ஆகஸ்ட் 19, 2024 • Makkal Adhikaram
தமிழக அரசு தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா, ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறுவதால், அவருக்கு பதிலாக புதிதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இருந்தவரை பொதுமக்களை சந்தித்ததில்லை. ஏன்? எங்களைப் போன்ற சிறு பத்திரிக்கையாளர்களைக் கூட சந்தித்ததில்லை. மக்களை சந்திக்காமல் உயர் அதிகாரிகள் இருக்கக் கூடாது. ஏனென்றால்! இவர்கள் பெரும்பாலும் அமைச்சர்கள் ,மாவட்ட ஆட்சியர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இவர்களை மட்டும் தான் வழக்கமாக சந்திப்பதை வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதுதான் தலைமைச் செயலாளருடைய வேலையா ?
எத்தனையோ சமூக ஆர்வலர்கள் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அரசியல் கட்சியினருடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகள் சமூக நலனுக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏன் சந்திக்கக் கூடாது? சந்தித்தால் தானே உண்மை தெரியும். என்ன பிரச்சனை? என்று அதற்கு தீர்வு காண முடியும்? அதனால், புதிய தலைமைச் செயலாளர் சமூக நலனில் அக்கறை கொண்டு எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளையும், சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளையும் என்ன என்று கேட்க வேண்டும்.
அப்போதுதான் நாட்டில் என்ன நடக்கிறது? என்பது உண்மை தெரியும். கார்ப்பரேட் பத்திரிகைகள் மேலே சொன்ன எம் பி, எம் எல் ஏ, மந்திரி,அரசியல் கட்சிகள், இவர்களுக்கான பத்திரிகைகள்.ஆனால்,
அடித்தட்டு மக்களுக்கான பத்திரிகைகள் சமூக நலன் பத்திரிகைகள் தான் என்பதை புரிந்து இதற்கான தீர்வு என்ன? என்பதை மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடி வருகிறது. இதைப்பற்றி புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவரின் கவனத்திற்கு, செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதன் கொண்டு சென்று தீர்வு காண்பாரா?