சிவராத்திரி என்பது மாதா மாதம் வரும் சிவ ராத்திரியில் மகா சிவராத்திரி. இது சிவனின் அருளுக்கு முக்கியத்துவம் பெற்ற ஒரு சிவராத்திரி தான் மகா சிவராத்திரி.
இந்த மகா சிவராத்திரியில் பல யுகங்களில் நடைபெற்ற சம்பவம் இன்றைய புராண வரலாறுகள் கூறுகின்றன. அதாவது இந்த மகா சிவராத்திரியில் விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் ஏற்பட்ட மோதலில் சிவனின் அடிமுடியை காண இருவரும் போட்டி போடும் போது ,தோல்வியை தழுவுகிறார்கள்.
அதேபோல் மார்க்கண்டேயனுக்காக சிவன் எமனை காலால் எட்டி உதைத்த சம்பவமும், இந்த சிவராத்திரி தான். பார்வதி தேவிக்கு தன் இடபாகத்தை அளித்ததும், இந்த சிவராத்திரி தான்.
இப்படி பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக நமது இந்து புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த மகா சிவராத்திரி நேரத்தில் கண்விழித்து சிவனின் நான்கு கால பூஜையை பார்ப்பவர்கள் சிவனின் அருள் என்றும் உண்டு.
இந்த மகா சிவராத்திரியில் மகான்கள், சித்தர்கள், யோகிகள் எல்லோரும் சிவனின் அம்சமாக விளங்குகிறார்கள். அவர்களுடைய அருள் ஆசியை பெறுவதற்கு பக்தர்கள், ஆன்மீக பற்றாளர்கள், பொதுமக்கள் ,அதிகாரிகள், நீதிபதிகள் அரசியல் பிரமுகர்கள், ஆட்சியாளர்கள் என பலர் இன்று அவர்களுடைய தரிசனத்தை காண விரும்பி செல்கிறார்கள் .மேலும்,
இந்தியா முழுவதும் உள்ள மகான்கள், யோகிகள் இந்த சிவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் கருங்குழி யோகி ஸ்ரீ ரகோத்தமன் சுவாமிகள் நடத்திய சிவராத்திரி பூஜையில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல, மேலும்,பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த மகா சிவராத்திரியின்,
ஒவ்வொரு பூஜையும் ஐதீகமாக நடைபெற்றது .இந்த பூஜையில் யோகி ரகோத்தமன் ஸ்வாமிக்கு நாண்கு கால பூஜை நடைபெற்றது போல, ஞான லிங்கத்திற்கும் நாண்கு கால பூஜை நடைபெற்றது . பூஜையை முடித்த ரகோத்தமன் சாமி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் நிகழ்ச்சியும், சிறப்பாக நடைபெற்றது.
இந்த அருளாசி வழங்கும் நிகழ்ச்சியில், ஜார்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி எம். கற்பக விநாயகம் கலந்து கொண்டு, ஆன்மீக உரையை ஒரு பத்து நிமிடம் நடத்தினார். அதில் ரத்தின சுருக்கமாக இந்த ஆன்மீக கருத்துக்களை அடுக்கு மொழியாக பேசினார். நானும் முதலில் ஜட்ஜ் என்ன பேசப் போகிறார்? என்று நினைத்தேன்.
ஆனால் இதுவரையில் எந்த ஜட்ஜியும் பேச முடியாது என்ற அளவிற்கு அவருடைய கருத்துக்கள் அதில் இடம்பெற்று இருந்தது. அதாவது அன்பு என்றால் இறைவன், இறைவன் என்றால் கருணை, கொடை இந்த எல்லை இல்லாத கொடையை வழங்குபவர்கள் தான் மகான்கள். இந்த மகானின் உத்தரவுக்காக தான் டெல்லியில் இருந்து பல வேலைகளை ஒதுக்கி விட்டு இவருடைய தரிசனத்தை காண்பதற்காக வந்திருக்கிறேன்.
அந்த வேலை எல்லாம் தள்ளிப் போடலாம் ஆனால், இவருடைய உத்தரவை தள்ளி போட முடியாது என்றார்.மேலும், நான் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்த அலுப்பு கூட இப்போது தெரியவில்லை. அது இந்த இடத்தில் வைப்ரேஷன். தவிர,ஆலயம் என்பது ஆன்மா! அது எந்த இடத்தில் லைக்கிறதோ, அதுதான் ஆலயம். அன்பு தான் இறைவன், நீங்கள் இறைவன் மேல் வைத்திருக்கும் அன்பை விட, இறைவன் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு தான் மிகப்பெரியது.
மேலும் அன்புக்கு அழகு அறிவு. அறிவுக்கு அழகு படிப்பு. படிப்புக்கு அழகு பட்டம், பட்டத்திற்கு அழகு வேலை. வேலைக்கு அழகு ஊதியம், ஊதியத்திற்கு அழகு செழிப்பு, செழிப்புக்கு அழகு செல்வம், செல்வத்திற்கு அழகு, கொடை, கருணை. கருணைக்கு அழகு அருள். அருளுக்கு அழகு ஆண்டவன், இப்படி அவருடைய இந்த கருத்தின் மூலம் ஆன்மீக அர்த்தத்தை, வாழ்க்கையின் உண்மையின் நிலை என்ன? என்பதை இறுதிவரை அதை மிக சுருக்கமாக தெரிவித்துவிட்டார். இதிலே எல்லா கருத்துக்களும் அடங்கி விட்டது. ஒரு மகான் சொல்ல வேண்டிய கருத்து நீதிபதி சொல்லிவிட்டார்.
இதை நான் ஆச்சரியமாகத்தான் பார்த்தேன். அவ்வளவு கருத்துக்கள் மிக எளிமையாக புரியும் படி மக்களுக்கு சொல்லி விட்டு சென்றார். இதுதான் நம் வாழ்க்கையின் பயணமோ …..! மேலும் இந்த விழாவின் கதாநாயகனான ரகோத்தமன் ஸ்வாமி, வந்திருந்த அவருடைய பக்தர்களுக்கு ஏழை, பணக்காரன், ஜாதி ,மத, பேதம் இன்றி, ஆண் பெண் பாகுபாடு இன்றி,எல்லோரையும் அரவணைத்து அன்பு காட்டி அருளாசி வழங்கி, போது, அத்தனை ஆத்மாக்களும் மகிழ்ச்சியில் திளைத்தது. அதுதான் சுவாமியின் ரகசியம். சுவாமி இந்த நிகழ்ச்சியில் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும்? யாருக்கு என்ன சொல்ல வேண்டும்> யாரை எப்படி கவுரவப்படுத்த வேண்டும்? எல்லாவற்றையும் சரியான முறையில், திரைக்கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம் செய்து முடித்தார். அவருக்கு நிகர் அவரே …… !