
குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான புகைப்பட கண்காட்சியை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் தொடங்கி வைத்தார் .அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் மக்கள் நல்வாழ்வு திட்டங்களால் மாணவ மாணவியர்கள் பயன்பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வாழ்க்கையில் தொடர் முயற்சிகள் மூலம் சவால்களை எதிர் கொண்டு லட்சியங்களை எட்ட வேண்டும் என்றார். மேலும், இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர் மன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் பேசும்போது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போல மாணவர்கள் தங்கள் எதிர்கால கனவுகள் குறித்து கனவு காண வேண்டும் என்றும், தங்கள் நேரத்தை வீணாக்காமல் மென்மேலும் வாழ்க்கையில் உயர பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தவிர, நமது நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இளைஞர்கள் என்று கூறிய அவர், பல மேற்கத்திய நாடுகளில் நமது இளைஞர்கள் சாதனை படைத்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் இந் நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய மத்திய மக்கள் தொடர்பு சென்னை மண்டல இயக்குனர் ஜே காமராஜ் பேசும்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பொறுத்து நல திட்டங்கள் செயல்படுத்த இயலும். மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்கள் மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவை மகளிர் நல திட்டங்கள், கல்வி உதவி திட்டங்கள், சுகாதார திட்டங்கள், வங்கிக் கடன் திட்டங்கள், ஆகியவை மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும், வாழ்க்கைக்கான இலக்குகளையும் முயற்சிகளை மாணவ மாணவியர் கைவிடக்கூடாது என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சி. தண்டபாணி, அஞ்சலக கண்காணிப்பாளர் மாதேஸ்வரன், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் மத்திய மக்கள் தொடர்பு அலுவலர்கள் எஸ் முரளி ,எம் ஜெயகணேஷ், அருண்குமார் உள்ளிட்டோர் சிறப்பாக அமைத்துள்ளனர்.
%20(1)%20(1).jpg)