சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ,நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் குற்றத்தை நிரூபிக்க விசாரணை செய்வதில் முட்டுக்கட்டை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் குழு ஆலோசனை பெற்ற பிறகு விசாரணை மேற்கொள்ளலாம்.
அடுத்தது ,செந்தில் பாலாஜியின் உடல் நிலைக்கும், சிகிச்சைக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் விசாரிக்க வேண்டும். விசாரணையின் போது மூன்றாம் நிலை முறையை அதாவது (third degree treatment ) பயன்படுத்தக்கூடாது. அடுத்தது, எந்தவித கொடுமையும் ,அச்சுறுத்தலும், வற்புறுத்தலும் செய்யக்கூடாது. செந்தில் பாலாஜிக்கு தேவையான பாதுகாப்பை அமலாக்கத்துறை வழங்க வேண்டும். இந்த நிபந்தனைகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாகவே உள்ளது.
மேலும் ,இதே உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை பயன்படுத்தி பல குற்றவாளிகள் தப்பிக்கவும் வாய்ப்புள்ளது. நீதிமன்றம் இதில் சலுகை காட்டி இருக்கிறது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. தவிர,அவருடைய உடல் நிலைக்கு வேண்டிய மருத்துவம் கொடுப்பது மட்டும்தான் நீதிமன்றம் விதிக்க வேண்டிய நிபந்தனையாக இருக்க வேண்டும்.
ஆனால், அமலாக்கத் துறையின் விசாரணையில் நிபந்தனைகள் விதித்திருக்கக் கூடாது .அதற்கு சட்டம் எப்படி ஒத்துழைக்கும்? என்பது தெரியவில்லை. இது அமைச்சர்களுக்கு மட்டும்தான் இந்த சட்டமா? அல்லது சாமானிய மக்களுக்கும் இந்த சட்டமா? என்பதை நீதிமன்றம் தான் இதை நீதித்துறைக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.