நாட்டில் தேவையில்லாத சட்டங்களை அகற்றி வரும் பிஜேபி அரசு! ஏன் பத்திரிக்கை துறையில் தேவையில்லாத சட்டங்களை 50 ஆண்டு காலமாக வைத்திருக்கிறது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

காலத்துக்கேற்ப சட்டங்களை மாற்றக்கூடிய பாஜக அரசு, பத்திரிகைத் துறையில் மட்டும் ஏன் அதைச் செய்யவில்லை?

தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் இந்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். தவிர,

செய்தித்துறை மத்திய இணை அமைச்சர் முருகன் ஏன்? இதை மாற்றுவதற்கு மத்திய அரசில் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும்,எத்தனையோ சட்டங்களை பிரதமர் மோடி மாற்றி இருப்பதாக சொல்ல கூடிய மத்திய இணை அமைச்சர் முருகன்,இதை மாற்றுவதற்கு ஏன் மத்திய அரசிடம் சொல்லவில்லை? இதன் மூலம்,

மாநில செய்தித் துறை அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் கமிஷன் கொடுப்பது போல, மத்தியில் உள்ள செய்தி துறைக்கு இந்த பத்திரிகைகள் கமிஷன் கொடுக்கிறார்களா? மேலும்,

Hindu பத்திரிக்கையில், மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களும், பாகிஸ்தானுக்கு ஆதரவான செய்திகளும் வெளியிட்டு வந்துள்ளது. இன்று வரை அதைப் பற்றி மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதாவது பத்திரிக்கை துறையில் கூட பணக்கார பத்திரிகைகளுக்கு ஒரு சட்டம், ஏழை பத்திரிகைகளுக்கு ஒரு சட்டமா?இதுதான் பத்திரிக்கை துறையின் சமூக நீதியா?

மேலும், பத்திரிக்கை துறையில் சர்குலேஷன் என்ற ஒரு சட்டம் கார்ப்பரேட் பத்திரிக்கை,தொலைக்காட்சிகளுக்கு சாதகமாக பயன்படுத்தி சலுகை விளம்பரங்களை கோடிக்கணக்கில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று பத்திரிக்கை வியாபாரம் குறைந்துவிட்ட நிலையில், பத்திரிகைகளின் இணையதளத்தை ஏன் சர்க்குலேஷனில் கொண்டு வரக்கூடாது? இதனால் நடுத்தர வர்க்கம் நடத்தும் பத்திரிகைகள் வளர்ச்சி அடைந்து விடுமா?அதனால், அரசியல் கட்சிகளுக்கு பயமா? மேலும்,

நடுத்தர வர்க்கம் நடத்தக்கூடிய மாத பத்திரிகைகளுக்கு இன்று வரை மத்திய அரசு என்ன செய்தது? தவிர, தினசரி முக்கிய செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகைகளின் இணையதளங்களை மத்திய மாநில அரசு பார்வையாளர்களின் கணக்கிலும், செய்திகளின் தரத்திலும் ஏன் அதை அங்கீகரித்து சலுகை விளம்பரங்கள் கொடுக்கக் கூடாது? மேலும், ஊழலுக்காக எதிர்த்து போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை,விளம்பரங்கள் கொடுத்தால் அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?அல்லது இந்த வியாபார பத்திரிகை நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? எது என்பதை செய்தித் துறை அதிகாரிகளாால் அதற்கு பதில் அளிக்க முடியுமா? மேலும்,

தமிழ்நாட்டில் இதுவரை மத்திய செய்தி துறை இணை அமைச்சர் முருகன் இந்த பத்திரிகைகளுக்கு என்ன செய்தார் ? தவிர, பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய இந்த பிரச்சனைகள் எல்லாம் இவருக்கு தெரியுமா? தெரியாதா? இது தவிர,

தமிழ்நாட்டில் உள்ள செய்தி துறை அரசியல் கட்சி செய்தித் துறையாக மாறிவிட்டது. அது எப்படி என்பது பத்திரிக்கை துறைக்கு தெரிந்த ஒன்றுதான்.அதாவது, திமுக அரசுக்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிக்கை,தொலைக்காட்சிகளுக்கு மட்டும் தான் சலுகை, விளம்பரங்கள் அதற்கு மட்டும்தான் பத்திரிக்கையாளர்களின் நலவாரிய சலுகைகள் என்று ஊர்ஜிதப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தகுதியான பத்திரிகைகளுக்கு அரசின் அடையாள அட்டை கூட கொடுப்பது கிடையாது. சில தினங்களுக்கு முன், என்னிடம் எனக்கு அரசு அடையாள அட்டை வாங்கித் தர முடியுமா? எனக்குத் தெரிந்த ஒருவர் கேட்க, எனக்கு தெரியாது என்று கூறி விட்டேன். ஆனால் அவர் மீண்டும் என்னிடம், பத்தாயிரம் கொடுத்தால் ஒருவர் அரசு அடையாள அட்டை வாங்கி தருவதாக தெரிவித்தார். இப்படி பத்திரிகை செய்தியாளர்கள் தகுதி திமுக ஆட்சியில் விலை பேசப்படுகிறதா? மேலும்,

பத்திரிக்கை துறையில்,RNI வாங்கி பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத ஒரு கூட்டம்,பத்திரிகை அடையாள அட்டையை விற்பனை செய்து கொண்டிருக்கும் பத்திரிகைகள், பத்திரிக்கை துறையில் தகுதியான பத்திரிகைகளுக்கு சலுகை,விளம்பரங்கள் கிடைக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

பத்திரிகையின் அடையாள அட்டை தான் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிருபர்களுக்கு எது பத்திரிக்கை? அதன் தரம் என்ன? செய்தியின் தரம் என்ன? எதுவுமே தெரியாத கூட்டங்கள்,பத்திரிகை இன்று பத்திரிகை துறையையும், பொதுமக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இதனால்,ஒரு பக்கம் பத்திரிகையின் மீது பொதுமக்கள் விவரம் தெரிந்தவர்கள், விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மத்திய அரசு எப்போது சரி செய்யப்போகிறது? செய்தியைப் பற்றி தெரியாது. ஆனால் செய்தியாளர் என்று பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,அரசியல் கட்சிகள் பொதுமக்களை ஏமாற்றுவது போல, இந்த பத்திரிகை செய்தியாளர்கள் கூட்டமும், பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

அதாவது அரசியல்வாதிக்கு தகுதி இல்லாதவர்கள்,அடியாளுக்கு தகுதியானவர்கள் எப்படி அரசியல்வாதி என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்களோ,அதே போல் தான், இவர்களும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த லட்சணத்தில் பத்திரிக்கை துறை மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது.

மேலும்,திமுக ஆட்சியில் தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டும் தான் சகல விதமான சலுகை, விளம்பரங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி அரசியல் பத்திரிக்கை துறைக்குள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தால்,இது எப்படி நான்காவது தூணாகும்? மக்களுக்கு எப்படி உண்மை சென்றடையும்? மக்களுடைய வரிப்பணத்தில், மக்களை ஏமாற்றும் பத்திரிகைகள், வியாபாரமாக ஆக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மைகள் கூட தெரியாத வளர்ந்த சமுதாயம், பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள், இந்த பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் கொடுக்கக்கூட தயங்குகிறார்கள். காரணம் உண்மையைப் பற்றி சிந்திக்காமல் வியாபாரத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். பணம் இருந்தால் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளலாம். ஆனால் பணம் இல்லாததால், எங்களைப் போன்ற நடுத்தர பத்திரிகைகள் உண்மையை மக்களிடம், பெரிய அளவில் கொண்டு செல்ல முடியவில்லை.

அதனால்,இணையதளத்தில் மக்களிடம் இந்த உண்மைகளை கொண்டு செல்கிறோம். தவிர, மத்திய மாநில அரசின் செய்தித்துறை தினசரி பத்திரிகைகளுக்கு மட்டும் தான் விளம்பரங்கள்,பஸ் பாஸ் உள்ள சலுகைகள் என்றால், தினசரி இந்த பத்திரிக்கை செய்திகளில் மக்களுக்கான முக்கிய செய்திகள் எத்தனை வெளியிடுகின்றன இதைப் பற்றி செய்தித் துறை அதிகாரிகளுக்கு தெரியுமா தெரியாதா அரசின் செய்திகள் மட்டும்தான் மக்களுக்கு சென்றடைய வேண்டுமா? அது மட்டும் தான் முக்கியத்துவம் ஆனதா? அப்படி என்ன அரசின் முக்கியத்துவமான செய்திகள்? அதை செய்தி துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் இவர்களால் நிரூபிக்க முடியுமா?

பாமர மக்கள் பத்திரிகை என்றால்,பல பக்கங்களும், பெரிய அளவில் அந்த லேபிளை அதாவது Hindu, தினத்தந்தி, தினமணி,தினமலர், டெக்கான் கிரானிக்கல், இப்படி பணக்கார்கள் நடத்தக்கூடிய பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகள் தான் உண்மை என்று நம்பி ஏமாறக்கூடியவர்கள் அதிகம்.

இவர்கள் ஆளும் கட்சியிடம் கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டு, அவர்கள் சொல்லக்கூடிய பொய்களையும்,அவர்கள் செய்யும் தவறுகளுக்கு முட்டுக்கொடுத்தும்,நாட்டில் அவர்கள் பத்திரிகை வியாபாரத்தை லாபகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு செய்தித் துறையில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள், இந்த உண்மை எல்லாம் தெரியாமல் பணியாற்றுகிறார்களா? இதுதான் நான்காவது தூணா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி?அதனால்,மக்களுக்கு இவர்கள் சொல்வது தான் செய்தி. இப்போதாவது இந்த ஊடகங்களின் நிலைமை மக்களுக்கு புரிகிறதா? மேலும்,

ஏழை,நடுத்தர பத்திரிகைகளில் சொல்லக்கூடிய உண்மைகள் செய்தி என்று ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற ஊழல்வாதிகள், சுயநலவாதிகள், பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாதவர்கள், பொதுமக்களில் குறிப்பிட்ட சதவீதம் இருக்கிறார்கள். அதேபோல்தான்,செய்தித் துறையில் அதற்கு அர்த்தம் தெரியாத செய்தி துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம், சொந்த நலனுக்காக எப்படியும் பேசுவார்கள். தங்களுடைய சுயலாபத்திற்காக தரக் குறைவாக விமர்சனம் செய்வார்கள்.

இதையெல்லாம் ஒரு பக்கம் தாங்கி மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய பத்திரிகைகள் மிக,மிகக் குறைவு. இன்று சர்குலேஷன் என்ற சட்டம் அச்சு ஊடகத்தில் போலியான விற்பனைகளை காண்பித்து,பத்திரிக்கையில் சர்குலேஷன் காட்டுகிறார்கள். இது ஒரு புறம் என்றால், மதிய அரசின் ரயில்வே துறையில் தினமலர் பத்திரிக்கையை பயணிகளுக்கு இலவசமாக கொடுத்து, அங்கே வியாபாரம் செய்கிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. இப்படி அரசியல் செல்வாக்கு இருப்பவர்கள், அல்லது இந்த பணக்கார பத்திரிகைகள் மட்டும்தான் இந்த பத்திரிக்கை துறையில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார்கள். இது எந்த அளவிற்கு செய்துத் துறையின் மிக மோசமான செயல்கள் என்பதை பொதுமக்கள், இந்த உண்மைகளை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

அரசியல் கட்சிகள்,அரசியல் கட்சி தலைவர்கள் என்ன?சொன்னாலும் கைதட்டி கொண்டிருக்கும் சுயநல கூட்டத்திற்கு எந்த உண்மையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால்,தான் மக்களிடம் நல்லவனாக,ஆட்சியில்,பதவியில் அமர வேண்டும்.அதற்காக என்ன பொய் வேண்டுமானாலும்,பேசிக் கொண்டிருக்கலாம்.

அதேபோல்தான், இந்த பத்திரிகைகளும்,தொலைக்காட்சிகளும் தங்களுடைய வருமானத்திற்காக, எந்தப் பொய் வேண்டுமானாலும்,மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கலாம். இந்த நிலைமையில் சமூக நலனுக்காக போராடி நடத்திக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் எத்தனை என்பதை விரல் விட்டு எண்ணலாம்.மேலும்,

இங்கே குறிப்பிடுவது,தகுதியான பத்திரிகைகளுக்கு ஏன்? அந்த சலுகை,விளம்பரங்கள் கொடுத்தால் மக்களுக்கு உண்மையை கொண்டு சேர்க்க மாட்டார்களா? தவிர,

செய்திகளுக்கும், தகவல்களுக்கும், அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் பத்திரிகை நடத்திக் கொண்டு,செய்தியாளர்கள் என்று அடையாள அட்டைகளை காண்பித்துக் கொண்டு,உழைக்காமல் செய்தியாளர்களாகவும்,

பத்திரிகையாளர்களாக ஆகிவிட வேண்டும் என்பதுதான் தற்போதைய பத்திரிக்கை துறை இருந்து வருகிறது. இதையெல்லாம் மத்திய அரசு எப்படி சீர் செய்யப் போகிறது? தகுதியான பத்திரிகைகளுக்கு சலுகை,விளம்பரங்களை கொடுக்காதது ஏன்? நாட்டின் சமூக நன்மைக்கு சமூக நலன் பத்திரிகைகள் மிகவும் அவசியமானது என்பதை மத்திய, மாநில அரசின் செய்தி துறை, அரசியல் கட்சிகள்,பொதுமக்கள்,கார்ப்பரேட் கம்பெனி தனியார் நிறுவனங்கள்,எப்போது இந்த உண்மைகளை உணரப் போகிறார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *