பாவத்தின் கல்லறைக்கு  பல வழி !என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி !

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மனித பிறவி மட்டும்தான் பேச முடியும். மற்ற பிறவிகளில் பேச முடியாது. பறவைகள், மிருகங்கள், கடல் வாழ் உயிரினங்கள், இவை அனைத்தும் இயற்கையின் படைப்பில் உயிரினங்களே!  இவைகளுக்கு ஐந்தறிவு .

ஆனால், மனிதனுக்கு மட்டும் ஆறறிவு படைத்த இறைவன் ,இந்த ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் ஐந்தறிவு ஜீவன்களாகவே வாழ்ந்து விட்டுப் போகின்ற கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாப்பிட தெரியும். மலம் கழிக்க தெரியும். ஏதோ ஒரு வேலைக்கு போய் பணம் சம்பாதிக்க தெரியும் .அவ்வளவுதான் .ஆடு, மாடு, மிருகங்களைப் போல் வாழ்ந்து விட்டு போகின்ற கூட்டமாக தான் இன்றைய மனித வாழ்க்கை.

அவைளாவது பழகி விட்டால் பாசத்துடன் இருக்கும் .அவைகளுக்கு ஏமாற்றத் தெரியாது .ஆனால், இந்த ஐந்து அறிவுக் கூட்டம் பழகினாலும் ஏமாற்றும். தெரிந்ததெல்லாம் பணம், பதவி, என்ற ஒரு போதை. இந்த போதையை தவிர குடிபோதை. இப்படி போதையே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இதில் காரில் போனால் என்ன? ஆட்டோவில் போனால் என்ன? பைக்கில் போனால் என்ன? எல்லாம் ஒன்றுதான் .இவர்கள் கட்சி கொடி பிடித்தால் என்ன? பிடிக்காமல் போனால் என்ன? கோஷம் போட்டால் என்ன? போடாமல் போனால் என்ன? வாழும்போது ஒரு மனிதன் எப்படி வாழ்கிறான்?

வாழ்ந்த பிறகு, அவன் போகும்போது எவ்வாறு பேசப்படுகிறான்? அதன் பிறகு, அவன் பாவத்தின் கணக்கு? புண்ணியத்தின் கணக்கு? அதன்படி இயற்கையின் கணக்கு .ஆகக் கூடி பிறவி என்பது ஒரு கணக்கு. இந்த கணக்கிற்குள் மனித வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது. கணக்கு முடிந்தால் இங்கே யாரும் இருக்க முடியாது .இங்கே நான் பெரிய ஆள் ,நீ பெரிய ஆள் எதுவும் கிடையாது. எல்லாம் ஒரு ஏமாற்றம்தான். என்னிடம் இவ்வளவு கூட்டம் இருக்கிறது .நான் சொன்னால் 100 பேர் வருவான். என்னிடம் பல கோடிகள் இருக்கிறது.

 நான் சட்டத்தை விலைக்கு வாங்குவேன். ஒருவனை அழித்து விடுவேன். இப்படி எல்லாம் ஒரு தவறான கற்பனையில், எனக்கு பின்னால் கட்சி இருக்கிறது. அந்த பலத்தை வைத்து நான் என்ன செய்கிறேன்? பார் என்று சவால் விட்டுக் கொண்டிருக்கும் முட்டாள்கள், எல்லாம் பாவம் என்ற கல்லறைக்கு வழி தேடிக் கொண்டிருப்பவர்கள் .இந்த கணக்கு இவர்களுக்கு புரியாது .புரிந்தவர்களுக்கு புரியும் .

மேலும், தமிழ்நாட்டில் சினிமா மாயையால் உருவான அரசியல் .அந்த அரசியலும் மாயையாக தான் இருக்கிறது. நிழல் எப்படி நிஜமாக முடியும்? அதுபோல்தான், தமிழ்நாட்டில் 1965க்கு பிறகு திமுக, அதிமுக அரசியல் நிழல் அரசியலாகவே இருந்து வருகிறது. பேசுவது,நடிப்பது, காட்சி பார்ப்பது அது எதில் என்றால் , கார்ப்பரேட் தொலைக்காட்சி ,பத்திரிக்கை இதுதான் இந்த அரசியல். நாங்கள் எல்லாம் இந்த நாட்டில் செய்தது எவ்வளவோ என்று சொல்வார்கள். இந்த எம்எல்ஏ, எம்பி, மந்திரிகள் இவர்கள் சொல்வது போல் வளர்ச்சி என் பாதையில் தமிழ்நாடு என்று பேசுகிறார்கள். தமிழ்நாடு வளர்ச்சி அடைந்ததை விட 100 மடங்கு இவர்களுடைய வளர்ச்சி தான் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.

 அதாவது இவர்களுடைய கட்சி மந்திரி, எம்எல்ஏ, எம்பிக்கள் ,உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இப்படி தான் சுயநல கூட்டமாக இவர்களை பார்க்க முடியும். ஆனால் ,பொதுநலத்திற்கு வந்தவர்கள் 1965 க்கு முன்னால் இருந்த அரசியல் என்ன ? என்பது தற்போதுள்ள மக்களுக்கு தெரியாது. அது தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரியும். அப்போது யாரெல்லாம் பொது வாழ்க்கைக்கு வந்தார்களோ, அவர்களுடைய குடும்பங்கள் எல்லாம் நலிந்து ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டார்கள். ஆனால், இப்போது பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் பொது சொத்துக்களை பங்கு போட்டு ,வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு தான் வருகிறார்கள்.

இவர்கள் நினைப்பு எல்லாம் நாம் ஓட்டுக்கு பணம் கொடுத்தோம் ,அதற்கு பலனாக பொது சொத்துக்களை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஓட்டுக்கு பணம் கொடுத்தோம் ,அதிகாரத்தில், ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறோம். ஓட்டுக்கு பணம் கொடுத்தோம், நாம்  எத்தனை கோடிகளை சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவும் கொள்ளையடிக்க ,நமக்கு தகுதி, திறமை உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கொள்ளையடித்த பணத்தில் யார் சந்தோஷமாக, நிறைவாக வாழ்கிறார்கள்?  ஒருவரை காட்டுங்கள் பார்க்கலாம் ? ஒருவரும் இருக்க மாட்டீர்கள்.

 இது தவிர, நீதியை விலைக்கு வாங்குவது, சட்டத்தின் ஓட்டைகளில் எப்படி தப்பிப்பது?  கடவுள் கல்லாய் இருக்கிறான் .அவனுக்கு எதுவும் தெரியாது. இப்படி எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த முட்டாள் கூட்டம், பாவத்தின் கல்லறைக்கு பல வழி என்று தெரியாது.

இந்த பாவ கூட்டங்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை கொடுக்காமல், சட்டத்தின் ஓட்டையில் இருந்து தப்பித்துக் கொள்ள வழிவிடும் நீதிபதிகளுக்கு, துணை போகும் அதிகாரிகளுக்கு பாவத்தின் கல்லறையில் அவர்களுக்கு பக்கத்தில் இடம் உண்டு.

 இது தவிர, கோயில் உண்டியலில் கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் பணத்தை கடவுளுக்கு லஞ்சமாக கொடுத்துவிட்டு, தப்பித்துக் கொள்ளலாம் என்ற ஒரு குருட்டு கணக்கும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ,ஒருவரும் இறைவனுடைய கணக்கிலிருந்து தப்பிக்க முடியாது .

அவன் உன்னுடைய லஞ்சத்திற்கு, நீ அடித்த கொள்ளைக்கு கடவுள் ஒருபோதும் பங்கு கேட்க மாட்டார். அந்தப் பாவத்தின் பங்கு கணக்கை நீயே எடுத்துக்கொள், எனக்கு வேண்டாம் என்று சொல்லி உன்னையும் ,உன் குடும்பத்தையும், அனுபவிக்க வைப்பார் இதுதான் பாவத்தின் கல்லறைக்கு பல வழி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *