இயற்கையைப் பாதுகாப்பது என்பது எதிர்கால தலை முறையைப் பாதுகாப்பது. இதை ஆட்சியாளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?- இயற்கை பாதுகாவலர்கள்.🌱🌳

நாட்டில் ஏற்பட்டிருக்கும் எல். நீனோ வெப்பநிலை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து, இயற்கை வளமான காடுகளையும், மலைகளையும் அழிப்பது, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது.

மனித வாழ்க்கை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், உடனடியாக மலைகளையும், காடுகளையும், பாதுகாத்தே ஆக வேண்டும் . இயற்கையின் பேரிடர் மேலாண்மை என்று ஒரு துறையை ஏற்படுத்தி , இயற்கை கோபத்தில் அழிக்கும் போது, மக்களை காப்பாற்றுவது முடியாத காரியம்.
மேலும், மனிதன் இயற்கையோடு போட்டி போட முடியாது. இந்த செய்திகள் பலமுறை மத்திய, மாநில அரசுக்கு எடுத்துரைத்தும் ,இன்றும் அலட்சியமாகவே, இருக்கிறார்கள். தற்போது வெயில் என்பது மிக மிக கொடுமையாக இருக்கிறது. மழை என்பது அது வாழ வைப்பதற்காக வருகிறதா ?இல்லை அழிப்பதற்காக வருகிறதா? என்பது தெரியாமல் இருக்கிறது.

இது தவிர, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது. இதில் எல்லாம் இருந்து இந்த மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால், உடனடியாக மலைகளில் இருந்து வெட்ட கூடிய கனிம வளங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மேலும்,ஒருவன் காட்டுக்குள் பங்களா கட்டி சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, புலி வரும் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான் .ஒருநாள் அந்த புலி வரும்போது அவனை கொன்று விடுகிறது. அப்போது அவன் சொகுசாக வாழ்ந்த பங்களாவை அனுபவிக்க முடியாமல் இறையாகிறான்.
இதே நிலைமைதான், என்னதான் சொகுசான வாழ்க்கைக்கு இது எல்லாம் தேவைப்பட்டாலும், இயற்கையை அழித்து வாழும் போது, காட்டுக்குள் வாழ்கின்ற மனிதன் கதை தான். இன்று பல்வேறு நாடுகளில் ஏற்படுகின்ற இயற்கையின் எதிர்ப்பு என்ன என்று ஆய்வு செய்து பாருங்கள்? அப்போதாவது இந்த உண்மை சுற்றுச்சூழல் ,ஆய்வாளர்களுக்கு புரியுமா? இல்லை மத்திய, மாநில அரசின் ஆட்சியாளர்களுக்கு புரியுமா?

மேலும்,அங்கும் இதே நிலைமைதான், இயற்கையை அழித்து ,மனிதன் சொகுசு வாழ்க்கைக்கு போகும் போது, இயற்கை மொத்தமாக அழித்து விடுகிறது. அதனால், மலைகளில் வீடு கட்டுவது, மலைகளை அழித்து, சாலைகளை அமைப்பது, காடுகளை அழித்து, கனிம வளத்தை சுரண்டுவது, அதை எல்லாம் உடனடியாக மத்திய, மாநில அரசு நிறுத்தப்பட வேண்டும்.
தற்போது கொடைக்கானலில் அதிகரித்து வரும் கட்டிடங்களால் நிலச்சரிவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதனால், வரும் மழை காலங்களில், நிலச்சரிவு ஏற்பட்டால்,இயற்கை பேரிடர் மேலாண்மை 28 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வந்த பிறகு அணை போடும் வேலை .அதனால், வெள்ளம் வருவதற்கு முன் அணை போட்டால் தான், தடுக்க முடியும். இது அரசுக்கு தெரியாதா? எனவே,

அதை பாதுகாக்க என்ன வழியோ , அதற்காக ஒரு தனி துறை உருவாக்க வேண்டும். தற்போது இருக்கின்ற சுற்றுச்சூழல் துறை இயற்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில் லை. என்பது இயற்கை பாதுகாப்பு சமூக அலுவலர்களின் முக்கிய குற்றச்சாட்டு.மேலும்,

இது பார்ப்பதற்கு இந்த செய்தி அல்லது படிப்பதற்கு அலட்சியமாக கூட இருக்கலாம் .ஆனால், இயற்கையின் கோபத்திற்கு மக்கள் ஆளாகும் போது, அப்போது ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு பேர் செத்து மடிந்தார்கள்? என்பதை கணக்கெடுத்து பத்திரிக்கையில் எழுதுவதை விட , முக்கியமானது , அவர்களை காப்பாற்றுவது, அதுவே பத்திரிகையின் முக்கிய கடமை.