ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram
நாட்டில் மக்கள் தகுதியற்ற பிரதிநிதிகளை! கிராமம் முதல் நகரம் வரை, நகர முதல் நாடு வரை தேர்வு செய்து விட்டால்! அவர்கள் வாழ்க்கை போராட்டங்கள் ஐந்தாண்டு காலம் எந்தெந்த வகையில்? எப்படியெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் ?
ஒரு பக்கம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை! இந்த வழக்கில் பெரும்பாலும் இவர்களுடைய அரசியல் கட்சியினரே அதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். காவல்துறை சரியான நடவடிக்கைகள் இல்லை. அங்கே அரசியல் கட்சி ரவுடிகள் ஆதிக்கம் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பத்திரிகைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு இருக்கிறது. மம்தா ஒரு முதல்வருக்கான தகுதியற்றவர். அவர் ஒரு ரவுடியை போல் பேசிக் கொண்டிருப்பவர். இதை எல்லாம் அந்த படித்த மக்கள் எப்படி இவரை முதல்வராக ஏற்றுக் கொண்டார்கள்? என்பது தெரியவில்லை.
மேலும், அந்த பெண் மருத்துவர் கொலையில் சரியான நீதி கிடைக்காததால் அந்த வழக்கை உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து எடுத்துக் கொண்டது. தவிர, இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால்! இந்துக்களின் இட ஒதுக்கீடு உரிமையைப் பறித்து, இஸ்லாமியர்களுக்கு கொடுக்க உச்சநீதிமன்றம் வரை போராடும் இந்தியாவில் ஒரு முதலமைச்சர் என்றால், அது மம்தா பானர்ஜி தான் என்று இந்திய அளவில் கேவலமாக பேசப்படும் ஒரு முதலமைச்சராக இருந்து வருகிறார்.
இது தவிர கடந்த 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இவருடைய ஆட்சியில் 77 ஜாதிகளை இதர பின் தங்கியவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளார். அதில் 74 ஜாதினர் இஸ்லாமியர்கள். பெரும் மூன்று ஜாதியினர் மட்டுமே இந்துக்கள் .மேலும், பின் தங்கிய வகுப்பில் ஜாதியை இணைக்க மூன்று கட்ட ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். எதுவுமே இல்லை. இதை விட ஒரு கொடுமை, மேற்படி 74 ஜாதியை இஸ்லாமியர்களை பின்தங்கியவர்கள் பட்டியலில் மனு கொடுத்த 24 மணி நேரத்தில் சேர்த்து உத்தரவு போட்டுள்ளார்
.மேலும், சில இஸ்லாமிய சாதியினர் மனு கொடுக்காமலே, விசாரணை ஏதும் நடத்தப்படாமலே, பின் தங்கியவர் பட்டியலில் இணைத்துள்ளார். இந்த விஷயம் சட்டத்திற்கு புறம்பானது என்று மேற்கு வங்கத்தில் பொதுநல வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஒரே வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம், இஸ்லாமியர்களை பின்தங்கியவர்கள் பட்டியலில் இருந்து ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இப்படிப்பட்ட மோசமான வழக்குகள் உச்சநீதிமன்றமே அதிர்ந்து போய், இது நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.