நாட்டில் கிருத்துவ மத வாதிகள் மலைகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்றால் எந்த மலையும் இருக்காது.இயற்கையை அழித்தால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும்.

அரசியல் ஆன்மீகம் உள்ளூர் செய்திகள் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் பொறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து சர்ச்சுகள் நூற்றுக்கணக்கில் கட்டி இருக்கிறார்கள். இப்போது புதுவிதமாக பூண்டி ஊராட்சியில் உள்ள அரும்பாக்கம் கிராம பகுதியில் உள்ள மலைகளில் நாங்கள் ஆராதனை நடத்துகிறோம் என்ற பெயரில் சிலுவை வழிபாடு நடத்துகிறார்கள்.

 இந்த வழிபாட்டுக்கு ஊராட்சி மன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. நாங்க எல்லாம் அந்த கிராமத்திற்கு நல்லது செய்கிறோம். அதற்கு பலனாக எங்களுக்கு அந்த மலையை நாங்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறோம் என்று ஒரு மறைமுகமான லஞ்சமாகத்தான் இது இருக்கிறது. அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுக்க வேண்டும். இது என்ன முறை என்று தெரியவில்லை? சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகள் சர்ச் ஆக இருந்தாலும், இந்து கோயில்களாக இருந்தாலும், தர்காக்களாக இருந்தாலும், இடிக்கப்பட வேண்டும் . கடவுள் பெயரில் பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்வது எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த கடவுளும் இது போன்ற தவறான செயல்களை ஏற்பதில்லை.

மேலும், இது போன்ற தவறான விதிமுறைகளில் கல்லறைகள் ஆக்கிரமித்துக் கட்டுவது, சர்ச்சுகள் கட்டுவது ,தர்காக்கள் கட்டுவது, எந்த கடவுளும் இவர்களை கட்ட சொல்லவில்லை. அதை இவர்களாகத்தான் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு சட்டங்களும் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் நாட்டில் நீர் நிலை புறம்போக்கு, தரிசு புறம்போக்கு, மேக்கால் புறம்போக்கு, இவையெல்லாம் மதவாதிகளால் பட்டா போடப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இல்லாமல் போய்விடும்.இதை உடனடியாக அரசு நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும், இது போன்ற செயல்களால் எல்லா மதத்தினரும் ஆக்கிரமிப்பு செய்தால், மத மோதல்கள் நிச்சயம் உருவாகும் அதை ஆரம்பத்திலே தடுப்பது தமிழக அரசுக்கு மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *