ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram
பஞ்சாயத்து ராஜ் சட்டம் அதிகார பகிர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டமாக இருந்தாலும் ,அந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் அதாவது மக்களுக்காக இல்லை. இது முழுக்க. முழுக்க அதிகாரிகளும், பஞ்சாயத்து நிர்வாகிகளும், கூட்டுக் கொள்ளை நடத்தும் சட்டமாகத்தான் இருந்து வருகிறது. இந்த சட்டத்தை ஏற்கனவே மக்கள் அதிகாரத்தில் பலமுறை எழுதியிருக்கிறேன். உள்ளாட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
அந்த காலத்தில் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்தார்கள். இப்போது மக்கள் மனசாட்சி இல்லாமல் வாழ்கிறார்கள். அதனால், இந்த சட்டங்களால் கிராம மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கேள்வி கேட்க கூட மக்கள், கிராம சபை கூட்டங்களில் வரவில்லை. ஒரு சில கிராமங்களில் 10 பேர், 20 பேர் கிராம சபை கூட்டங்களை, பேருக்கு தான் நடைபெறுகிறது. சில கிராமங்களில், அந்த கிராம சபை கூட்டம் கூட நடத்தவில்லை. ஒரு கிராமத்தில் நான்கு, ஐந்து பேர் தான் கேள்வி கேட்கிறார்கள்.இப்படித்தான் கிராமத்தின் அவல நிலை மாறி இருக்கிறது. நாம் ஏன்? கேட்டு கெட்ட பெயர் எடுத்துக் கொள்ள வேண்டும்? நல்லவனாக கேட்காமலே இருக்கலாம் .இப்படி எல்லாம் மக்களின் மனநிலை மாறி இருக்கிறது.
அப்போதெல்லாம் ஒரு தவறு என்றால் !அந்த தவறை தட்டி கேட்க மக்கள் கூட்டம் கூடுவார்கள். இப்போது தவறு செய்பவர்களுக்காக கூட்டம் கூடுகிறது. அதில் நமக்கு என்ன பங்கு கிடைக்கும் ?நமக்கு எவ்வளவு கிடைக்கும்? இப்படி தான் கிராமங்கள் மாறி இருக்கிறது .அந்த அளவுக்கு மக்களின் சுயநலம் ஊர் எக்கேடு ,கெட்டாலும் பரவாயில்லை. ஊர் சொத்தை கொள்ளை அடித்து தான் நிம்மதியாக வாழ்ந்திடலாம் .இப்படி எல்லாம் உழைக்காமல் ஊரை ஏமாற்றி வாழலாம் என்று அரசியல் கட்சியினர், நல்லவர்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால், சட்டங்கள் இந்த அதிகாரிகளும், சம்பளத்திற்கு மாரடைக்கும் கூட்டமாக தான் உள்ளாட்சியில் இருந்து வருகிறார்கள். கொஞ்சம் கூட சமூக கரையே இல்லை .அப்போதெல்லாம் மாவட்ட ஆட்சியர்கள் பத்திரிகையாளர்கள் போன் என்றால், உடனடியாக எடுப்பார்கள். மீட்டிங்கில் இருந்தாலும், மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு கூப்பிடுகிறேன் என்று கூட சொல்வார்கள். இப்போது அது போன்ற பத்திரிகையாளர்களும் இல்லை. மாவட்ட ஆட்சியர்களும் இல்லை.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் போன் செய்தாலும் எடுக்க மாட்டார். அது எதனால் தெரியவில்லை? ஒவ்வொரு விஷயத்தையும் சொல்வதற்கு நேரில் வந்து பேச முடியுமா? ஒரு அரசுத்துறை அதிகாரி போன் செய்தால் எடுக்க வேண்டும். எடுக்காமல் இருப்பது தவறு. நீங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்தாலும், அரசு சம்பளம் வாங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .மேலும், திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்த அளவில் எந்த கிராமத்திலும், கிராம சபை கூட்டம் கொடுக்கப்பட்ட விதிமுறைப்படி நடைபெறவில்லை. பேருக்கு கிராம சபை கூட்டம் தான் நடைபெற்றது. பிரையாங்குப்பம் கிராமத்தில், கிராம பஞ்சாயத்து அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது.
நான் சுற்றிப் பார்த்ததில் இந்த கிராமங்களில் சேலை கிராமம் மட்டும்தான் கூட்டம் இல்லை என்றாலும், அது கிராம சபை கூட்டம் போல தெரிந்தது. மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை நேரடியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதேபோல் ஏகாட்டூர் ,புதுமாவிலங்கு, விடையூர், கடம்பத்தூர் போன்ற பல கிராமங்களில் பேருக்குத்தான் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. பெரும்பாலும் 10 பேர், 20 பேர் கூட இல்லாமல் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இது எதுக்கு? இப்படி ஒரு கிராம சபை கூட்டம்! இதற்கு RS: 10,000,. RS:15,000 செலவு என்று கிராம சபை கூட்டத்தின் கணக்கு எழுதி கணக்கு காட்டிவிட்டு போவதற்கா ?
இங்கே ஒரு வேடிக்கை சிரிப்பு என்னவென்றால் ! இந்த பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு மட்டும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்திருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்திற்கு சுமார் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மேல் உள்ளனர். நான் நிருபராக பணியாற்றிய போது, ஒரு மாவட்ட ஆட்சியர் இருந்தார். அவருடைய நிர்வாகம் அவ்வளவு சிறப்பாக இருந்தது .இப்போது நான்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு மேல் இருக்கிறார்கள்.
இருந்து என்ன பயன் ? சம்பளம் வாங்கிக் கொண்டு, மக்களுடைய வரிப்பணத்தை தான் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் . ஒரு மாவட்ட ஆட்சியர் இருக்கும்போது பஞ்சாயத்து ஊழல்கள் அவ்வளவு இல்லை. நான்குக்கு மேல உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து இதையெல்லாம் சரி செய்ய முடியவில்லை என்றால்! அவர்கள் ஐஏஎஸ் படித்தது வீண்.