நாட்டில் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிரூபிக்கும் வகையில், மாநிலங்கள் அவையில் பாஜக எம் பி சுசீல்குமார் மோடி இதனை தெரிவித்துள்ளார். இது நாட்டு மக்களுக்கு சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கை உறுதிப்படுத்துகிறது.
மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்ல ,நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் தங்கள் சொத்து பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட வேண்டும். இது தவிர, பாஜக எம் பி சுசில் குமார் மோடி நாட்டில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றனர். அதுபோல, உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளும் ,தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் .இதற்காக உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.
மேலும், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தங்கள் சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கனவே அமுலில் உள்ளது. இது தவிர, வெற்றி பெற்ற பிறகு மக்கள் பிரதிநிதிகள், தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகின்றனர் .மேலும், நாட்டில் வாக்காளர்களுக்கு எப்படி எம்பி, எம்எல்ஏக்களின் சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள உரிமை உள்ளதோ, அதேபோல நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் மனுதாரர்களுக்கும், நீதிபதிகளின் சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள உரிமை உள்ளது.இதனை நடைமுறைப்படுத்தினால் நீதித்துறை மீது மக்களின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
தவிர, கடந்த 1997 ஆம் ஆண்டு நீதிபதிகள் தங்கள் சொத்து விவரத்தை வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற முழு அமர்வு கூறியது. ஆனால், பின்னர் இது கட்டாயம் இல்லை .விருப்பத்தின் பேரில் நீதிபதிகள் சொத்து விவரத்தை வெளியிடலாம் என்று நீதிமன்றம் கூறிவிட்டது.
இருப்பினும்,உச்ச நீதிமன்ற இணையதளத்தில் ,இது தொடர்பாக தகவலை நான் தேடிய போது 1918 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீதிபதிகள் யாரும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டியது இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால் ஓரிரு நீதிபதிகள் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர் என்று பேசினார். மேலும், நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடுவது அவசியம் ஆனது. அப்போதுதான் சட்டத்தின் மீது, நீதிமன்றத்தின் மீது, மக்களுக்கு நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும் .