தென் மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் அதிக அளவில் பாதித்துள்ளது. இந்த பாதிப்பை சரி செய்ய ,ஆளும் கட்சியான திமுக சரியான முறையில் மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு தான் மக்களிடையே எழுந்துள்ளது . மேலும், பல லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய ஆடு, மாடுகளையும், பொருட்களையும் இழந்துள்ளனர்.
இதை தென்காசியில் உள்ள ஆளும் கட்சியை சேர்ந்த ஒன்றிய சேர்மனே என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ,அவரே பிஜேபி ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட இடங்களில் உதவி செய்துள்ளது என்று தெரிவித்தார் .இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கனிமொழி ஓரளவு செய்ததாக தெரிவிக்கிறார். இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஆளும் கட்சி தரப்பிலிருந்து ஏற்படுத்தி உள்ளது.
மேலும்,இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து மீடியாக்கள் கூட வெளிப்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறார். அது மட்டும் அல்ல, இந்த நிலை தமிழக மக்களுக்கு தெரியக்கூடாது என்பதில் ஆளும் கட்சி ஆர்வம் காட்டி வருகிறதாம். மக்களுக்கு தெரிந்தாலும் ,தெரியவில்லை என்றாலும், பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல் ,திமுகவிற்கு எதிரானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும்,
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை இன்றும், அங்கு பல பகுதிகளில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அப்படி என்றால், எந்த அளவிற்கு மழையின் தாக்கம் இருந்திருக்கும்?
தவிர, திமுக கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறது. இந்த அரசியல் ஒரு காலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .எப்படி அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடை போடுகிறது தமிழகமே என்று விளம்பரப்படுத்தினாரோ, அதே நிலைமைதான் திமுகவிற்கும் உண்டு. அதைப்பற்றி கடந்த காலத்தில் வழக்கு தொடர்ந்தது ஞாபகப்படுத்தி பார்த்தால் தெரியவரும். மேலும்,
வேதனையும், வலியும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த அரசியல் புரியவில்லை. அவர்களுக்கு வலி போனால் போதும் என்ற வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் . இவர்கள் அவர்களின் வாக்குக்காக, தமிழ்நாட்டு அரசியல் என்பது கார்ப்பரேட் ஊடக விளம்பரங்கள் ஆகிவிட்டது .
இந்த கார்ப்பரேட், பத்திரிகை ,விளம்பர தொலைக்காட்சிகளில் மக்கள் யார் சரியாக செய்கிறார்கள் என்று புள்ளிவிவரம் எடுக்க போகிறார்களா ? அதை வைத்து மக்கள் ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதா ? மக்களின் குமுறல் வாக்களித்தது, இவர்கள் ஊழல் செய்து கொள்ளையடிக்கவா ? மேலும்,
பாதிக்கப்பட்ட நேரத்தில் நமக்கு தேவையான உதவிகள் கிடைப்பதற்கு ஏங்கிக் கொண்டு இருக்கவா ? இதற்கு அரசியல் தெரிந்தவர்கள் கூட வேதனைப்படுகிறார்கள். அரசியல் தெரியாதவர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் .
இதிலிருந்து மக்கள் எப்போது விழித்துக் கொள்வார்கள் ?அப்போதுதான் தமிழ்நாட்டில் அரசியல் என்பது அரசியல் கட்சியினருக்காக இல்லை . மக்களுக்காக என்பதை புரிந்து கொண்டால் சரி .