நாட்டில் இன்று இன்டர்நெட் சேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக மக்களின் வாழ்க்கையில் இருந்து வருகிறது. அதனால் மத்திய ,மாநில அரசுகள் டிஜிட்டல் மாற்றம், பொதுமக்கள் அரசாங்கத்துடன் எவ்வாறு ஈடுபட வேண்டும்? அதன் மூலம் மக்களுக்கான நன்மைகள், சேவைகள் ,எதிர்பார்ப்புகள் போன்றவற்றை நிறைவேற்ற தகவல் மற்றும் வெளிப்படையான தகவல்கள் அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
அதேபோல் செய்தி துறையில், பத்திரிகையின் டிஜிட்டல் மற்றும் ஏன் கொண்டு வரவில்லை ?அதற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கவில்லை? இன்று பத்திரிகை வாங்கி படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால் ,இன்றும் பல அதற்கு தகுதி இல்லாத தினசரி பத்திரிகைகளுக்கு கூட, மாநில அரசின் அக்ரடேஷன் கார்டு,பஸ் பாஸ், விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த செய்திகளை மக்கள் படிக்கிறார்களா ?அல்லது தினமும் பத்தாயிரம் பிரதிகளை அடிக்கிறார்களா?
ஆனால், ஆடிட் ரிப்போர்ட் மட்டும் எல்லா பத்திரிகையும் கொடுத்து, இந்த சலுகை, விளம்பரங்கள் வாங்கிக் கொள்கிறது .இதனால், பல கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
இதற்கு இன்று வரை மத்திய ,மாநில அரசுகள் தவறான அரசு விதிகளையே பயன்படுத்தி வருகிறது. இது பற்றி சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ,இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், மத்திய, மாநில செய்தித் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எப்பொழுது பத்திரிக்கை துறையில் அரசியல் உள்ளே வந்து விட்டதோ, அப்போதே நான்காவது தூண் என்பது ஆட்சியாளர்களின் அதிகாரம் வரம்புக்குள் கொண்டு வந்து விட்டனர்.
சட்டம் இருந்தும் பத்திரிக்கை துறை மக்கள் நலனுக்காக பயன்படாமல் ,ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காக, அரசியல் கட்சிகளின் சுயநலத்திற்காக ,பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பல பத்திரிகையாளர்கள் தங்கள் வேதனை குமுறல்களை தெரிவித்து வருகின்றனர் .