மே 04, 2024 • Makkal Adhikaram
கார்ப்பரேட் மீடியாக்களில் மதச்சார்பின்மை பொய்களை சொல்லி, அரசியல் செய்யும் எதிர்க் கட்சிகள் மறைமுகமாக முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஓட்டுக்காக மத அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மத அரசியல் தான் இந்துக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையே ஒரு மத மோதல் அரசியலை ஊக்குவிக்கிறது.
இது சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிரிந்த பிறகு கூட ,இது தொடர்கதையாக வருவதற்கு காரணம்? இந்த மதச்சார்பின்மை என்று பேசிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் மறைமுக அரசியல் .இவர்கள் அப்போது மறைமுகமாக மத அரசியலை செய்து கொண்டிருந்தார்கள் .இப்போது நேரடியாகவே இந்துக்களுக்கு எதிராகவும், இன்று தர்மத்திற்கு எதிராகவும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதன் எதிரொலி தான் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மத்தை எதிர்ப்போம் என்று சொன்னபோது நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்பு அலைகள் எழுந்தது . வழக்கும் தொடுத்தார்கள்.அதன் பிறகு பேச்சை மாற்றி பின்வாங்கினர் உதயநிதி ஸ்டாலின்.
இப்படிபட்ட அரசியல் எதனால், இந்த எதிர்க்கட்சிகள் செய்கிறார்கள்? என்பது இன்று வரை எந்த ஊடகமும் மக்களுக்கு அதை தெரியப்படுத்தவில்லை. எந்த பெரிய ஊடகம் என்று செய்தித் துறையும், சில குறிப்பிட்ட மக்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ ,அவர்களுக்கு எல்லாம் புரியும்படி சொல்கிறேன். அவை ஒன்றும் பெரிய ஊடகங்கள் அல்ல. சிறிய ஊடகங்கள் தான். உண்மையை வெளிப்படுத்தக்கூடிய ஊடகங்கள் தான் பெரிய ஊடகங்கள்.
தவிர, ஊழலுக்கு ஓத்து ஓதும் ஊடகங்கள் எல்லாம் பெரிய ஊடகங்கள் அல்ல, என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் .இந்த நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின் 50 ஆண்டுகால வரலாற்றை எடுத்துப் பாருங்கள், அப்போது புரியும் .வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டிருந்தால், அதை எழுதிக் கொண்டிருந்தால், ஊடகங்கள் தெரியாதவர்களுக்கு தெரியாது. அதனால்தான், புரியும்படி சொல்கிறேன். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சர்வாதிகாரம் இருந்தது .ஊழல் இருந்தது .அதிகப்படியான ஊழல் கடைசியில் ராஜீவ் காந்தி ஆட்சியின் போது, இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. உலக நாடுகள் இந்தியாவை மிரட்டி பார்த்தது.
பல நாடுகளில் கடன்கள் வாங்கி வைத்து விட்டு போனது தான் காங்கிரஸ் ஆட்சியின் வரலாறு. அதன் பிறகு மோடி ஆட்சிக்கு வந்த பின் தான், இந்த கடன்கள் வட்டியுடன் சேர்த்து படிப்படியாக குறைத்து இந்தியா வளர்ச்சியை நோக்கி வளர ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சியே இதுவரை, இந்தியாவை ஆட்சி செய்து இருந்தால், இந்திய நாட்டில் ஊழல்கள் அதிகரித்து, இன்னொரு பாகிஸ்தான் ஆக இந்தியாவை மாற்றி இருப்பார்கள் .அதில் மாற்றுக் கருத்து இல்லை.
அது மட்டுமல்ல பாகிஸ்தானில் எப்படி அடிக்கடி தீவிரவாதம், குண்டு வெடிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் அத்தனையும் இந்தியாவில் நடத்தி இருப்பார்கள். ஆக கூடிய காங்கிரஸ் ,இவர்களுடைய ஊழலுக்கு ஒத்துழைக்கக்கூடிய முஸ்லிம்கள் ஆதரவு தேவை என்பது அவர்களுக்கு முக்கியமான ஒன்று. அதனால் தான், இந்தியாவில் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதனால் தான் மோடி சொன்னது தவறு ஒன்றுமில்லை .இந்துக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை இவர்கள் முஸ்லிம்கள் கையில் எடுத்து கொடுத்து விடுவார்கள் என்றார்.
அது தவறு இல்லை இவர்களுடைய அந்த கால வரலாறு பற்றி சில பார்க்கலாம் அதாவது காங்கிரஸ் ஆட்சியில் தான் பாகிஸ்தான் உருவானது. காங்கிரஸ் ஆட்சியில் தான் வங்கதேசம் உருவானது .காங்கிரஸ் ஆட்சியில் தான் காஷ்மீருக்கு 370 அந்தஸ்து கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தான் சிறுபான்மையினர் மசோதா வந்தது. முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினர் அமைச்சகம் உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினர் பல்கலைக்கழகம் ஆனது. இந்த வேலையெல்லாம் காங்கிரஸ் கட்சி செய்தது, முஸ்லிம்களுக்காக மட்டும்தான்.
மேலும், நாட்டின் பிரிவினை மத அடிப்படையில் நடந்த போது, ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான தயாரிப்பு காங்கிரஸ் கட்சி மறைமுகமாக செய்து வந்தது .இதில் இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு மட்டும் கொடுத்தது. அதனால் இந்து சமுதாயம் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இதுதான் காங்கிரஸின் நோக்கம் .இது தவிர, காங்கிரஸ் கட்சி என்ற ஒரு கட்சி இந்தியாவில், அப்படி ஒரு கட்சியே இருக்கக் கூடாது . பெரும்பான்மை இந்துக்களை அழித்துவிட்டு, சிறுபான்மை மக்களை வைத்து ஆட்சி, அதிகாரம் பெற்றுவிடலாம் என்ற காங்கிரஸ் கட்சியின் கனவு இனி பலிக்காது.
மக்கள் 50 ஆண்டுகள் ஏமாந்தது போதும், இனி இவர்கள் இந்தியாவுக்கு ஆட்சியாளர்களாக வந்தால் மற்றொரு பாகிஸ்தானாக மாற்றி விடுவார்கள். அதனால், இந்துக்கள் இவர்களுடைய மத அரசியலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அரசியல் என்பது பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழி நடத்தக்கூடிய அரசியல் நமக்கு தேவை .அதேபோல், சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்களுடைய மத உணர்வுகளை மதித்து நடக்கக்கூடிய அரசியல் தான் பொதுவான அரசியல் .அது பிஜேபி வலியுறுத்துகிறது. அதுதான் பொது சிவில் சட்டம் .
ஆனால், இவர்கள் மதச்சார்பின்மை என்று சொல்லிக்கொண்டு 10 ,20 மனைவிகளை கட்டிக்கொண்டு, அவர்களுக்கு தலாக் சொல்லி அவர்களையும் நடுரோட்டில் விட்டுவிட்டு, அந்த குழந்தைகளையும் அனாதை ஆக்கிவிட்டு இருக்கக்கூடிய முஸ்லிம் சமூகத்தில், ஒரு கும்பல் காங்கிரசை ஆதரிக்கிறது. ஆனால், உழைத்து வாழக்கூடிய முஸ்லிம்கள் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் .
குறுக்கு வழியிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கடத்தல் வியாபாரத்திலும் ஈடுபடக்கூடிய முஸ்லிம்கள், மோடிக்கு எதிராக இருக்கிறார்கள் .அதே போல் கிறிஸ்துவ மதத்தில் உள்ளவர்கள் மத வழிபாட்டை மட்டுமே சர்ச்சில் முக்கிய நோக்கமாகக் கொண்டவர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் .ஆனால், சர்ச்சை வைத்து இயேசுவை வைத்து வெளிநாட்டில் மத வியாபார அரசியல் செய்பவர்கள், மோடியை ஆதரிப்பது இல்லை. இப்படி அரசியலும், மதமும் தமிழ்நாட்டில் பின்னிப் பிணைந்துள்ளது.
குறிப்பாக மோடியின் அரசியல், உழைக்கும் மக்களுக்கு ஆதரவானது, .ஊரை ஏமாற்றுபவர்களுக்கும்,ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கும், மோடியின் அரசியல் அவர்களுக்கு எதிரானது.
தமிழ்நாட்டில் இவர்களுடன் கைகோர்த்துள்ள திமுக ,விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற கட்சிகள்,மற்ற மாநிலங்களில் கேரளாவில் கம்யூனிஸ்ட், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் இவர்களெல்லாம் ஊழலுடன் மத கலாச்சாரத்தை கொண்டு வந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .
இந்த மத அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துள்ளனர்.காரணம் இல்லாமல் கைகோர்ப்பார்களா? இவர்கள் அரசியல் செய்ய அரசியலுக்கு பணம் கொடுக்கிறார்கள். அந்தப் பணம் நல்ல வழியில் வந்ததா? அல்லது குறுக்கு வழியில் வந்ததா? போதைப்பொருள் கடத்தலில் வந்ததா ?அல்லது கடத்தல் தொழிலில் வந்ததா? எதைப் பற்றியும் கவலை இல்லை. பணம் வந்தால் போதும் ,இதுதான் இவர்களின் அரசியல் கொள்கை .