மக்கள் அதிகாரம் பத்திரிகையின் செய்திக்கு முக்கியத்துவம் அளித்து ஜிஎஸ்டியை நீக்கிய மத்திய அரசுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள் .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 09, 2024 • Makkal Adhikaram

சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஜிஎஸ்டி தற்போது போடப்பட்டது .அது குறித்து எமது பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு இருந்தோம் .அச்செய்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் செய்தி துறை இணைய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.மேலும், அச் செய்தியில் ஜி எஸ் டி குறித்த விளக்கத்தை தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன். அதனால், இந்த பத்திரிகைகளுக்கு ஜிஎஸ்டி மத்திய அரசு நீக்கி உள்ளது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று .

ஏனென்றால், இன்று பத்திரிகை நடத்துவது ஒரு சாதாரண காரியம் அல்ல. கருப்பு பணத்தை வைத்துக் கொண்டு இருப்பவர்கள் தான் பத்திரிகை நடத்துகிறார்கள். சாமானிய மக்கள் பத்திரிக்கை நடத்த வேண்டும் என்றால் சமூகத்தில் எவ்வளவு போராட வேண்டி இருக்கும்? ஒரு பக்கம் பணம்,மற்றொரு பக்கம் அரசியல், மற்றொரு பக்கம் சமூகம், இதை எல்லாம் தாண்டி அந்த பத்திரிகை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குள் ஒவ்வொருவருக்கும் அந்த வலியும், வேதனையும் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.

இது பற்றி பலமுறை மத்திய அரசுக்கு, மாநில அரசுக்கு, தொடர்ந்து மக்கள் அதிகாரம் சார்பில் தெரிவித்து வருகிறேன். இங்கு பத்திரிக்கை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம் பத்திரிக்கைக்கு வந்து பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலபேர் அடையாள அட்டை தான் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி பத்திரிக்கை, இந்த சமூக நலனுக்காக நடத்த வேண்டி இருக்கிறது என்றால், அதற்காக எவ்வளவு நாங்கள் உழைக்க வேண்டியிருக்கிறது? அந்த உழைப்புக்கு, உண்மைக்கு மரியாதை இல்லை என்றால்! இந்த பத்திரிக்கை துறையில் சமூக நீதி தேவைப்படுகிறது.

அதற்காக நீதிமன்றத்தை சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். ஏனென்றால் இது ஒரு நாள் வேதனை அல்ல, பல ஆண்டுகள் வேதனை. அந்த வேதனைக்கு ஒரு விடியலை தேடி தான் நீதிமன்றம் செல்ல வேண்டி உள்ளது. பத்திரிக்கை என்றால் சில பேருக்கு கேவலமாக இருக்கிறது. சில பேருக்கு இதுதான் பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருக்காக பத்திரிகை நடத்துவது என்று தெரியாமல் கூட பத்திரிகைகள் இன்று நான் தான், பெரிய பத்திரிக்கை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்க ஆதரவு இருப்பதால் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால், இந்த பத்திரிகையால் என்ன பயன்? என்பது தான் மக்கள் சொல்ல வேண்டும். அந்த மக்கள் எழுத்துக்கூட்டி படிக்கிற மக்களாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு எழுத்துக்கூட்டி படித்துவிட்டு, இதுதான் பத்திரிக்கை என்று போய்விடுவார்கள். அதனால், பத்திரிகையை படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள், அவர்கள் சொல்ல வேண்டும். எது பத்திரிகை என்று? மக்களில் பல வகை உண்டு. யானையை குருடன் தடவிப் பார்த்த கதையாக தான் இன்றைய பத்திரிகைகள் இருந்து வருகிறது.

 இதைப் பற்றி மத்திய மாநில அரசின் செய்தித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவில்லை .அவர்களுடைய வேலை என்ன என்றால்? அவர்களை விளம்பரப்படுத்துவது, அப்படி விளம்பரப்படுத்தும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு மட்டும் தான் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது .

இதில், அதற்கு ஒரு விதிமுறை என்னவென்றால், தினசரி பத்திரிக்கை மற்றும் அதன் சர்குலேஷன் இது எல்லாமே பத்திரிக்கை துறையில் உள்ள ஒரு தவறான விதிமுறை.இப்போது அந்த சர்குலேஷனும் ஒரு தவறான ரிப்போர்ட் தான், பத்திரிகைகள் கொடுத்துக் கொண்டு சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, இதற்கு கொடுக்கின்ற அதிகாரிகள் பதில் சொல்வார்கள்.

 நீ எதைப் போட்டாலும் தினசரி பேப்பரில் அது செய்தியா? அல்லது அந்த செய்தியால் மக்களுக்கு சொல்லும் உண்மை என்ன? அதன் பயன் என்ன? தேவையில்லாத குப்பை செய்திகளை எல்லாம் போட்டுவிட்டு, நானும் பத்திரிகை ,நானும் அக்கர்டேஷன் கார்டு இதையெல்லாம் பத்திரிக்கை துறையில் மாற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள் .அந்த தவறான விதிமுறைகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து பல்லாயிரம் கோடி மத்திய, மாநில அரசின் நிதி வீணடிக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாது .

 தகுதியான பத்திரிகைகள் விஷயம் தெரிந்தவர்களாக, சாமானிய பத்திரிகைகள் சமூக நன்மைக்காக நடத்தும் போது, இந்த ஒரு அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கவில்லை என்றால், நாங்கள் எப்படி, மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்வது? எங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது. எங்கள் பத்திரிகைகளுக்கான வளர்ச்சி மறுக்கப்படுகிறது . இதைத்தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து மத்திய, மாநில அரசுக்கு இந்த உண்மையை வெளிப்படுத்தி வருகிறது .

பத்திரிக்கை என்பது இந்த தேச நலன், சமூக நலன், மக்கள் நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு தான் மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால், வியாபார நோக்கமும், அரசியல் கட்சி நோக்கமும், கொண்ட பத்திரிகைகளுக்கு மத்திய மாநில அரசின் நிதியை மக்கள் வரி பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் வீணடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று . இதைத் தெளிவாக எமது பத்திரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம் .மேலும்,

ஒன்ஸ் ஜிஎஸ்டிக்குள் வந்து விட்டால், யாராக இருந்தாலும் மாசம், மாசம் ஜிஎஸ்டி கணக்கு ஆன்லைனில் ஏற்றி ஆக வேண்டும். அப்படி ஏற்ற வில்லை என்றால், அதற்கான அபராத தொகை கட்டி ஆக வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் ஜிஎஸ்டி குள் இருக்கிறது . வருமானம் இருப்பவர்கள் கட்டலாம். வருமானம் இல்லாமலே ஜி எஸ் டி செலவை எப்படி ஏற்பது? என்பதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வேதனையாக இருந்தது. மேலும்,இந்த பத்திரிகை நடத்துவது பெரிய பிரச்சினையாக இருக்கும்போது, இதை வேற ஒரு ஆடிட் ரிப்போர்ட் மாத, மாதம் அனுப்புவது எப்படி? எங்களுக்கு மிகப்பெரிய சுமை தான். 

அதற்கு மத்திய அரசு எமது செய்திக்கு முக்கியத்துவம் அளித்து, ஜி எஸ் டி ஐ நீக்கியதற்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *