நாட்டில் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றி உண்மைகளை வெளியிட்டு வருகின்ற ஒரு சில பத்திரிகை செய்திகளை கூட அரசு அதிகாரிகள்,( பத்திரிகை உண்மை செய்திகளை) அலட்சியம் செய்தால், நாட்டில் ஊழலை உரம் போட்டு வளர்க்க வா ? மேலும், அவ்வாறு அதை அலட்சியம் செய்வது அதிகாரிகள் ஊழல்வாதிகளுடன் கைகோர்த்து இருப்பது வெட்ட வெளிச்சமான உண்மை. தவிர,
திமுக அரசு தன்னுடைய கட்சிக்காரர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏ ,மந்திரி, சேர்மேன்கள், கவுன்சிலர்கள் இவர்களுடைய ஒரே குறிக்கோள் பணம் மட்டுமே இன்றைய அரசியல். அப்படி பணம் பண்ணும் வேலையில் எப்படி பொதுநலமிருக்கும்? இதைப் பற்றி
சில பத்திரிகைகள் புகழ்வது, பாராட்டுவது பத்திரிகை பற்றி தெரிந்தவர்கள் இதை ஒரு பொழுதுபோக்கு துறையாக மாற்றி விட்டார்களா? அல்லது உண்மைகளை அலட்சியப்படுத்தி நடவடிக்கை எடுக்காமல், ஊழலை அதிகாரிகள் உரம் போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்களா? மேலும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டத்தின் உயர் அதிகாரிகளாக பந்தா காட்டுவது முக்கியமல்ல.
மக்களின் பிரச்சினைகள் என்ன? பொது பிரச்சனைகள் என்ன? அந்த பொது பிரச்சினையை பற்றி பொதுநலத்துடன் சமூக ஆர்வலர்கள் கொடுக்கின்ற புகார்கள் மீது, இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? இவர்கள் நடவடிக்கை எடுக்காததால், அவர்கள் ஊழல்வாதிகள் உடன் போராட வேண்டி இருக்கிறது. அது மட்டுமல்ல, பொது பிரச்சனைகளுக்கு கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியப்படுத்தும் போது நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
அப்படி நீதிமன்றம் செல்லும் போது, பொது பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் மீது சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். இது மாவட்ட ஆட்சியரின் முக்கிய பொறுப்பு. அவருடைய பொறுப்பை தட்டிக் கழிப்பதால், நீதிமன்றம் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இதை
சமூக ஆர்வலர்கள் செய்யும்போது ,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. எத்தனையோ கிராமங்களில் இந்த பிரச்சனை,தவறான முறையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அந்த அளவிற்கு இன்றைய அரசியல் தரம் தாழ்ந்து விட்டது .பணத்தால் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி, அனுபவிக்க கூடிய ஒரு நிலைமைக்கு அரசியல் வந்துவிட்டது. இது பொது நலனுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து.மேலும்,
இதில் அரசு அதிகாரிகள் கூட்டு சேர்ந்து செயல்படும் போது தான், நாட்டில் மக்களுக்கு பொதுநலன்கள் பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட சிலர் லாபம் அடைகிறார்கள். இது அரசியல் குற்றமா? அல்லது அதிகாரிகள் குற்றமா? அல்லது பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது எப்படி பொதுநலமாகும் ?மேலும்,
,அரசு அதிகாரிகள் தன்னுடைய பதவியை வைத்துக்கொண்டு செயல்படாமல், கௌரவமாக சொல்லிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும் கரை வேஷ்டி கட்டிக்கொண்டு பதவிகளை பெற்று பந்தா காட்டுவது, கூட்டத்தைக் காட்டுவது அரசியல் என்பது ஒரு ஏமாற்று வேலையா ? இந்த இரு தரப்புக்கும் நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாமல் பொது சொத்துக்கள் மற்றும் பொது நலனை பாதுகாக்க முடியாது.இதற்கு,
மத்திய அரசு கடுமையான சட்டங்கள் கொண்டு வராமல், பொதுமக்களுக்கு பயனுள்ள திட்டங்கள், பொது பிரச்சனைகள், பொது சொத்துக்களை பாதுகாத்தல், மேலும் மக்கள் பிரச்சனைகள் ,எல்லாவற்றிற்கும் மக்களின் இன்றைய வாழ்க்கை ஒரு போராட்டக் களமாகிவிட்டது. இதை தடுப்பது மத்திய அரசின் முக்கிய கடமை.