நாட்டில் பணத்திற்காக, பதவிக்காக ,அதிகாரத்திற்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், போலி வாழ்க்கையில் இதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷம் என்று நினைத்து, ஆணவம், கர்வம், அகங்காரம் இதில் தான் மிதந்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுடைய கர்மா அப்படி ஆட்டி வைக்கிறது.
அப்படி ஆட்டம் போட்ட பல ஆட்சியாளர்களில் கடந்த ஆட்சியில் சசிகலா ஒருவர் .எப்படி ஆட்டம் போட்டவர் ?என்று நான் சொல்லி தெரிய வேண்டாம், தமிழக மக்களுக்கே தெரிந்த உண்மை. இன்று கடவுள் நான்கு சுவற்றுக்குள் உட்கார வைத்திருக்கிறார். எந்த சொத்தை பார்க்கிறாரோ, எந்த கட்டிடங்களை பார்க்கிறாரோ, அதையெல்லாம் அடாவடியாக வாங்கி குவித்தார். இறுதியில் பாவத்தின் சம்பளம் ஜெயிலுக்கு அனுப்பி வைத்துவிட்டது.
இது அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் என்று இல்லை. சாமானிய மக்களாக இருந்தாலும், கடவுளுடைய சட்டத்திற்கு எதிராக ஒருவர் வாழ்க்கையில் ஆட்டம் போட்டால், நிச்சயம் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் தண்டனை உறுதி. ஒரு பக்கம் சட்டத்தினால் தண்டிக்கலாம். மற்றொரு பக்கம் நோயினால் தண்டிக்கலாம். இன்னொரு பக்கம் எதிரிகளால் தண்டிக்கலாம். விபத்தால் தண்டிக்கலாம். ஆண்டவன் எந்த ரூபத்தில் தண்டிப்பான் என்று யாருக்குமே தெரியாது.
அதுதான் சொன்னேன், இந்தப் பட்டம், பதவி, அதிகாரம் ,பணம் எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள். மேலும் சில நேரங்களில், பணம் இருக்கும், பொருள் இருக்கும் .ஆனால், நேரத்திற்கு சாப்பிட முடியாது. மேலும்,இப்போது ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மந்திரிகள், சாதாரண பஞ்சாயத்து தலைவர்கள் முதல் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வரை தவறு செய்பவர்கள் .கடவுளின் கணக்கிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. அடுத்து, இவர்கள் போடும் ஆட்டத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. அது சட்டம் தான் தண்டிக்கும் என்று சொல்ல முடியாது.
இவர்களுடைய பிள்ளைகள் கூட, இவர்களுக்கு தண்டனை கொடுப்பார்கள். இவர்களுடைய உறவுகள் கூட, இவர்களுக்கு தண்டனை கொடுப்பார்கள். கணவனுக்கு மனைவி கொடுப்பார், மனைவிக்கு கணவன் கொடுப்பான். ஆகக்கூடிய கணக்கு எல்லாம் ஒன்றுதான். ஒரு மனிதனுக்கு தேவைக்கு மேல் எதையும் அனுபவிக்க முடியாது. அதை பார்த்துவிட்டு தான் போக முடியும். அப்படி இருக்கும் போது, ஏன் இவ்வளவு பேராசை? இது அரசியலில் என்றால், அதிகாரிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். எத்தனையோ ஐஏஎஸ், ஐபிஎஸ் பல கோடிகளை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள்.
இது தவிர, நீதிபதிகள் கடவுளுக்கு சமமானவர்கள் என்று நினைக்கக் கூடியவர்கள் இன்று, அவர்களில் சிலர் நீதியை, பல கோடி கணக்கில் கையோட்டு பெற்று, நீதியை விலை பேசுகிறார்கள். இது எங்க போய் முடியுமோ, என்று அவர்களுக்கு தெரியாது. அந்த பணத்தை வைத்து அவரும் அனுபவிக்க முடியாது. அவர் குடும்பமும் அனுபவிக்க முடியாது. அவர்கள் நிம்மதியாக வாழ முடியாது.
காரணம், நீதிக்கு அதிபதி சனீஸ்வரன் ஒருவருக்கு இந்த கலிகாலத்தில் தண்டனை வழங்குவது அவர்தான். அதனால், அதர்மத்திற்கு அவர் ஒருபோதும் தண்டனை கொடுக்காமல் விட மாட்டார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நவகிரகங்களின் ஆட்சி அவரவர் செய்த பாவத்திற்கும், புண்ணியத்திற்கும் தண்டனை கொடுத்தே தீரும். ஒருவர் போன பிறவியில் செய்த பாவத்திற்கு அல்லது தவறுக்கு இந்த பிறவியில் அனுபவிக்கலாம். இந்த பிறவியில் செய்தது ,அடுத்த பிறவியில் அவர் கணக்கு தொடரலாம். ஆக கூடி கால தேவனின் கணக்கு யாரையும் ஏமாற்றி வாழ்ந்து விட முடியாது.
நீ இந்த பிறவியில் பலசாலி என்றால், அடுத்த பிறவியில் அதே உடம்பு உன்னை நோயாளியாக்கி அல்லது வலிமை இல்லாதவன் ஆக்கி அந்த கணக்கை அது முடிக்கும். நான் இப்போது பெரிய கோடீஸ்வரனாக பெரிய பதவியில், கௌரவத்தில் இருக்கிறேன் என்ற கர்வம் கொண்டால், அடுத்த கட்டம் உனக்கு ஏதோ ஒரு வீழ்ச்சி ஏற்பட போகிறது என்பதற்கான அறிகுறி அது. அதனால் கஷ்டப்படுபவன் தொடர்ந்து அவன் கஷ்டப்பட்டு கொண்டே இருப்பான் என்று ஏளனமாக நினைப்பதே தவறு. அவனுடைய கணக்கு முடிந்தால் அடுத்த கட்டம் ஆண்டவன் அவனுக்கு உரிய உயர்ந்த நிலையை கொடுப்பது யாருக்கும் தெரியாத ஒன்று.
ஒருவனுக்கு ஒரு நீதிபதி சட்டப்படி தண்டனை வழங்கவில்லை என்றால், அவருடைய கணக்கில் அது ஏறிவிடும். அது எப்படி அனுபவிப்பார்? பாவம் செய்தவனுடையஅல்லது தவறு செய்தவனுடைய, பணத்தை வாங்கும் போது, அதனுடைய பங்கு இவருக்கும் உண்டு. இவர் குடும்பத்திற்கு உண்டு. எத்தனையோ நீதிபதி குடும்பங்களில் உள்ளே சென்று பார்த்தல், அவர்களுடைய பாவ கணக்கு அனுபவிப்பது தெரியும்.
இன்று பொதுநல வழக்கு தொடரும் சமூக ஆர்வலர்கள் மீது அபராதம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி சட்ட ஆணையமும், உச்ச நீதிமன்றமும் பரிசீலனை செய்ய வேண்டும். நாட்டு மக்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது நீதிமன்றம் தான். அங்கே நீதி கிடைக்கும் என்று தான் பொதுநல வழக்கு தொடர்கிறார்கள் .அவர்களுக்கு அபராதம் விதிப்பது நீதிமன்றத்திற்கு இது ஒரு அவமானத்தை ஏற்படுத்தாத என்ற கேள்வியை எழுப்பும் பொதுமக்கள் வேதனை, நீதிபதிகளுக்கு தெரியாதா?
நாட்டில் அரசாங்கமும் சரி இல்லை. அதிகாரிகளும் சரியில்லை என்றால் நடுத்தர மக்கள் எங்கே போய் முறையிடுவார்கள்? எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கே இந்த நிலைமை என்றால், மக்களுக்கு எவ்வளவு கொடுமை இருக்கும்? என்பதை சிந்தியுங்கள். அதனால், பொதுநல வழக்கிற்கு நீதிமன்றம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் இருக்க வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது .
மக்களின் பக்கம் தவறு இருந்தால் அதை சொல்லிவிட்டு போங்கள். அரசாங்கத்தின் பக்கம் தவறு இருந்தால் ,அதற்கு நடுநிலை ஆன தீர்ப்பு கொடுத்து விட்டு போங்கள் .இதில் என்ன உங்களுக்கு பிரச்சனை, என்பதுதான் சமூக ஆர்வலர்களின் முக்கிய கேள்வி? ஒருவர் பாதிக்கப்படும் போது தான் நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடுவார்.
அங்கே போய் பொதுநல வழக்கு தொடர்பவர்களுக்கு ஆபராதம் விதிப்பது நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வேலை. இது பற்றி சட்ட வல்லுனர்களும், உச்சநீதிமன்றமும் ,இதற்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தினால் நல்லது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.