மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் ஆன்லைன் மீடியா செய்தி எதிரொலியாக தற்போது தமிழக அரசு பஞ்சாயத்து செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் கொண்டு வந்துள்ளதற்கு கிராம மக்கள் சார்பில் மக்கள் அதிகாரம் பத்திரிகை பாராட்டு.

தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆன்லைன் மீடியாவில் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, இன்று தமிழக முழுதும் ஊராட்சி மன்ற செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கான உத்தரவு அந்தந்த மாவட்டங்களில் போடப்பட்டுள்ளது .அதிலும் குறிப்பாக 10 ஆண்டு காலம் ஒரே இடத்தில் பணியாற்றிய ஊராட்சி செயலாளர்களுக்கு உடனடியாக பணியிட மாற்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மிகவும் கிராம பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 156 பேருக்கு இந்த பணியிட மாறுதல் பாடப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு பணியிடமாறுதல் இனி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, இவர்களுக்கு 

இந்த பணியிட மாறுதல் தொடரும். இது ஒரு சரியான கிராம பஞ்சாயத்தை ஒழுங்குபடுத்தும் உத்தரவு. ஏனெனில், இவர்கள் சொந்த கிராமங்களிலும், பக்கத்து கிராமங்களிலும் வேலை செய்தது போல் ,10 ,15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்திற்கு செல்லும் போது வேலை செய்ய முடியாது.காரணம் அந்த கிராமத்தில் இவர்களுக்கு எல்லாம் புதிது. அங்கு தவறு செய்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு அல்லது DRDA

  வுக்கோ புகார் அனுப்பி விடுவார்கள். இங்கு அனுப்ப முடியாது .

ஏனென்றால், அந்த கிராமத்திற்கு மிகவும் தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள். அதனால், இங்கு அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கும் .அங்கு அது இருக்காது. அதேபோல் பஞ்சாயத்து தலைவர்களிடமும் ,இவர்கள் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆலோசனை கொடுத்தாலும், முதல் விசாரணை பஞ்சாயத்து செயலாளர்களுக்கு தான் வரும்.இது தவிர, இன்னும் கொஞ்சம் காலங்களில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும், விரைவில் 

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் செய்தி எதிரொலியாக ஆன்லைன் கொண்டுவரப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இது மக்கள் அதிகாரம் பத்திரிகைக்கு தொடர்ந்து ஆறாண்டு கால  போராட்டத்தின் வெற்றி. தவிர,பஞ்சாயத்து கணக்கு வழக்குகள் அனைத்தும் மக்களின் பார்வைக்கு ஆன்லைனில் கொண்டு வர வேண்டும். 

அப்போதுதான், இந்த துறையை நியாயமான முறையில் வெளிப்படையான நிர்வாகத்தை கிராம மக்களுக்கு கொடுக்க முடியும். இதை செய்ய வைத்தது மத்திய அரசு மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் அனைவருக்கும்,மேலும், இதற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட தலைமைச் செயலக ஊராட்சிகள் செயலாளர் அமுதா ஐ ஏ எஸ்.அவர்களுக்கும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் மனதார தமிழக கிராம மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்து, கிராம மக்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து அளிக்கிறது. 

தவிர, கிராமங்களில் எவ்வளவு சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் இவர்களுடன் போராடி இருக்கிறார்கள்? அவர்களுக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிகை இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து அளிக்கிறது. மேலும், https//:egramswaraj.gov.in என்ற இணையதளத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதை மாநில அரசு செயல்படுத்தவில்லை என்பது மிக மிக கேவலம். ஆட்சி நிர்வாகம் மக்களுக்கானதா? இல்லை அரசியல் கட்சிகளுக்கானதா? என்பது தெரியவில்லை. அதிகாரிகள் மக்களுக்காக பணியாற்றுகிறார்களா? இல்லை அரசியல் கட்சிகாரர்களுக்கு எடுப்பு வேலை செய்கிறார்களா? சம்பளம் வாங்குவது மக்களுடைய வரிப்பணத்தில், வேலை செய்வது அரசியல்கட்சிகளின் எடுபிடிகளுக்கு, இதையெல்லாம் சமூக ஆர்வலர்களும், சட்டம் தெரிந்தவர்களும், விவரமானவர்களும், பத்திரிகையாளர்களும், கேள்வி கேட்கும் போது, அதிகாரிகளுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. 

ஏனென்றால் அவர்கள் கட்சிக்காரர்கள் மூலம் லாபம் அடைவார்கள். மக்கள் பிரதிநிதி மூலம் லாபம் அடைவார்கள். அந்த லாபம் சமூக ஆர்வலர்கள் மூலமும், விவரம் தெரிந்தவர்கள் மூலமும், சமுக நன்மைக்கான பத்திரிகையாளர்கள் மூலமும் அடைய முடியாது.. மேலும்,இதை சரி செய்ய தமிழக அரசின் ஊராட்சிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக உயர் அதிகாரிகள் ஆன்லைன் வரவு செலவு கணக்குகள் ,பொதுமக்கள் எளிதில் பார்த்து தெரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு இந்த இணையதளத்தை விரைவில் கொண்டு வர வேண்டும்.நாம் இன்று இந்த இணையதளத்தின் முகவரியில் உள்ள சென்றால், எந்த மாநிலம்? எந்த மாவட்டம்? எந்த ஒன்றியம்? எந்த ஊராட்சி? இதுவரை தான் காண்பிக்கிறது. இதற்கு மேல் அது திறக்கவில்லை. இதை எல்லாம் பூட்டி வைத்து விட்டார்களா? அல்லது செயல்படாமல் ஆக்கிவிட்டார்களா? மேலும் 

எந்தெந்த காரணங்களுக்காக எவ்வளவு ரூபாய் ?எந்த தேதியில் எடுக்கப்பட்டுள்ள செலவு எவ்வளவு? இது தவிர, எந்தெந்த திட்டங்கள் மூலம் இந்த கிராமத்தில் எந்தெந்த வேலைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது? எந்தெந்த வேலைகளுக்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது? அதற்கான எஸ்டிமேட் தொகை எவ்வளவு? அதனுடைய ஒப்பந்ததாரர் யார்? அவர் பெயர் என்ன? எத்தனை நாட்களில் அவர் பணியினை முடிக்க வேண்டும்? அதனுடைய மதிப்பீடு எவ்வளவு? தொகை மற்றும் எத்தனை ஆண்டுகளுக்கு மக்களின் பயன்பாட்டுக்கு வரும்? 

இது போன்ற பல விவரங்கள், தெளிவாக மக்கள் பார்க்கும் அளவிற்கு ஒவ்வொரு மாதமும் முடிந்ததும் ,அதனுடைய வரவு செலவு கணக்கு மறு மாதத்தின் 10 நாட்களுக்குள் அதை அப்டேட் செய்ய வேண்டும். இங்கு அந்த இணையதளமே திறக்காத அளவிற்கு முடக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி? இந்த வரவு செலவு கணக்குகளை மக்களின் பார்வைக்கு, துல்லியமாக வெளிப்படையாக இவர்கள் கொண்டு வருவார்கள்? – கிராம மக்கள் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *