் நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் இதை சொன்னார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?இப்படி எல்லாம் சமூக ஊடகங்களில் கேள்வியை எழுப்புவது பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்வதற்கு அர்த்தம் இல்லை.

ஆளாளுக்கு, ஒரு ஒரு கருத்து இருக்கும். அந்தக் கருத்தை எல்லாம் சேர்த்து செய்தி என்று சொல்லிவிடலாமா? இப்படி எல்லாம் போலியான பத்திரிகை பிம்பம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.மேலும்,
செய்திக்கு அர்த்தம் தெரியாமல், உண்மைக்கு அர்த்தம் தெரியாமல், யார் எதை பேசினாலும் அது செய்தியா? பேசியதில் எது உண்மை? எது பொய்? அது சொல்வதுதான் பத்திரிக்கை. அதை மக்களிடம் போய் கேட்கிறார்கள்.
மக்களுக்கு சொல்ல வேண்டியது பத்திரிகையின் கடமை. மக்களுக்கே தெரியாது இருக்கும்போது, நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ன சொல்ல வருகிறீர்கள்?

இப்படி பத்திரிக்கை என்ற பிம்பத்தில் ஒரு வரைமுறை இல்லாமல், சமூக ஊடகங்களில் வருகின்ற செய்திகள்! மக்களை குழப்பிக் கொண்டுதான் இருக்கும். மேலும், இது ரியலுக்கும், ரீல்ஸுக்கும் வித்தியாசம் தெரியாமல், இருப்பவர்கள் சொல்லுகின்ற கருத்து. அர்த்தமற்றது.

மேலும் , நடிகை ஜாதி, மதத்தை பற்றி பேசியிருக்கிறார். அது அவர்களுடைய கருத்து. ஜாதியைப் பற்றி பேசுவதில் என்ன பெருமை இருக்கு? மதத்தைப் பற்றி பேசுவதில் என்ன பெருமை இருக்கு? இரண்டிலும் பெருமை இருக்கு அது அந்த நடிகைக்கு தெரியுமா?

ஆனால், அதையும் எவ்வளவு பேர் பார்த்தார்கள்? என்று இன்ஸ்டாவில் பதிவிடுகிறார்கள். வாழ்க்கை அர்த்தமுள்ளது. எப்படியும் வாழ்பவர்கள் ,எப்படியும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.மேலும்,
சில ஜாதி ஒழுக்கத்தின் மேன்மையை கடைபிடித்து வாழ்கிறார்கள். உழைத்து வாழ்கிறார்கள். நம்பிக்கையும் கடவுள் பக்தியும் சார்ந்து வாழ்கிறார்கள். இந்து மத கலாச்சாரத்தின் உயர்ந்த நோக்கத்துடன் வாழ்கிறார்கள்.
இங்கே ஜாதி மதம் எவ்வளவு உயர்வானது என்பது அந்த வாழ்க்கையை முடித்து அவன் இறந்த பிறகும் புண்ணியத்தின் நிலை என்ன பாவத்தின் நிலை என்ன என்ற கணக்கீடுகளோடு வாழ்க்கை என்ற புத்தகம் எழுதப்படுகிறது அதுவாவது அந்த நடிகைக்கு தெரியுமா? இது எல்லாம் தெரியாமல்!

வாழ்ந்தால், அது மக்களின் முட்டாள்தனம். படித்தும் சிந்திக்கக்கூடிய அறிவில்லாமல் செல்போன் வைத்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு கருத்தை பேசி ,அதிலே வீடியோ போட்டுக் கொண்டு, அதை வைத்து, ஒருவரைப் பற்றி, ஒருவர் அரசியல் விமர்சனங்கள்!

இது என்ன?சினிமா? ட்ராமா டயலாக்கா? , அதிலும் சினிமா நடிகை என்றால் ,அவர்கள் எதை போட்டாலும், பார்க்கின்ற முட்டாள்தனமான இளைஞர்கள் வாழ்க்கையில் அர்த்தம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
மேலும், இவ்வளவு பேர் பார்க்கிறார்கள். அவ்வளவு பேர் பார்த்தார்கள். பார்த்து என்ன செய்து விட்டார்கள்? ஆக்கப்பூர்வமான சிந்தனை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். வெத்து வெட்டு கூட்டம் போட்டுக் கொண்டிருக்கிற ரீவ்ஸ் எல்லாம் அது எதற்கும் பயன்படாது. அது எத்தனை லட்சம் பேர் பார்த்தாலும், அதனால், எந்த பிரயோஜனமும் இல்லை.

மேலும்,இன்றைய காலகட்டத்திற்கு இணையதளத்தின் தேவையை , தவறான முறையில் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பது, தவறான கருத்துக்களை சேர்ப்பது, இது எல்லாம் அவரவர் வாழ்க்கைக்கு, அவரே சூனியம் வைத்துக் கொள்வது போல் ஆகிவிடும்.
மேலும்,இன்றைய இளைஞர்கள் கல்விக்கு சம்பந்தமான பாடத்திட்டங்களை படிக்க வேண்டும். அறிவு சார்ந்த விஷயங்களில், அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு! என்ன மாதிரியான தொழில்? வேலை வாய்ப்பு ?அது குறித்து அவர்கள் சிந்தித்து படிக்க வேண்டும் .அந்த ஆற்றலை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும்,சினிமா வேறு, வாழ்க்கை வேறு, இது இரண்டையும் ஒன்றாக பார்த்தாலும், பார்ப்பவர்களும் நிச்சயம் வாழ்க்கையில் தோல்வி அடைவார்கள். இதை ஆய்வு செய்து பார்க்கட்டும் . தவிர,கற்பனையில் உதித்த நிழல் வாழ்க்கை! எந்த காலத்திலும் நிஜமாகாது. அதை நிஜமாக்குவதற்கு உழைப்பு அவசியம். உண்மைகள் அவசியம் .அது தெரியாமல் கற்பனையில் வாழ்ந்து, கற்பனையிலே போய் சேர வேண்டியதுதான்.

மேலும், இன்றைய இளைய தலைமுறைகள் ,இப்போது வருகின்ற சினிமா படங்கள், உயர்வான வாழ்க்கைக்கு, ஒத்து வராது. கீழ்த்தரமான எண்ணங்களும், வக்கிரமான எண்ணங்களும், வன்முறைகளும் அவர்கள் மனதில் வளர்கிறது.
இன்று பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதில்லை .அதற்கு முக்கிய காரணமே இது தான். ஒழுக்கத்தின் மேன்மையை சொல்வதாக தெரியவில்லை. இன்றைய சினிமா படம்,மனித வாழ்க்கையின் அறிவை விட்டு, விலகி ஏமாற்றி பிழைப்பது எப்படி?

உழைக்காமல் கோடீஸ்வரராக ஆவது எப்படி? ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றுவது எப்படி? பணக்காரப் பெண்ணை காதலித்து சொகுசாக வாழ்வது எப்படி?சமூகத்தை ஏமாற்றுவது எப்படி? சொந்த ஜாதியை ஏமாற்றுவது எப்படி? ஜாதிக்குள் உறவுகளை ஏமாற்றுவது எப்படி? இப்படி ஏமாற்றிய வாழலாம் என்றால் இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
ஏமாற்றியவன் வாழ்க்கை நிரந்தர சந்தோஷத்தை ஏற்படுத்தாது அது சிறிது காலம் சந்தோஷம்! நிரந்தர துக்கம். அதனால் வாழ்க்கை இன்றைய சமூகம் செல்போன் தான் என்று முடிவு எடுத்து ரிலீஸ் போட்டுக் கொண்டு, இன்றைய அரசியலில் சமூகத்தில் வாழ்க்கையில் இதையெல்லாம் மக்களை முட்டாளாக்கும் வேலை. மக்கள் ஏமாறாமல், இருப்பதற்கு தேவையற்ற கருத்துக்களும், தேவையற்ற செய்திகளையும், பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.

இதை வைத்து ஒரு பத்திரிக்கை என்ற பிம்பத்தை ஏற்படுத்தி போலியான கருத்துக்கள் எப்போதும் வெற்றி பெறாது. அதாவது அர்த்தமில்லாமல் உண்மையில்லாமல் ஒரு கருத்தை சொல்லும்போது அது போலியானது. அது தேவையற்றது. உண்மைக்கும் ,போலிக்கும் இப்போதாவது அர்த்தம் புரிகிறதா?
