தமிழக கவர்னர் ஆர். என்.ரவி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை பலமுறை தெரிவித்து வந்துள்ளார். அப்போதெல்லாம் திமுகவினரும், கூட்டணி கட்சிகளும் அவரை விமர்சனம் செய்தனர் .ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதை ஒரு அரசு அதிகாரியை வெட்டி கொலை செய்யப்பட்டதன் மூலம் தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும்.
இவர் மணல் மாபியா கும்பலுடன் பேரம் பேசியிருந்தால் பல கோடி சம்பாதித்து இருக்கலாம். ஆனால், நேர்மையாக வாழ்ந்ததற்கு அவருக்கு கிடைத்த தண்டனை என்று தான் திமுக ஆட்சியில் சொல்ல வேண்டும். இது கலிகாலத்தின் ஆட்சி .இங்கே நேர்மை என்பதற்கு பஞ்சம் .நியாயம், தர்மம், நீதி எதுவும் பேசக்கூடாது. அவர்களுக்கு தேவைப்படும் போது மட்டும் பேசிக் கொள்வார்கள்.
ஆனால், மக்களுக்கு தேவைப்பட்டால் அதை பேசவும் கூடாது. எழுதுவும் கூடாது. இப்படிப்பட்ட ஒரு அரசியல், அரசாங்கம், மக்களுக்கு தேவையா? மேலும்,அரசியல் ரவுடிகள், மணல் கடத்தும் மாஃபியாக்கள், அரசியல் கட்சிக்கும் , பேச்சுக்கும், செயலுக்கும் அர்த்தமற்றவர்கள். அரசியலை வைத்து பொது சொத்துக்களை கொள்ளை அடிக்கும் கூட்டம், மக்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள், இவர்களுக்கு எல்லாம் சுதந்திரம் தேவையா? இதற்கு இந்த நாட்டை வெள்ளைக்காரன் ஆட்சி செய்திருந்தாலே, மக்கள் கவலையின்றி நிம்மதியாக இருப்பார்கள். இவர்களுக்கு சுதந்திரத்தின் அர்த்தமும் தெரியவில்லை. மக்களுக்கு அரசியலும் புரியவில்லை. இதுதான் இங்கு இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சனை.
இவர்களுக்கு எல்லாம் சுதந்திரத்தின் அர்த்தம் தெரியாமல், சட்டத்தின் மாண்பு தெரியாமல், சுதந்திரமாக செயல்படுகிறார்கள். அதன் விளைவு இன்று ஒரு நேர்மையான அரசு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.பாவம் அந்த குடும்பம் இரண்டு பெண் பிள்ளைகளையும், ஒரு ஆண்மகனையும் வைத்துக்கொண்டு, நேர்மையான முறையில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் .அப்படிப்பட்டவருக்கு எவ்வளவு பெரிய தண்டனை? என்பது நம்மால் உணர முடிகிறது.
மாவட்ட ஆட்சியர் அந்த மணல் கொள்ளையை கிராமர் நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் புகார் அளித்த போது அதை நிறுத்தி இருக்க வேண்டும். அல்லது அவரை மாற்றி இருக்க வேண்டும். காவல்துறை அவருக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அல்லது இந்த பிரச்சனையாவது உளவுத்துறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். இதையெல்லாம் அரசு அதிகாரிகள் ஏன் செய்யவில்லை? காரணம் திமுக ரவுடிகளே இந்த மணல் கடத்தும் மாஃபியாக்கள் என்று அப்பகுதியில் பேசப்படுகிறது.
தவிர, பத்திரிகைகள், செய்தியாளர்கள் இந்த செய்திகளை வெளியிட கூட அவர்களுக்கு சுதந்திரம் இல்லை. அந்த அளவிற்கு அந்த பகுதி இருப்பதாக தகவல் வெளிவருகிறது. இதுதான் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது தமிழக மக்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும். மேலும் திமுக ஆட்சியில் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், இறந்த பிறகு, அவர்கள் குடும்பத்திற்கு தற்போது ஒரு கோடி ரூபாய் ,அரசு வேலை என்று அறிவித்திருப்பது தேவையற்ற வேலை. அதைக் கூட அந்த குடும்பம் வாங்க மறுக்கிறார்களாம்.
அப்படி என்றால் இதைவிட அவர்களுக்கு அவருடைய உயிர் தான் முக்கியம் என்பது புரிய வைத்திருக்கிறார்கள். தவிர , இப்படிப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகளை, தமிழக முழுதும் விரல் விட்டு தான் எண்ண முடியும். மேலும், இது போன்ற நிலை தொடரும் ஆனால், திமுக ஆட்சி செய்வதற்கு தகுதியை இழந்துவிட்டது என்பதுதான் இந்த ஆட்சி நிர்வாகத்தின் அவலம். தவிர, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். அதனால், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,இப்படிப்பட்ட கொலை சம்பவம் இனிமேலாவது நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பதை அவர் எடுத்தாக வேண்டும்என்பது அரசு அதிகாரிகள், பொதுமக்கள், பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோரின் முக்கிய கோரிக்கை.