நீதித்துறை மக்களின் கடைசி நம்பிக்கை ! இந்த நம்பிக்கையை நீதிமன்றமும், நீதிபதிகளும் அதிகார வர்க்கத்திற்கும், பணத்திற்கும், அடி பணிந்து விலை போகக்கூடாது – நீதியின் மீது நம்பிக்கை  வைத்து நேசிப்பவர்கள் .

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் நீதித்துறை! இன்று மக்கள் பிரச்சனைகளுக்கும் ,அரசியல் மற்றும் அரசு பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் நீதித்துறை இருந்து வருகிறது .இதில் நீதிமன்றம் ஆட்சியாளர்களுக்காக ,அரசியல் கட்சியினருக்காக, அரசு அதிகாரிகளுக்காக, மந்திரிகளுக்காக ,சலுகை காட்டக் கூடாது.

 இங்கே சாமானியனம், அதிகார வர்க்கமும், பணக்காரனும், ஏழையும், ஒருவர் தான். நீதி என்பது மனசாட்சியின் கடவுள். அந்த கடவுளை நீதிபதிகள் யாருக்காகவும், அதன் புனிதம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்வது நீதிமன்றத்தின் முக்கிய மாண்பு .மேலும், தமிழ்நாட்டில் உள்ள முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், வழக்குகள் இருக்கும்போது, நீதிமன்றமும், நீதிபதிகளும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்று பல நீதிபதிகள் தாமாக முன்வந்து அமைச்சர்களின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்து தண்டனை வழங்கக்கூடாது?

இப்படி செய்தால்! உங்களை ஒவ்வொரு நாளும், இதை நீதி தேவதை வரவேற்று வாழ்த்துவாள்.. உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நீதியை நிலைநாட்டும், புனிதப் பணி! நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும், உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியது. ஒருவர் பல ஆண்டுகளாக கிடைக்க வேண்டிய நியாயமான அரசாங்க நன்மைகள் கிடைக்காமல் போனால், அவர் நீதிமன்றம் தான் செல்வார். வேறு எங்கும் முறையிட முடியாது.

 அந்த நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைசி மக்களின் நம்பிக்கை நீதிமன்றம். இந்த நீதிமன்றம் இன்று எதிர்க்கட்சியாக தமிழ்நாட்டில் செயல்பட வேண்டிய அவசியம் என்ன? என்றால், அவர்களுடைய பணியை அவர்கள் சரிவர செய்யவில்லை. அரசியல் என்பதை ஆட்சியாளர்கள், ஊழல் செய்வதற்காகவே, அமைச்சர் பதவி, அதிகாரம் மிக்க பதவி ,அரசு பதவி என்று நினைத்து அதைத் தொழிலாக்கி விட்டார்கள் .அதனால், இங்கு நீதிபதிகள் பாரபட்சம் இன்றி, நீதி வழங்கி ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய முக்கிய காலகட்டத்தில் நாடு இருந்து வருகிறது. இப்படி ஒவ்வொரு அமைச்சர்களும், அதிகாரிகளும் கோடிக்கணக்கில் ஊழல்களை செய்து விட்டு, நீதிமன்றத்தில் நிரபராதிகளானால், சட்டம், நீதிமன்றத்தின் மாண்பு கேள்விக்குறியாகிவிடும்?

மேலும், இங்கே அரசியல் உள்ளே வராமல் இருக்க உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் கண்காணிப்பது மிக மிக அவசியம். தவிர, ஒவ்வொரு நீதிபதியும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்று இருந்தால், இதற்கு முன்னரே மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டது போல, ஊழல்வாதிகள், சமூகவிரோதிகள், தேச துரோகிகள், இவர்களெல்லாம் அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள் .மக்களின் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். நேர்மையான அரசியல் இருக்கும்.

இந்த நேர்மையான அரசியலை! ஊழல் கலாச்சாரமாக அதிமுக ,திமுக அரசியல் கட்சிகள் மாற்றி இருப்பது மக்களால் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. இதை நீதிமன்றமும், பத்திரிக்கை துறையும் ஒன்றிணைந்து அகற்ற வேண்டிய நெருக்கடியான சூழலில் நாடு இருந்து வருகிறது என்பதை சமூக ஆர்வலர்கள், நீதியின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அரசியல் அதிகாரத்தால் சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் அதற்கு சில நீதிபதிகள் சலுகை காட்டுகின்றனர். மேலும் இப்படிப்பட்ட ஊழல்வாதிகள் சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பிக்க நீதிபதிகளும், நீதிமன்றங்களும் சலுகையோ, கருணையோ காட்டக்கூடாது.மேலும்,

 இன்று ஆட்சி நிர்வாகத்தில்!  ஊழலே ஆட்சியாக இருப்பதற்கும், ஊழல்வாதிகளின் அதிகாரத்தில் ஆட்சி நிர்வாகம் இருப்பதால், மக்களின் வாழ்க்கை மிகப்பெரிய ஒரு போராட்டத்தின் உச்சகட்டமாக உள்ளது. அதற்கு இன்றைய கார்ப்பரேட் மீடியாக்களும், நீதிமன்றமும் தான் என்பதை சில வழக்கறிஞர்களே பேசுகின்றனர். ஏனென்றால் ,ஒருவரைப் போல் ஒருவர் இருக்க முடியாது.

 இருப்பினும், கூடுமானவரை நீதிபதிகள் ஊழல்வாதிகளை தப்பிக்க முயற்சி செய்யக் கூடாது. அதிகாரம் மிக்கவர்களுக்கு அடிபணிய கூடாது .நாட்டில் தர்மமும், நீதியும் நிலைநாட்ட மக்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றம் இருப்பது அவசியம். மேலும், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள், வழக்கு நிலுவையில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் சட்டத்தின் ஓட்டைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

 ஆனால், நீதிபதிகள் அந்த ஓட்டைகளை அடைத்து மக்களின் நலநலனே முக்கியம் என்று நாட்டின் ஜனநாயகத்தையும், மக்களின் கடைசி நம்பிக்கையும் பாதுகாப்பது அவசியம். ஒவ்வொரு நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ,நீதி தேவதை கவனிப்பாள் என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *