நாட்டில் ஊழல்வாதிகளும், கருப்பு பண முதலைகளும், கள்ள நோட்டு பேர் வழிகளும், கூட்டாக சேர்ந்து அம்பத்தி எட்டு 58 மனுக்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பணம் மதிப்பிழப்பு, மீண்டும் 1000, 500 ரூபாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போடப்பட்ட வழக்கு தான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
நாட்டு மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது, நம்பிக்கையான ஒரு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணமிழப்பு நடவடிக்கைக்கு எதிராக, தொடரப்பட்ட இந்த வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, 2016 இல் கள்ள நோட்டுகள், கருப்பு பணம், தீவிரவாதிகள் மூலம் வந்த கள்ளநோட்டுகள், இவை எல்லாம் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
இதை கண்காணிக்க உளவுத்துறை முடக்கி விடப்பட்டது. உளவுத்துறை ரிப்போர்ட் மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிக்கை கொடுத்த நடவடிக்கையின் பெயரில் தான், பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கை எடுத்தார். இதனால் பாதிக்கப்படும் கருப்பு பணம் முதலைகள், கள்ள நோட்டு பேர்வழிகள், தீவிரவாத கும்பல்கள், நாட்டின் பிரிவினைவாத சக்திகள், இவர்களுடன் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து இந்த பண மதிப்பிழப்பு நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு அநீதி அன்று குரல் கொடுத்தனர். ஊடகங்களிலும் இதை பிரச்சாரம் செய்தார்கள். விவாதம் செய்தார்கள். இதனால், ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது என்றெல்லாம், இவர்களுடைய பிரச்சாரம் இருந்தது.
ஆனால் மோடி எதையும் கருத்தில் கொள்ளாமல், அவர் என்ன நினைத்தாரோ அதை செய்து முடித்து விட்டார். இதனால் தலை கவிழ்ந்து போனார்கள். கடைசியில் இதற்கு எப்படியாவது இந்த ஆட்சியின் மீது ஒரு களங்கத்தை ஏற்படுத்த உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கையும் தொடர்ந்து விட்டனர். இந்த வழக்கை 58 பேர் போட்டு உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இதனுடைய தீர்ப்பு நாடே எதிர்பார்த்தது. ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் அமர்வு கொண்ட நீதிமன்ற நீதிபதிகள், அப்துல் நசீர் தலைமையில் டி ஆர் சுவாய் ,ஏ எஸ் கோபண்ணா, வி. சுப்ரமணியன் மற்றும் பி.வி நாகரத்னா ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
இது மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை என்பதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. மேலும் பண மதிப்பிழப்பு நன்கு பரிசளிக்கப்பட்ட முடிவு என்றும், கள்ள நோட்டுகள், பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வது, கருப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பு செய்வோருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை.
மேலும் பண மதிப்பிழப்பு இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக நல்ல பலன்கள் இருந்ததாகவும், இதனால், இதை தோல்வி என்றும் கருத முடியாது என்று தெரிவித்து ,பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்ற ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசனம் இத் தீர்ப்பை நாட்டு மக்கள் நலன் கருதி வெளியிட்டது.