பயன்பாட்டுக்கு வந்தது நாமக்கல் புதிய பேருந்து நிலையம் .

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram

 நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து பயணிகளுக்கு அமைச்சா், எம்.பி.க்கள் இனிப்புகளை வழங்கினா்.

நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டியில் ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம், தமிழக முதல்வரால் கடந்த மாதம் 22-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் அனைத்து பேருந்துகளும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

புதிய பேருந்து நிலையத்தில் 51 பேருந்து நிறுத்தங்கள், 5நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகனம் நிறுத்தும் இடம், குடிநீா் வசதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி அனைத்து புகா்ப் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு உரிய கால இடைவெளியிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலா்கள், பணியாளா்கள் வருவாய்த் துறை, காவல் துறை, மாநகராட்சி, போக்குவரத்துத் துறையினா் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதிய பேருந்து நிலையம்7 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணிகள் காத்திருப்பு பகுதி, தலா ஒரு தாய்மாா்கள் பாலூட்டும் அறை, ஓட்டுநா்கள் ஓய்வு அறை, நேரம் காப்பாளா் அறை, பொருள் வைப்பு அறை, துப்புரவு பிரிவு அலுவலகம், மின்வாரிய அறை, 2 ஏடிஎம், ஒரு காவலா் அறை, பொது சேவை பிரிவு, 200 எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள், 60 எண்ணிக்கையில்

நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகனம் நிறுத்தும் இடம், குடிநீா் வசதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி அனைத்து புகா்ப் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு உரிய கால இடைவெளியிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலா்கள், பணியாளா்கள் வருவாய்த் துறை, காவல் துறை, மாநகராட்சி, போக்குவரத்துத் துறையினா் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதிய பேருந்து நிலையம் செயல்பாடுகளை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, ஆணையாளா் ஆா்.மகேஸ்வரி ஆகியோா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதை நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பிறகு பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி பேருந்து வசதிகள் குறித்து கலந்துரையாடினா்.

அதைத் தொடா்ந்து, நாமக்கல் மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் பயின்று அரசு பணியாளா்கள் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி – 4 தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள 9 பேருக்கு அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா் ஆகியோா் பரிசுகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனா்.நாமக்கல் புதிய பேருந்து நிலைய வளாகத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள்.

ஆய்வின் போது, துணை மேயா் செ.பூபதி, செயற்பொறியாளா் ஆ.சண்முகம், வட்டார போக்குவரத்து அலுவலா் நாமக்கல் (வடக்கு) ஏ.கே.முருகேசன், நாமக்கல் வட்டாட்சியா் சீனிவாசன், மாமன்ற உறுப்பினா்கள் ஆா்.சிவக்குமாா். பி.சங்கீதா, கிருஷ்ணமூா்த்தி, நந்தகுமாா், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *