படித்தவர் முதல் படிக்காதவர் வரை, மனித வாழ்க்கையில் காலம் என்ற ஒரு சுழற்சி சுற்றி வருகிறது .அது மனித மனத்தை ஆட்சி செய்கிறது. தற்போது இருக்கின்ற மனித வாழ்க்கையின் மனம் 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றால் அவர்களின் மனம் நிறைய வேறுபாடு இருக்கிறது. அந்த மக்கள் வாழ்ந்த சூழ்நிலை அப்படியா? அல்லது பிறவியிலே அவர்கள் அப்படி இருந்தார்களா? அல்லது இப்போது வாழுகின்ற மக்கள் மக்களின் மனநிலை எதையும் உழைக்காமல் பெறுவது எப்படி? அது எப்படி முடியும்? அது ஒரு முடியாத காரியம்.
ஒரு மனிதன் உணவு அருந்த வேண்டும் என்றால் கூட, அதை சமைத்து அதற்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் சேகரித்து, அதை பக்குவமாக செய்தால் தான் ருசியாக சாப்பிட முடியும். இப்படி உணவுக்கே மனிதன் ஒரு போராட வேண்டிய நிலைமை .
ஆனால் தன்னுடைய வருமானத்திற்காக தினமும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலைதான் இன்று எழுவது சதவீத மக்களின் நிலைமை. இதில் நிரந்தரமான வருமானம் உள்ளவர்கள், நிரந்தரமற்ற வருமானம் உள்ளவர்கள், அரசு வருமானம் உள்ளவர்கள், என பலவகை இருக்கலாம், எல்லா வகையும் போராட்டம் இல்லாமல் எதுவும் வராது.
இதை எல்லாம் மீறி எப்படி சமூகத்தை ஏமாற்றுவது? எப்படி சாதியை ஏமாற்றுவது? எப்படி சட்டத்தை ஏமாற்றுவது? சாதி மத அரசியலை வைத்து எப்படி ஏமாற்றி பிழைப்பது? இப்படி ஏமாற்றி பிழைப்பது தான் வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு ஒரு பாதை, அதற்கு ஒரு பயணம் ,அதற்கு ஒரு தலைவன் என்று இன்றைய அரசியல்! மக்களை ஏமாற்றுவது தான் முக்கிய தொழிலாக்கி விட்டார்கள் .
இது எதனால் ஏற்பட்டது? எப்போது அரசியலில் ரவுடிகள், கிரிமினல்கள், மோசடி பேர்வழிகள் உள்ளே வந்தார்களோ, அப்போது அனைத்து அரசியல் கட்சிகளிலும், இந்த வேலை ஆரம்பித்துவிட்டது. இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? அதிகாரமிக்கவர்கள் இருக்கிறார்கள். பண பலம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். இதுதான் வலிமை என்று இன்றைய அரசியல், உழைப்பவனை ஏமாற்றி சுரண்டும் அரசியல் ஆகிவிட்டது. இந்த அரசியலுக்கு முக்கிய மூலதனமே பேச்சுத் திறமை கலையாகிவிட்டது.
அதாவது பேசத் தெரிந்தவன் பெரிய அரசியல்வாதி ,தலைவனாக கூட ஆகிவிடலாம். அதற்கும் கைதட்ட கூட்டங்கள் இருக்க வேண்டும். அதற்கும் கூலி கொடுத்து அவர்களை உட்கார வைத்து விசில் அடிக்க சொல்லி கைதட்ட வேண்டும். இவர்களுடைய கனவு இலட்சியம் எல்லாம், அரசு பதவியை நோக்கி இருக்கும். அது எத்தனை கோடி மக்கள் ஏமாறுகிறார்கள்? என்பது பொறுத்துதான், அவர்களுடைய இலட்சிய கனவு ஈடேறும்.
அதற்கு மக்களிடையே அவர்கள் பாடிய பாட்டை பாடி கொண்டிருப்பது ஊடகங்கள். ஒரு பக்கம் அரசியலில் கொள்ளையடித்து சேர்த்து வைத்த பொருட்களை அனுபவிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள் பல லட்சம் பேர் ,அவர்களுக்கு இந்த பணம் எப்படி வந்தது? என்று கணக்கு கேட்டு வருகின்ற ஒரு தொல்லை ,வழக்கு, நீதிமன்ற பிரச்சனை ,இது ஒரு பக்கம்.
பதவிக்காக போராடிக் கொண்டிருப்பது, கூட்டத்தை காண்பித்து கட்சியின் பலம் என்று காட்டுகிறார்கள். இதில் எத்தனை பேர்? இன்றைய ஒவ்வொரு கட்சியின் கொள்கையாளர்கள்? என்றால் ஒருவரும் இல்லை. எல்லோரும் ஒரு கணக்கு போட்டு தான் இன்றைய அரசியலுக்கு வருகிறார்கள். நமக்கு எத்தனை கோடி வர வேண்டும்? எத்தனை கோடி வந்தாலும், உனக்கு கடவுள் எதைக் கொடுத்து வைத்திருக்கிறார்? அதுதான் நடக்கப்போகிறது. அதுதான் ஒவ்வொருவருக்கும் நடக்கும்.
பதவி இருக்கலாம். பணம் இருக்கலாம். உன்னை சுற்றி பல லட்சம் கூட்டம் இருக்கலாம். எது இருந்தாலும், உனக்கு நிம்மதி இருக்கிறதா? அல்லது சந்தோஷம் இருக்கிறதா? அதனுடைய உண்மை தெரிந்து இருக்கிறாயா? வாழ்க்கையை உணர்ந்திருக்கிறாயா? காலம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை என்ற கணக்கை எண்ணிக் கொண்டிருக்கிறது.
பிறப்பு என்று ஒன்று இருக்கும்போது, கூடவே மரணம் என்பது நிச்சயிக்கப்பட்டுள்ளது .ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வாழ்கின்ற மக்கள் பணம், பதவிக்காக மட்டும் போராடி வாழ்க்கையில் சாதித்தது என்ன? எதுவும் நிரந்தரமற்றது. இந்த நிரந்தரமற்ற ஒவ்வொரு நிகழ்வுக்காக தான் மனித வாழ்க்கையின் போராட்டங்கள், ஏற்றத்தாழ்வுகள் பாராட்டு, பெருமை, புகழ் ,இகழ்ச்சி எல்லாம் அடங்கிய ஒரு இடத்தை நோக்கி வாழ்க்கையின் பயணம் செல்கிறது.
ஆனால் முடிவு எங்கே? எப்படி இருக்கும்? என்று யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம். இப்படிப்பட்ட வாழ்க்கைக்காக தன்னை ஒரு சமூகத்தின் அடையாளமாக இன்றைய ஏமாற்று அரசியல் களம் ,தமிழ்நாட்டில் பேச்சுப் போட்டி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்தப் பேச்சு போட்டியை நடத்தி வைப்பவர்கள் ஊடகங்கள் .
இப்படிப்பட்ட நிலைமைக்கு யார் காரணம் மக்களா? ஊடகமா? சட்டமா? அரசியலா?உண்மையான நிலை, உண்மையின் அரசியல் எப்படி இருக்க வேண்டும்? என்று எந்த ஊடகமும் இதுவரை மக்களுக்கு சொல்லவில்லை. ஒருவர் சொல்லும் குறைகளை ,இன்னொருவர் அதே குறையை அவர் மீது அல்லது அரசியல் கட்சிகள் மீது வைத்து, அவர் நல்லவராக இந்த பேச்சு போட்டி நடந்து கொண்டிருக்கும். இதுதான் இன்றைய அரசியல்.
ஆனால் அரசியல் என்பது எது? நீ என்ன இந்த மக்களுக்கு செய்தாய்? நீ என்ன இந்த மக்களுக்கு செய்யப் போகிறாய்? நீ எதற்காக அரசியலுக்கு வந்தாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்ன செய்யப் போகிறாய்? மேலும், இதுதான் அரசியல், என்று வாயிலேயே வடையை சுட்டுக் கொண்டு, அதை காக்காவிடம் காண்பித்து, காக்காவும் சாப்பிடாமல் ,இவர்கள் சாப்பிட்டு போவது அரசியல் அல்ல.
மேலும், வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் ஜனனமும், மரணமும் தீர்மானிக்கும் இறைவன் பல லட்சம் பிறக்கிறது. பல லட்சம் இறக்கிறது. பிறப்பில் எத்தனையாவது வரிசை…..? என்றும்,
இறப்பில் எத்தனையாவது வரிசை……? என்றும் இறைவன் தீர்மானிக்கும் போது இந்த பூமியில் இந்த உடலை தாங்கி வந்த அனைவரும் வாழ்ந்தவரை மனசாட்சியுடன் ,தெய்வ சிந்தனையுடன், சந்தோஷத்துடன், அன்புடன் வாழ்பவன் ,சிறப்பானவன்…! இந்த சிறப்புக்கு…….? அரசியலில் கொள்ளையடித்து, பட்டம் பதவியை அனுபவித்து வருபவர்கள், தகுதியானவர்களா…..? எதற்கு மக்கள் அவர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும்? அந்த மரியாதைக்கு உரியவர்களாக அவர்கள் இருக்கிறார்களா? இதையாவது சிந்திப்பீர்களா?
மேலும், மரியாதைக்குரியவர்களை மதிக்காமல் வாழ்வது மனிதன் செய்கிற மிகப்பெரிய தவறு. அந்தத் தவறினால் தான், இன்றைய அரசியல் இப்படிப்பட்ட கொடுமைகளை தாங்கி செல்கிறது. இதற்கு யார் காரணம் மக்கள்தான் முதல் குற்றவாளி. இந்த குற்றவாளிக்கு இன்னும் காலம் உண்மையை உணர்த்தவில்லை. அது எதனால்? என்பது மக்களுக்கு இன்னும் புரியவில்லை. புரிந்தால் இவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். காலம் எப்போது இவர்களுக்கு புரிய வைக்கவுமோ! அது காலத்தின் கையில்.
ஆனால் புரிந்தவர்கள், வாழ்க்கை என்றும் சந்தோசம்தான். இதை கண்ணுக்குத் தெரியாத இறைவன் காட்டும் சூட்சுமங்கள் புரிந்து கொள்ள முடிகிறதா? காலம் எல்லாவற்றையும் தெரிந்து, எதைக் கொடுத்தால்? எதை எடுக்கலாம்? எதை எடுத்தால் ,எதை கொடுக்கலாம்? இது எல்லாம் காலத்தின் கையில்……!