எதிர்க்கட்சிகள் பிஜேபியின் எதிரணி ஒட்டு மொத்தமாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. நாட்டில் இனக் கலவரம் ,ஜாதி கலவரம் ,மதக் கலவரம், இவை எல்லாம் ஒரு அரசியல் பின்னணியில் நடக்கின்ற சம்பவம்.
இங்கே எதிர் கட்சிகள், எதிரி கட்சிகளாக தான் உலா வருகிறது. ஒரு பக்கம் இந்த எதிர்க்கட்சிகளையும் ,ஊழல்வாதிகளையும் ஆதரிக்கின்ற ஊடகங்கள், ஒட்டுமொத்தமாக இதிலே இறங்கி, பிஜேபியை விமர்சித்து, கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கேவலமான ஒரு செயலாகத்தான் நடுநிலைப் பார்வையாளர்கள் இதை பேசுகின்றனர்.
குறை என்பது எங்கிருந்து வருகிறது? எந்த பக்கம் வருகிறது? எதிலிருந்து ஆரம்பித்திருக்கிறது ?இதை தான் நடுநிலையான ஊடகங்கள் பேச வேண்டும். இந்த இனக் கலவரத்திற்கு பின்னால் அரசியலா ?அல்லது சமூக விரோத கும்பலா? இந்தப் பின்னணியில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதை எந்த அரசாங்கமும் உடனே தடுத்து நிறுத்தி இருக்க முடியுமா? என்ற கேள்வி தான் எழுகிறது.
எல்லாமே திட்டமிட்டு நடத்தப்படுகின்ற சதியில் சட்டம் கடுமையாக இல்லை. கடுமையான சட்டங்கள் இல்லாதவரை நாட்டில் சமூக விரோத கும்பல்கள், அரசியல் பின்னணி கொண்ட சமூக விரோத கும்பல்கள், நாட்டில் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கும் . நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமில்லை ஆளுக்கு ஒரு கருத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் விடுதலை கொடுத்து, இவர்களை தப்பிக்க சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டத்தின் ஓட்டைகள் இருக்கும் வரை, நாட்டில் இது போன்ற இனக்கலவரங்கள், ஜாதி கலவரங்கள், மதக்கலவரங்கள் இருந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு பிஜேபியும் மற்ற அரசியல் கட்சிகளும், இந்த சம்பவத்தை பேசிக்கொண்டு, ஊடகங்களும் அதை விமர்சித்துக் கொண்டு,அரசியல் செய்து கொண்டிருப்பார்களே தவிர,
இதற்கான ஒரே தீர்வு, நாட்டில் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் மட்டுமே! அதுவரை நாட்டில் வலிமையானவன், எளியவனை வீழ்த்துவது தொடர் கதையாக தான் இருக்கும். தற்போது இதையெல்லாம் ஊடகங்கள் சுயலாபத்திற்காக பேசிக்கொண்டு தான் இருக்கும் உண்மை சிந்தித்தால் மட்டும் தான் மக்களுக்கு புரியும்.