மே 06, 2025 • Makkal Adhikaram

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஜாதிக்கும் பட்டப்பெயர்களை சொல்லாமல், அந்தந்த ஜாதிக்கான பெயர்களை சொன்னால் மட்டுமே, உண்மையான ஜாதிகளின் மக்கள் தொகை? எவ்வளவு என்பதை நாட்டில் தீர்மானிக்க முடியும்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பற்றி அதில் அரசாங்கம் தீர்மானிக்க முடியும். இங்கே வன்னியர் சமுதாயத்தில் ஜாதி அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தொடர்ந்து வன்னியர்களுக்கு எதிராக தான் இட ஒதுக்கீடு பிரச்சனையில் உள்ளடி வேலைகளை செய்து வருகிறது என்கிறார்கள் சமூகப் பற்றாளர்கள். அதாவது இவர்கள்

40 வருஷத்துக்கு மேலாக இவர்கள் இட ஒதுக்கீடு போராளிகளாக வன்னிய சமுதாயத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த 10. 5 சதவீதம் இதை எப்போதோ கருணாநிதியும், ஜெயலலிதாவும் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்கள். அப்போது இந்த ராமதாஸ்! சமுதாயத்திற்கு தேவை இல்லை. எங்களுக்கு மந்திரி பதவியும், பணமும் கொடுங்கள் என்று வாங்கிவிட்டார். அப்போது ஏமாந்தது தான் இந்த சமுதாயம் இன்னும் இவர்களிடம் தொடர்ந்து ஏமாறாது.

தவிர, ஸ்டாலின் இந்த சட்டத்தை எப்போதோ அமுல்படுத்தி இருக்கலாம். ஆனால், அது மற்ற சமூகங்களின் தலையிட்டால், அதை நிராகரித்து விட்டார். இப்படிப்பட்ட ஸ்டாலினுடன் வன்னிய சமுதாயத்தை பலிகடா ஆக்க, ராமதாஸ் வருகின்ற 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர துடியாய் துடைக்கிறாராம். இதில் அப்பன் ஒரு பக்கம் பிள்ளை ஒரு பக்கம் எங்கே இந்த நாடகம்? வன்னியர் சமுதாயம் இவர்களிடமிருந்து விழித்துக் கொண்டது. மேலும்,

இப்போது கூட, 10. 5 சதவீத இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பத்தி 68 & 73 ல் குறிப்பிட்டபடி இதை அந்தந்த மாநிலத்தில் சட்டமன்றத்திலே இந்த இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஒரு பக்கம் இதை நிறைவேற்ற ஸ்டாலினுக்கு அறிக்கை விட்டுவிட்டு, இன்னொரு பக்கம் 115 சாதிக்கும் இட ஒதுக்கீடு, சமூக நீதி தேவை என்று அறிக்கை விடும் திறமைசாலி ராமதாஸ். ஆகக் கூடி இந்த ஆளுக்கு தான் இந்த ஏமாற்று வித்தை எல்லாம் தெரியும் என்று பேசிக் கொண்டிருக்கிறான் என்கிறார்கள் வன்னிய சமூக பற்றாளர்கள்.மேலும்,

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இதற்காக முயற்சி எடுத்து எடப்பாடியை 10. 5 சதவீதம் இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அதை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது.மேலும், சமுதாயத்தின் ஓட்டுக்காக எதிர்பார்த்து செய்தால், அது அரசியல். ஆனால், எதிர்பார்ப்பு இல்லாமல் செய்தால் சமூகத்தின் மீதுள்ள பற்று. அந்தப் பற்றாளர்களுக்கு நிச்சயம் சமுதாயம் நன்றி கடன் பட்டுள்ளது.

ஆனால் ராமதாஸும், அவரது கூட்டமும் எதிர்பார்ப்புக்காகவே இந்த சமுதாயத்தை வைத்திருப்பவர்கள். அதனால் இவர்கள் யார் என்பது தெரியாமல் கூலிக்கு மாரடைக்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் வேண்டுமானால் வன்னியர் சமூகத்தை ஏமாற்றி, இவரை தலைவராக கொண்டாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் சமுதாயத்தில், அரசியல் தெரிந்தவர்கள், விவரமானவர்கள் ராமதாசை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது கூட என்னிடம் சிலர் தெரிவித்திருக்கிறார்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், அதில் கூட இந்த தெலுங்கர்கள் ,நாயக்கர், பட்டம் வாங்கி, இதிலே உள்ளே வர முயற்சிக்கிறார்கள் என்று பேசி வருகின்றனர்.
பட்டம் வேறு, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி வேறு, ஒவ்வொரு ஊரிலும், நகரங்களிலும், மாவட்டங்களிலும், இவர்களுக்கு தனித்,தனி பட்டங்கள் உண்டு. அது படையாட்சி, கவுண்டர், நாயக்கர், ரெட்டியார் இதற்கும் வன்னிய குல சத்திரியர் என்ற ஜாதிக்கும், பட்டத்தை வைத்து ஏமாற்று வேலை செய்ய மற்ற சமூகங்கள் காத்திருப்பதாக தகவல் .
அதனால், வன்னியர் சமுதாயம்! மத்திய அரசு இப்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த இருப்பதால், வன்னிய குல சத்திரியர் என்ற ஜாதியின் அடையாளம் மட்டுமே சொல்ல வேண்டும். மேலும், கணக்கெடுப்பின் போது பட்டப் பெயர்களை சொல்லிவிட்டால், உங்களை வேறு ஜாதி பட்டியலில் கொண்டு சேர்த்து விடுவார்கள்.
அதனால், சமூகம் !கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கணக்கெடுப்பின்போது, தங்களுடைய வன்னிய குல சத்திரியர் என்ற ஜாதிப் பெயரை மட்டுமே அவசியம் தெரிவிக்க வேண்டும்,. இல்லையென்றால், உங்களுடைய ஜாதி வேறு ,ஒரு பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து விடுவார்கள் .
அதற்கும் திமுக போன்ற அரசியல் கட்சிகளும், சில ஜாதிகளும் மறைமுக வேலை பார்ப்பதாக தகவல் .அதனால், வன்னியர் சமுதாயத்தில் இதை தெரிந்தவர்கள், தெரியாதவர்களுக்கு புரிய வைத்து, கணக்கெடுப்பின்போது வன்னிய குல சத்திரியர் என்ற பெயரை மட்டும் சொல்ல வேண்டும் என்று இந்த சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.