இந்த பெண்மணி சமூக அக்கறையுடன் பேசியிருப்பது ,சமூக வலைதளத்தில் மக்கள் மத்தியில் சில உண்மைகளை அது பிரதிபலிக்கிறது.
இப்படிப்பட்ட பல பெண்கள் இந்த சமூக குற்றங்களுக்கு எதிராக பேசும்போது, நிச்சயம் மாற்றங்கள் கொண்டுவர முடியும். அதற்கு அரசியல் தேவையில்லை. இது போன்ற நல்ல சிந்தனை உள்ள பெண்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால், நிச்சயம் சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும்.
இவர்கள் சொல்வது போல், நமக்கு நாமே என்ற வார்த்தை மிக முக்கியத்துவமானது. நமக்கு நாமே நம்மை காப்பாற்றிக் கொள்ள, நமக்கு நாமே இன்று சிந்திக்கவில்லை என்றால், நம் குடும்பம், கணவன், மனைவி, குழந்தைகள் நிச்சயம் இந்த மதுவால் பாதிக்கப்படும். அப்படிப்பட்ட இந்த மதுவை அரசாங்கம் மக்களிடத்தில் ஊக்குவிக்கிறது. அவர்களை சிந்திக்க விடாமல் செய்கிறது. இதற்கு பின்னால் ஒரு சதியும் இருக்கிறது.
அந்த சதி என்ன? என்றால் இவர்கள் சொல்வது போல், மது போதைக்கு அடிமையானவன், வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க முடியாது. அவன் உழைக்கும் திறனற்றவனாகி விடுகிறான். மேலும், திருமணத்திற்கு முன்பே குடிக்கும் இளைஞர்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் பயப்படுகிறார்கள். இவை எல்லாம் சமூக பாதிப்பு என்பது அரசாங்கத்திற்கு தெரியாதா?
SPOT FINE RS : 10,000/-
மேலும், கணவன் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்கவில்லை என்றால், அந்த குடும்பம் வறுமையில் வாடும். மனைவி வேலைக்கு சென்றால், இரண்டு பேருக்கும் தகராறுகள் ஏற்படுகிறது. அப்படி கணவன் மனைவிக்குள் தகராறு, பிரச்சனைகள் ஏற்பட்டு பல குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறது. இதற்கு முக்கிய காரணமான மதுவை ஏன் அரசாங்கம் எடுக்கக் கூடாது? மேலும், இந்த பணத்தை வைத்து அரசாங்கத்தை நடத்துவது, மக்களுக்கான திட்டத்தை செயல்படுத்துவது, அறிவார்ந்த மக்கள் ஒருபோதும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
(கல்யாணத்திலும் குடிக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தார்கள் இரண்டு குடும்பத்திலும் சண்டை ஏற்படுத்தவா? எவ்வளவு சமூக அக்கறை? திமுக அரசுக்கு, பெண்கள் தான் சிந்திக்க வேண்டும்.)
தவிர, தற்போது ஒரு சமூகமாக இருந்தாலும், ஒரு குடும்பமாக இருந்தாலும், இன்றைய அரசியல் மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும். இது போன்ற பெண்கள் பெண்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனென்றால், இவர்கள்தான் தேர்தல் நேரத்தில் இந்த மகளிர் குழுக்களுக்கு அரசியல் கட்சியினர் மறைமுகமாக பணம் பட்டுவாடா செய்து விடுகிறார்கள்.
மேலும் அவர்கள் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் பிள்ளைகளைப் பற்றியும் சிந்திக்காமல் யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அந்த அரசியல் கட்சிக்கு இவர்கள் வாக்களிக்கிறார்கள் இது இவர்கள் செய்கின்ற மிகப்பெரிய தவறு அதனால் தான் நாட்டில் ஊழல்வாதிகள் ரவுடிகள் வன்முறையாளர்கள் மீண்டும் மீண்டும் அரசியலில் தேர்வு செய்யப்படுகிறார்கள் இது பெண்கள் அனைவரும் மகளே குழுக்களில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று.
அதனால், முதலில் பெண்கள் திருந்த வேண்டும். பணம் கொடுத்தால் முதலில் வாங்கிக் கொள்வது அவர்களாக இருக்கிறார்கள் .அவர்கள் வறுமைக்காக வாங்கினாலும், அதை அவர்களுடைய கணவன் மற்றும் பிள்ளைகள் கொண்டு போய் டாஸ்மாக் கடையில் தான் கொடுத்து விடுகிறார்கள். அதனால் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பெண்கள் தான் முதலில் குரல் கொடுக்க வேண்டும். பெண்கள்தான் இந்த சமூகத்தில் காப்பாற்றப்பட வேண்டும். அவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் இதற்கான ஒரு தீர்வை நீங்கள் கொண்டுவர முடியும். நீங்கள் நிணைத்தால், அது முடியாத காரியம் இல்லை.
பெண்கள் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால், நிச்சயம் கலாச்சாரம் சீரழிந்து விடும். அதனால், உங்களை நீங்களே பாதுகாத்துக் கொண்டால் தான் இந்த அதிகார அரசியல் சூழ்ச்சியிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால், இந்த அரசாங்கம் ஒருபோதும் உங்களை வாயிலே தான் காப்பாற்றிக் கொண்டிருக்குமே தவிர, அதை ஒருபோதும் செயல்படுத்தாது. உண்மையை சிந்தித்து வாழ்ந்தால் மட்டுமே இப்படிப்பட்ட அரசியலில் இருந்து தப்பிக்க முடியும். பெண்கள் தவறுகளை தட்டிக் கேட்டால், சரித்திர மாற்றங்கள் உருவாக்க முடியும்.