மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு செயல்திட்டங்களை அரசு நிறுவனங்கள் மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தின் அவசியம்.
மேலும் இதற்காக மத்திய அரசின் ஊடக நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மா அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மேலும், அரசு நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஊடக ஒளிபரப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற போது, இதன் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மா அண்ணாதுரை, சென்னை நகர அஞ்சல் கோட்ட தலைவர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டு, பல்வேறு மக்கள் தொடர்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .
மேலும், அரசு நிறுவனங்கள் தங்களைப் பற்றிய சிறு வீடியோ செய்தியை சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்துவதன் மூலம் அரசின் நல திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர். இது தவிர, அரசியல் ஊடக நிறுவனங்கள் சமூக வலைதளங்கள் தொழில்நுட்பம் ஆகியவற்றை மக்கள் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தி கொள்வது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், மத்திய மக்கள் தொடர்பகத்தின் மக்கள் தொடர்பு கண்காட்சிகள் மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டு வருவதாகவும், அதில் பங்கேற்று மக்கள் நல திட்டங்களை ஊரகப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கூடுதல் தலைமை இயக்குனர் அனுப்பி விடுத்துள்ளார் .
மேலும் இந்த கூட்டத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி அகில இந்திய மாணவன் கல்பாக்கம் அனுமின் நிலையம் பாரத ஸ்டேட் வங்கி தமிழ்நாடு காசநோய் தடுப்பு பிரிவு பாதுகாப்புத்துறை சிஎஸ்ஐஆர் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.