பரந்தூர் விமான நிலையம் வருமா ?வராதா? அக் கிராம மக்களின் மனநிலை என்ன?

அரசியல் இந்தியா உணவு செய்தி சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

பரந்தூர் விமான நிலையம் வருமா ?அல்லது வராதா? என்ற சூழ்நிலையில் தான் இந்த திட்டம் இருந்து வருகிறது .ஒரு பக்கம் அரசு அதற்கான செயல் திட்டத்தை வகுத்து செயல்பட்டாலும், மக்களின் மனநிலை என்ன ?என்பது பற்றி இதுவரை எந்த ஒரு புள்ளி விவரமோ அல்லது கருத்து கேட்பு கூட்டமோ நடத்தவில்லை .

மேலும், இது ஒன்றும் முடியாட்சி அல்ல. அரசர்கள் நினைத்தால், குடிமக்களே ஓரிடத்தில் இருந்து அப்புறப்படுத்தி அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை செயல்படுத்த முடியும். ஆனால், இது மக்களாட்சி     ! இங்கு அது போல் செய்ய முடியாது. மக்கள் இந்த திட்டத்திற்கு ஒத்துக் கொள்கிறார்களா? என்பது மிக மிக முக்கியமானது .அவர்களுடைய மனநிலை என்ன? என்ன விலை கொடுத்தாலும், இந்த மண்ணை விட்டு நாம் அகலக்கூடாது என்பது அவர்களுடைய நோக்கம் .

ஆனால், அரசின் நோக்கம் மக்களுக்கு அதிகப்படியான விலையை கொடுத்து இந்த மண்ணை வாங்கி விட வேண்டும். இது தவிர்த்து, இதில் பல சட்ட ரீதியான பிரச்சனைகள் சந்திக்க வேண்டி உள்ளது. இதற்கு மற்றொரு புறத்தில் அரக்கோணம் ராஜாளியின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ தளம் இதற்கு ஒத்துக் கொள்ள வில்லையாம். ஏனென்றால், நாட்டில் போர் வந்தால், விமானங்களை அதிக அளவில் அங்கிருந்து இயக்க வேண்டி வரும். இதனால் சிக்னல் பிராப்ளம் வரும் என்று, அவர்கள் இந்த விமான நிலையத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

 இது தவிர்த்து, பசுமை தீர்ப்பாயம் நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் தர வேண்டும். இந்த மக்களில் 50 சதவீதத்திற்கு மேல் இந்த திட்டத்திற்கு ஆதரவு தந்தால் மட்டும்தான், இதை செயல் படுத்த முடியும் என்று தெரிவிக்கிறார்கள். மேலும், இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு ஆளும் கட்சியான திமுகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளது. அதில், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டு உள்ளார்.

தவிர, நாட்டில் உள்ள சில சாதி அரசியல் கட்சிகள் ,அந்த சாதி மக்களுக்காக போராடுவது போல் பாவாளா காட்டி, பெட்டி வாங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என தெரிவிக்கிறார்கள். இப்படி ஆளாளுக்கு பரந்தூர் விமான நிலையத்தை வைத்து தனக்கு என்ன ஆதாயம்?

 தனக்கென்ன லாபம்? இது ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்கிறது .இப்படிப்பட்ட பல்வேறு பிரச்சனைகளில், இந்த பரந்தூர் விமான நிலையம் வருமா?

 வராதா? என்பது ஒரு சந்தேகத்திற்கு இடமான நிலையில் தான் இருந்து வருகிறது .மேலும், இங்கே இந்த விமான நிலையத்தின் முழு அதிகாரம் அதானி, அம்பானியா? அல்லது ஸ்டாலின் குடும்பத்தினரா? அல்லது தயாநிதி மாறன் குடும்பத்தினரா? என்று இதன் விவரம் வெளியில் தெரியாதவாறு ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 தவிர ,தற்போது உள்ள திமுக ஆட்சிக்கும், பிஜேபி ஆட்சிக்கும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், அவ்வளவு எளிதில் இந்த விமான நிலையம் வருவதற்கு சாத்தியமில்லை. எனவே, விவசாயிகள் ஒருமித்த குரலில் நின்றார்களானால், அங்கு விமான நிலையம் வருவது மிகவும் கடினம். மேலும் நன்றாக நெல் விளையும் விவசாய பூமியை, விமான நிலையம் அமைப்பது மத்திய- மாநில அரசுகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதனால், ஏழை- நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.

 நீங்கள் பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கினால், அந்த மக்கள் இதுவரை வாழ்ந்த வாழ்வாதாரம், கௌரவம் எல்லாம் பாதிக்கப்படும். ஓரிடத்தில் இருந்து, அவர்கள் இன்னொரு இடத்திற்கு சென்று அந்த மக்கள் சந்தோஷமாக வாழ முடியுமா? இல்லை அந்த சந்தோஷம்தான் உங்களால் கொடுக்க முடியுமா? தவிர, நாட்டில் விவசாயம் அழிந்து வரும் சூழ்நிலையில், விவசாயத்தை காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசின் முக்கிய கடமை.

 அதனால் இந்த விமான நிலையம் இங்கு அமைவதை தவிர்த்து வேறு சில இடங்களுக்கு மாற்றலாம். மேலும், இங்கே அமைக்கப்படும் விமான நிலையத்தால், ஏழை நடுத்தர மக்கள் விமானத்தில் ஏறி பயணம் செய்யப் போகிறார்களா? இந்த திட்டம் வருமா? வராதா? என்ற நிலையில் மாநில அரசு 150 காவலர்களை இந்த கிராமங்களை சுற்றி ஷிப்டு கணக்கில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் அவர்களும் எந்த வேலையும் இல்லாமல் அங்கு அவர்களை அமர்ந்தி, நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை நிலைமையை, மத்திய- மாநில அரசுகள் புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *