ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram
பத்திரிகை துறை எதற்கு? ஏன் ?என்ற கேள்வி ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ளாமல், தங்கள் சுயநல கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று தான் மத்திய மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இருந்து வருகிறார்கள் .
மேலும், தொடர்ந்து இந்த துறையை பற்றி 5 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உண்மைகளை தெரிவித்து வரும் ஒரு பத்திரிகை மக்கள் அதிகாரம் என்று பத்திரிகை உலகத்திற்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும், அந்த உண்மைகள் ஏற்கப்படாமல் அலட்சியப் படுத்தப்படுகிறது. அதனால் தான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது.
எதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டும்? எங்களுக்கான உரிமைகள் பறிக்கப்படும் போது தான் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது. இது தனி மனிதனாக இருந்தாலும் அல்லது ஒரு பத்திரிக்கையாக இருந்தாலும் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்காத போது நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இங்கே மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மேலும்,
கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்கள் அதனுடைய வளர்ச்சிக்கு மட்டும் தான் என்றால், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு ஏன் அவை மறுக்கப்படுகிறது ? ஏழை சொல் எடுபடாது என்ற பழமொழியா? அது தவறு. மக்களுக்காக உண்மைகள் கொண்டு செல்வது, சமூகநலன் சார்ந்த பத்திரிகைகள் தான் அதிகம்.
கார்ப்பரேட் பத்திரிகைகள் அது வியாபார ரீதியாகவும்,அரசியல் கட்சி ரீதியாகவும் ,அவர்கள் சொல்வதற்கு ஏற்றார் போல் அந்த பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கும் . ஏன் நாடாளுமன்றத்தில் இன்று கடந்த ஆட்சியில் போடப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்கு முறை) மசோதா திரும்பப் பெறப்பட்டது? (Broadcasting services regulation bill ) இதில் பிஜேபி அரசு இணைய பயன்பாட்டாளர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் தன்னைச்சையாக இயங்கும் ஊடகவியலாளர்கள் அனுப்பக்கூடிய மற்றும் பெறக்கூடிய காணொளிகள் அதாவது வீடியோ (video) மற்றும் (audio) தன்னுரிமையாக செயல்படுவதை தடை செய்யும் வகையில் இம்மசோதாவில் இடம் பெற்ற வரையறைகள் இருந்துள்ளது.
மேலும், மக்களாட்சி நடக்கின்ற ஒரு நாட்டில் ஊடகங்களை கட்டுப்படுத்த, அதன் மீது ஆதிக்கம் செலுத்துவது, அதிகாரத்துவத்தை நிலை நாட்டுவது, இது எல்லாம் ஏற்க முடியாது. மேலும், என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? தவறான செய்திகள், சமூகத்திற்கு எதிரான செய்திகள், நாட்டுக்கு எதிரான செய்திகள், இதையெல்லாம் ஒழுங்கு முறை ப்படுத்தலாம். அதே போல் குறிப்பிட்ட கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் விளம்பரங்கள் கொடுத்து அவர்களை மட்டுமே ஊக்கி வைப்பது பத்திரிக்கை துறையில் நடக்கின்ற சமூக அநீதி.
இதைத்தொடர்ந்து குரல் கொடுத்து போராடிவரும் ஒரே பத்திரிக்கை மக்கள் அதிகாரம். அதனால் மக்களின் பயன்பாட்டுக்கு எந்தெந்த பத்திரிகைகள்? எந்தெந்த தொலைக்காட்சிகள் சிறப்பாக செயல்படுகிறது ?அதை ஊக்குவிக்க வேண்டும் . அதற்கு தகுதியற்ற பத்திரிகைகளை நடத்தி, மக்களுக்கும், அரசுக்கும் எந்த பயனும் இல்லாத செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு,காப்பீ to பேஸ்ட் பத்திரிகைகளும், அதுவும் பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்வதும், அவர்களும் செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொள்வதும், இவர்களெல்லாம் சேர்ந்து சங்கம் என்று சொல்லிக் கொள்வதும், இந்த சங்கத்தின் அடையாள அட்டைகளை விற்பனை செய்து கொண்டிருப்பதும், பத்திரிக்கை துறையில் உள்ள மிகப்பெரிய அவலம். இதைக் கட்டுப்படுத்துங்கள்.இதை எல்லாம் சரி செய்யுங்கள்.
நாட்டுக்கு தேவையான பத்திரிகைகளுக்கு ஊக்கமளியுங்கள். அப்போதுதான் மக்களுக்கு சமூக நீதியும், சுதந்திரமும் அவர்களுடைய குரல்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்து, அதன் பிரச்சனைகள் சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்கள் என்பதை உணர்ந்து செயல்படுவது அவசியம். தவறுகளை சரி செய்து கொள்வது அவசியம் .இப்படிப்பட்ட நல்ல ஒழுங்குமுறை மசோதாவை கொண்டு வாருங்கள்.இதையெல்லாம் ஒழுங்கு படுத்துங்கள் .
அதை விட்டுவிட்டு ,உங்களுடைய தவறுகளை மறைப்பதற்கு, உங்களுடைய செயல்பாடுகளை புகழ் பாடுவதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும், பத்திரிக்கை தேவை என்றால்! அது சுயநலம். இப்படி சுயநலத்திற்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறது .சில கார்ப்பரேட் தொலைக்காட்சி, பத்திரிகைகள் அதற்கு மட்டுமே மக்களின் வரி பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது. இதை இதுவரை எந்த சிறிய பத்திரிக்கையோ அல்லது வார, மாத ,தினசரி பத்திரிகையோ வெளிப்படுத்தவில்லை. இந்த உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை .
மேலும் ,பத்திரிக்கை பொது நலத்திற்கானது. சமூக நலத்திற்கான அந்த நோக்கத்தில் பத்திரிகையை பாருங்கள். அதற்கு எந்தெந்த பத்திரிகை தகுதியானது? என்பதை நடுநிலையோடு தேர்வு செய்யுங்கள். அதை விட்டுவிட்டு பத்திரிகையை ஆதிக்கம் செலுத்த அதிகாரத்தால், கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டங்களை இயற்றுவது, மக்களாட்சிக்கு ஏற்புடையதல்ல. எனவே, பத்திரிக்கை துறையை பொதுநலத்திற்காகவும், பத்திரிகையின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், நாட்டுக்காகவும், சமூகத்திற்காகவும். தீமைகளை களை எடுக்கும் சக்தியாகவும், சமூக மாற்றத்திற்கான ஒரு சக்தியாகவும், பத்திரிகையை பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு உங்களுக்காக பத்திரிக்கை என்றால், அது பத்திரிக்கையாக இருக்காது.மேலும் ,
பத்திரிக்கை என்பது கார்ப்பரேட் ப்ராடக்ட் (corporate product) அல்ல , அதனால் அதனுடைய தரம் ,தகுதி பெயரிலோ அல்லது லேபிலிலோ இல்லை . உண்மை, நேர்மை,வெளிப்படுத்தத் தன்மை கொண்ட கருத்துக்களில், செய்திகளில், இந்த தேசத்தின் நன்மையிலும், சமூக நலனில் அக்கறையிலும் கொண்ட பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் மத்திய மாநில அரசாங்கமும், மக்களும் கொடுக்க முன் வர வேண்டும் . அப்படி தகுதி உள்ள பத்திரிகைகள் எத்தனை? என்பதை அரசாங்கம் பட்டியலிடுங்கள்.
அது வியாபார நோக்கமா? அரசியல் கட்சி சார்ந்த நோக்கமா? எது? என்பதை நடுநிலையோடு நீதிபதிகள் குழுக்கள் தீர்மானிக்க வேண்டும் .மேலும், வியாபார பொய்களைச் சொன்னால் மக்கள் அதிக அளவில் நம்புகிறார்கள். நல்ல விஷயங்கள், நல்ல கருத்துக்கள் அதற்கு குறைவாக தான் மக்கள் பார்க்கிறார்கள். தவிர, மக்கள் தவறை சுட்டிக்காட்டுவது தான் பத்திரிகைகளின் கடமை. ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுவது தான் பத்திரிகைகளின் கடமை. அரசியல் கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவது தான் பத்திரிகைகளின் கடமை.
இவையெல்லாம் எங்கள் சுயநலத்திற்காக நீங்கள் மறைக்க வேண்டும். எங்கள் சுயநலத்திற்காக, எங்களுக்கு முக்கியத்துவம் அளித்து விளம்பரப்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் இருந்து வருகிறது .இதற்குத்தான் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தில் சலுகை விளம்பரங்களா?மேலும், போலி ஆடிட் ரிப்போர்ட் கணக்குகளை கொடுத்துவிட்டு, பொய்யான சர்குலேஷன் கணக்கு காட்டிவிட்டு, மத்திய மாநில அரசுகளை ஏமாற்றி இந்த சலுகை ,விளம்பரங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் பத்திரிகைகளை நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்தினால் செய்தித் துறையில் எத்தனை அதிகாரிகள் மாட்டுவார்களோ?எத்தனை பத்திரிகைகள் மாற்றுவார்களோ?இதை நீதிபதிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால்! இன்று நீதித்துறையும், பத்திரிக்கை துறையும் இல்லாவிட்டால் ,நாட்டில் மக்களாட்சி இல்லை .எனவே, இந்த பத்திரிகையின் சமூக அவலங்களை வெளிப்படுத்த தகுதி இல்லாமல் இருந்து வரும் பத்திரிகைகள் சமூகத்திற்கு எதற்கு? மேலும், இதையெல்லாம் மத்திய அரசு கொண்டு வந்த ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) யை சரியாக அதை மத்திய அரசு கொண்டுவராமல், சுயநலமாக கொண்டு வந்து விட்டு, தற்போது திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அதில் தோல்வி அடைந்து விட்டது.