மனிதனை மனிதனாக மாற்றுவதும், தெய்வமாக மாற்றுவதும், ஆன்மீக தவத்தின் இறைநிலை .

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மனிதனின் வாழ்க்கை கர்மா என்ற ஒரு கோட்டுக்குள் தான் நின்று கொண்டிருக்கிறது. பிறப்பின் ரகசியம், ஆன்மீக வாழ்க்கை வாழ்வதால் மட்டும் தான் உணர முடியும். அப்படி வாழ்ந்தும் உணராதவர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். தெய்வம் என்பது இங்கே கண்ணுக்கு தெரியாத மறைபொருளாக இருக்கிறது. அந்த காலத்தில் தெய்வம் மனிதனிடம் பேசி இருக்கிறது .தெய்வத்தை நேரில் பார்த்தவர்களும் உண்டு .அல்லது கனவிலும் பார்த்தவர்களும் உண்டு.

 கனவில் கூட பார்ப்பது, இப்பொது உள்ள மக்களுக்கு மிகவும் கஷ்டமான நிலை. மனிதனாக வாழ்வது கடினமான பாதை .அதிலிருந்து தெய்வமாக மாறுவது அதைவிட கடினமான பாதை .இது இரண்டுக்கும் இடையில் மனிதன் பாதி, மிருகம் பாதி, என்ற நிலையில் வாழ்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் படிப்பறிவு இல்லாத மக்கள், மனசு தூய்மையானது, எண்ணங்கள் தூய்மையானது, அவர்களுக்கு பட்டம், வெளி வேஷம் எதுவுமே தெரியாது.

எப்போது தமிழ்நாட்டில் அரசியலில்  நடிகர்கள், கதை வசன கர்த்தாக்கள், உள்ளே வந்தார்களோ, அப்போதே நடிப்பு என்பது மக்களுக்கு வாழ்க்கையாக்கி கொண்டார்கள். அதிலிருந்து நடிப்பு அரசியல் அதிமுக, திமுக தொடர்ந்து 50 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நடிப்பு அரசியலால் மக்களின் வாழ்க்கை மோசமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இது பற்றி பல செய்திகள் மக்கள் அதிகாரத்தில் வெளியிட்டு வருகிறோம்.

 மேலும், நடிப்புக்கும் ,உண்மைக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பது ,ஏமாற்றங்களை தான் யாராக இருந்தாலும் சந்திப்பார்கள். இதிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், மக்கள் உண்மையான ஆன்மீகத்தை தெய்வ வழிபாட்டை நம்பிக்கை உடன் செய்ய வேண்டும் .கடமைக்கு செய்தால் எதுவும் பலன் தராது .துன்பத்திற்கு காரணம் மக்களின் தலைவிதியா? அல்லது ஆட்சியாளர்களின் தலைவிதி யா? இது இரண்டிற்கும் சம்பந்தம் உண்டு. மக்களின் நேரம் சரியில்லாத போது ,இந்த சரியில்லாத ஆட்சியாளர்களை மக்கள் தேர்வு செய்து துன்பப்படுவார்கள்.

 இதற்கு உதாரணம் மன்னர்கள் காலத்தில் கூட ஒரு கொடுங்கோல் மன்னன் ஆட்சி எப்படி இருந்தது ?என்பது சரித்திர வரலாறு. இப்போது மன்னர்கள் ஆட்சி இல்லை. ஆனால், மக்களாட்சியாக இருந்தாலும், மக்கள் தவறானவர்களை தேர்வு செய்தால், அதன் பலன் மக்களிடம் வந்து சேரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .அது மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் இரண்டாயிரத்திற்கு முன்னால் எந்த இயற்கையின் பேரிடரும் வந்ததில்லை. அதற்கு பிறகு தான் 2005 இல் இருந்து ஆரம்பித்து ,தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இது எதை காட்டுகிறது? என்றால் ஆட்சியாளர்கள் நேர்மையானவர்கள் அல்ல, என்பதை இயற்கை மக்களுக்கு உணர்த்துகிறது.

 நடிப்பு என்பது மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு அரசியல். அதை உண்மை என்று சொல்வதற்கு தொலைக்காட்சி, பத்திரிகைகள் இவர்களுக்கும் வருங்காலத்தில் அந்த தண்டனைகள் உண்டு. எத்தனை நாளைக்கு மக்களிடம் பொய்யை சொல்லி, மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருப்பார்கள்? அதனால் இயற்கை நிச்சயம் இதற்கு ஒரு தண்டனை கொடுத்தாக வேண்டும் .சமூக நலம் சார்ந்த பத்திரிகைகளுக்கு இயற்கை நிச்சயம் அதற்குரிய பலனை அது வழங்காமல் போகாது .காலம் எப்போது ?என்பதுதான் தெரியவில்லை .

மேலும்,நடிப்பு தெய்வத்திடம் செல்லாது .தெய்வம் எந்த ரூபத்திலும் வரும். எந்த ரூபத்திலும் இருக்கும். இங்கே சட்டத்தை ஏமாற்றிக் கொண்டு, மனிதனை ஏமாற்றிக் கொண்டு, மனசாட்சியை ஏமாற்றிக் கொண்டு ,வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆட்சி, அதிகாரம் ,ஆணவம் எல்லாமே கலிகாலத்தின் கடைசி நிலை .அதனால்தான், இங்கே போதையிலும், அசிங்கத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கணவனை மனைவி, மனைவியை கணவன் ஏமாற்றிக் கொண்டு, குடும்பம் நடத்துகிறார்கள்.பதவி, அதிகாரம் எல்லாமே ஒரு எல்லைக்கு உட்பட்டது.

 இறைவன் யாருக்காக வரவேண்டும்?  யாருக்காக பேச வேண்டும்?  யாருக்காக நாம் செய்ய வேண்டும்?  என்ற செயல்பாட்டில் இந்த உலகத்தை வழிநடத்துகிறார்கள் .சித்தர்கள் அவர்களுடைய ஆசி இல்லாமல் இந்த உலகத்தில் எதுவும் நடக்காது. மனிதனின் தவம், இறையருளை பெற்றுத் தருகிறது .அந்த இறையருள் மிருகமாக வாழ்ந்த மனிதனை, மனிதனாக மாற்றுகிறது. மனிதனாக வாழ்ந்த மனிதனை இறை நிலைக்கு கொண்டு செல்கிறது.

 இதில் உண்மையான குரு, எதிர்பார்ப்பு இல்லாத குரு, அமைவது இறைவனின் அருள். அந்த அருள் இருந்தால் மட்டுமே இறைவனை நாம் அடைய முடியும். இந்த பிறவியின் நோக்கமே இறைவனை அடைவது தான். ஆனால்,இங்கே அரசியல் ஒரு போதை,அதிகாரம் ஒரு போதை, புகழ் ஒரு போதை, செல்வாக்கு செல்வம் ஒரு போதை, இந்த போதையில் தள்ளாடிக் கொண்டிருப்பவர்கள் இறைவனை அடைய முடியாது. தன்னுடைய இறப்புக்கு பிறகு, இந்த ஆத்மா எங்கு செல்கிறது?  இங்கே போடுகின்ற ஆட்டங்கள், வேஷங்கள், இடுகாட்டில் மரணத்தின் கடைசி பகுதியில் என்ன?  உணர்வோடு இந்த ஆத்மா இருக்கிறதோ, அந்த நிலைக்கு தான், ஒவ்வொரு ஆத்மாவும் போய் சேரும்.

 சட்டத்தை ஏமாற்றலாம், மனிதனை மனிதன் ஏமாற்றலாம், உறவுகளை ஏமாற்றலாம், மனசாட்சியும் ஏமாற்றலாம் ,ஆனால், ஆண்டவனை ஒருவரும் ஏமாற்ற முடியாது. அங்கே வகுக்கப்பட்ட நியதி மாற்ற முடியாது. ஒருவருக்கு மரண அவஸ்தை என்பது இறைவன் கொடுக்காமல் கொண்டு போவது, அவரவர் செய்த புண்ணியத்தின் பலனும், தவத்தின் பலனும் இரண்டும் சேர்ந்தது.

RESENT ACCIDENT

ஆனால், ஏதோ வாழ்க்கையில் குறுக்கு வழியில் பொருளை சம்பாதித்து, அற்ப சந்தோஷத்தில் ஆட்டம் போடுகின்ற அரசியல் கட்சியினர், வெளி வேஷத்தில் பந்தா காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சந்தோஷமும், நிம்மதியும், இறைவன் கொடுக்காமல் எத்தனை கோடிகள், எத்தனை பதவிகள் இருந்தாலும், நீ அனுபவிக்க முடியாது. இதுதான் கடவுள் ,இதுதான் இறைவன், அவன் கட்டுப்பாட்டுக்குள் தான் எல்லாம் இயங்கும், சர்வமும் அவனே ,சகலமும் அவனே, பரம்பொருள் இன்றி ஓர் அணுவும் அசையாது.மேலும்,

மனிதனின் ஆசை நியாயமானதிலிருந்து, பேராசையாக மாறினால், அந்த மனிதர்களால் நிம்மதியும், சந்தோஷமும் அடைய முடியாது ,ஆசை அளவுக்கு அதிகமானாளே, மனித வாழ்க்கை நரகம். சொகுசு காரில் செல்வதாலும், அல்லது ஆகாய விமானத்தில் பறப்பதாலோ, சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களுக்குள் இருக்கின்ற ஆத்மா எந்த நோக்கத்திற்கு பிறப்பெடுத்துள்ளதோ, அதை நோக்கி பயணம் செய்யும்போது அதனுடைய நல்லதும், கெட்டதும் இப்பிறவியில் அதிகம் ஆக்கிக் கொள்வதும், குறைத்துக் கொள்வதும், அவரவர் விதி பயன் வசமே.

எத்தனை கோடி வைத்திருந்தாலும், எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தாலும், அதையெல்லாம் எடுத்துக்கொண்டு செல்ல முடியாது. ஆனால், உடன் வருவது ஆத்ம கல்வி, ஞானமும் இறை அருளும் மட்டும்தான். இறப்புக்கு பின் எங்கு செல்லும்? என்பதை தீர்மானிக்கிறது கடவுள் . கடவுள் அன்பின் வசமானவன், தவத்தின் அருளானவன். அப்படிப்பட்ட கடவுளை அடையாதவர்கள், பிறவி எடுத்து எந்த பயனும் இல்லை. அதிலும் கடவுளை நிந்தித்து பேசுவது, ஈனப்பிறவிகள்தான் அவ்வாறு பேசும்.

மேலும் ,கடவுளை அடைவதற்கு ஜாதி என்பது ஒரு தடை அல்ல. மதம் என்பது ஒரு தடையல்ல .எந்த மதத்தில் பிறந்தாலும், எந்த ஜாதியில் பிறந்தாலும், ஆன்மீக அறவழியில் சொல்லப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்து, ஆண்டவனை அடைவது ,அவன் அருளிருந்தால் மட்டுமே ,அதுவும் முடியும். அதனால்,தான் அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி, அவன் அருளைப் பெற முடியும்.மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை இந்து மதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள நியதிகள் தெரிந்து கொள்ளாமல், இறைநிலை அடைய முடியாது. எதுவும் இங்கு இருப்பது நிரந்தரம் அற்றது. ஆனால், இறைவன் ஒருவனே நிரந்தரமானவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *