பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு செய்தித்துறை மற்றும் மீன்வளத்துறை மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்தும் அதை வீணாக்கிய – எல் முருகன் . அமைச்சர் பதவிகளை கொடுப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல ,மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தை அவர்கள் மனதில் ஆணித்தரமாக இருக்க வேண்டும்.
அதிலும், ஒரு பட்டியல இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவியை பிரதமர் மோடி கொடுத்திருப்பது போராட்ட வேண்டிய விஷயம் என்றாலும், இதுவரை இந்த பொறுப்பு மிக்க பதவியில் இருந்து கொண்டு என்ன செய்தார்? என்று தான் தெரியவில்லை. மேலும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் பலமுறை இவருக்கு போன் செய்து அப்பாயின்மென்ட் கேட்டால் சரியான பதில் இல்லை. எதற்காக? ஒரு பத்திரிகை ஆசிரியர் இவரிடம் பேச அப்பாயின்மென்ட் கேட்பார்? இதை அவருடைய உதவியாளராவது அதை தெரிவித்து இருக்க வேண்டும்.அல்லது மத்திய அரசின் செய்தி துறை அதிகாரிகள் ஆவது அமைச்சர் முருகன் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்.
மேலும், ஒரு பத்திரிக்கை நடத்துவது ,அதனுடைய சிரமங்கள், கஷ்ட நஷ்டங்கள் பற்றி விளக்குவதற்காக தான் இவருக்கு பலமுறை போன் செய்ததுண்டு. ஆனால், அலட்சியமாக இருப்பவர்கள் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள்? என்பதை மோடி தான் இனி வரும் காலங்களில் தீர்மானிக்க வேண்டும்.
மேலும், பிஜேபி தமிழ்நாட்டில் வளர்க்க வேண்டும், வளர வேண்டும், என்று நீங்களும் அமித்ஷாவும் மட்டும் நினைத்துக் கொண்டிருந்தால் போதாது .அதற்கான வேலைகளை நிர்வாகிகள் மக்களிடத்தில் நெருங்கி பணியாற்ற வேண்டும். அது இல்லை. ஆனால் வெறும் ஊடகங்களிலே இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். பத்திரிகை நடத்தும் எங்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலைமை இருக்கும்? என்பதை பிரதமர் மோடி தான் இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், ஒரு மத்திய அமைச்சர் அதுவும் தமிழ்நாட்டில் செய்தித் துறையில் இருக்கும் போது, இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்த்து பல செய்திகளை இணையதளத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிட்டு வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் ,இவர் எடுக்கவில்லை .
மந்திரி பதவி என்பது ரிப்பன் கட் பண்றதுக்கும், மேடையில் அரசியல் பேசி விட்டு போவதற்கும், மக்களிடத்தில் ஷோ காட்டுவதற்கும் அல்ல. மக்களின் பிரச்சினைகளைப் பற்றியும், செயல் திட்டங்களைப் பற்றியும், குறை நிறைகளை பற்றியும் ,நடவடிக்கை எடுப்பதற்கு தான் மந்திரி பதவி என்பதை புரிந்து கொண்டால் சரி .மேலும்,
புகார் அனுப்பினால் தான் நான் பார்ப்பேன். பத்திரிகைகளில் வெளியிடும் செய்திகளில் அலட்சியம் செய்வோம் என்கிறீர்களா? தவிர, மாநில அரசுதான் சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்றால், மத்திய அரசு கூடவா அப்படி இருக்கும்?
மேலும், இப்ப பிரச்சனையை பிரதமர் மோடியின் கவனத்திற்கு அல்லது அமித் ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றாலே நிச்சயம் இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்களுக்கு உண்டு . எனவே ,பொறுப்பு கொடுத்த பிரதமர் மோடியின் நம்பிக்கையை வீணடித்துக் கொண்டிருக்கும் அமைச்சராக செயல்படுகிறார் எல்.முருகன்.
இச் செய்தியாவது பிரதமர் மோடிக்கு மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கொண்டு செல்வார்களா ? என்பது தமிழக சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கை.