இந்திய தேர்தல் ஆணையம் ,மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு இல்லாமல் தேர்தல் நடத்தி எந்த பயனும் இல்லை. தவிர, அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளும், பணமும், இலவச பொருட்களும் வாக்காளர்களுக்கு கொடுத்து விலை பேசுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .இதை எடுக்க இவர்களுக்கு அதிகாரம் இல்லையா? அதிகாரம் இருந்தும் நடவடிக்கையை அலட்சியப்படுத்துகிறார்களா?
தேர்தல் என்பது நாட்டின் சம்பிரதாயத்திற்கு நடத்தும் சடங்கோ அல்லது கடமைக்கு செய்யும் வேலையோ அல்ல இது 140 கோடி மக்களின் உரிமைக்கான அதிகார குரல் என்பதை மக்களிடத்தில் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். தவிர, தேர்தல் கருவிகளை பயன்படுத்த பயிற்சியளித்து கடமைக்கு தேர்தல் நடத்துவது வீண்.
இது பற்றிய பலமுறை செய்திகளை மக்கள் அதிகாரம் வெளியிட்டும் இன்று வரை தேர்தல் ஆணையம் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.