ஜூன் 14, 2024 • Makkal Adhikaram
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கண்பார்வை இழந்து தனது 74 வயதிலும் மட்பாண்டங்களை செய்து வரும் குரு சாமி தன்னுடைய 14 வது வயதில் கண்பார்வை இழந்து சுமார் 60 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகிறார். அவரைப் பார்த்தாவது அரசியல் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்வார்களா ?
உழைப்பை கேவலமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் நாட்டில் 75 சதவீதம் உள்ளனர் .இவர்கள் அரசியல் கட்சிகளில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டும் வரை உழைப்பு என்பது தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவாது. என்று எந்த தொழிலோ, படிப்போ, கல்வி அறிவோ, எதுவுமே இல்லாமல் வாய் பேச்சு வீரர்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள்.அதுவும் உடம்பை காட்டும் வேலையும், இது ரெண்டு இருந்தால் அரசியலுக்கு போதும் என்று நினைக்கிறார்கள் .
இதை பார்த்து மக்கள் அரசியல் என்றால் என்ன? என்று தெரியாது. அதனால் இவர்கள் பேசும் ஊடகப் பொய்களும், உண்மை என்று நம்பி இன்று வரை ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் அரசியல் கட்சித் தலைவர்கள், தேர்தல் பிரச்சாரங்களில் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். மற்றொரு பக்கம், இவர்கள் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே, என்று தங்கள் கொள்கையை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பட்ட ஒரு கேவலமான அரசியல், தமிழ்நாட்டில் அரசியல் தெரியாத முட்டாள்களிடம் ,இவர்கள் பேசிக்கொண்டு வலம் வருவது வாடிக்கையாகிவிட்டது.
இதிலிருந்து மக்கள் எப்படி அரசியலை படித்து, உண்மைகளை புரிந்து இவர்களிடம் ஏமாறாமல் தங்கள் வாழ்க்கைக்கான முன்னேற்றத்தை இந்த அரசியலில் இருந்து எப்படி தேர்வு செய்யப் போகிறார்கள்? என்பது தான் இக்கால கட்டத்தில் அரசியல் மிக, மிக ஆபத்தான ஒன்றாக உள்ளது. படிப்பு அறிவு இல்லாத காலத்தில், மக்களிடம் போலி வேஷங்கள் இல்லை. ஏமாற்றும் வேலையும் இல்லை. இப்பொழுது எந்த தொழில் நடக்கிறதோ இல்லையோ, நாட்டில் டாஸ்மாக் மற்றும் ஏமாற்று வேலை துரிதமாக நடக்கிறது .
போலி கௌரவத்திற்காக மக்கள் ஆசைப்படுகிறார்கள். போலி கௌரவம் அது ஒருபோதும் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்காது. சொந்த பந்தம் கூட அரசியல் கட்சிகளால் மக்கள் பிரிந்து கிடக்கிறார்கள். அது மட்டுமல்ல, தங்களுடைய சொந்த வாழ்க்கை பிரச்சனைகளால், சொத்து பிரச்சனைகளால் உறவுகள் காணாமல் போகிறது. இவை அனைத்துக்கும் காரணம் மக்கள் உண்மைக்கு,உழைப்புக்கு, நேர்மைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் போலியான வாழ்க்கையில் சுகத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள் .அது ஒரு காலம் சந்தோஷத்தை தராது.
மேலும், அரசியலில் உண்மையாக உழைத்து மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக செயல்பட்டால் ,நிச்சயம் அதற்கான மதிப்பு, மரியாதை உங்களைத் தேடி வரும். ஆனால், வேற்று பந்தா காட்டிக் கொண்டு, காரில் வலம் வந்து கொண்டு, கொடியை கட்டிக்கொண்டு போவதில் எந்த பெருமையும் இல்லை .