மோடியை பழிவாங்க திட்டம் போட்ட அமெரிக்கா! அதாணியை பழிவாங்கி விட்டதா?

அரசியல் இந்தியா சர்வதேச செய்தி தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அமெரிக்காவின் சூழ்ச்சி தான் அதாணியை பழிவாங்கி விட்டது .இது அமெரிக்காவின் சூழ்ச்சி மட்டும் அல்ல. இந்தியாவில் உள்ள கிருத்துவ, முஸ்லிம் அமைப்புகள், காங்கிரஸ், இவர்களுடைய மறைமுக சதி திட்டங்கள் ஒன்றாய் சேர்ந்துதான் ,இப்படி ஒரு அரங்கேற்றம் நடந்திருக்க முடியும். இதற்குப் பின்னால் இந்தியாவின் வளர்ச்சி என்ற ஒரே காரணம்தான். தவிர

எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா, அவர்களுடைய அடிமை நாடாக தான் இருந்து வந்தது. இவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே நிறைவேற்றி அவர்களிடம் நல்ல பெயரை வாங்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர்கள் சொல்வதை தான் இந்தியாவில் அவர்களுடைய மறைமுக ஆதிக்கம் நடைபெற்று வந்தது. தற்போது அந்த நிலை இல்லை.மேலும்,

 மோடி தலைமையிலான ஆட்சியில், இந்தியாவில் அன்னிய சக்திகளின் தலையீடு அடியோடு நிறுத்தப்பட்டது .அது ஒரு முக்கிய காரணம். அதற்கடுத்தது என்.ஜி ஓ மூலம் அமெரிக்காவிலிருந்து சர்ச்சுகளுக்கு வரக்கூடிய ஹவாலா பணம், அரபு நாடுகளில் இருந்து வரக்கூடிய  ஹவாலா பணம்,அது தடை செய்யப்பட்டது.

 அடுத்தது தீவிரவாதம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டது. இதைவிட ஒரு முக்கியமானது, அமெரிக்கா டாலரின் மதிப்பை வைத்துக் கொண்டுதான் உலக நாடுகள் இடம் தனது ஆதிதத்தை மறைமுகமாக செலுத்தி வருகிறது. மோடி அமெரிக்காவின் டாலர் மதிப்பை மோடி குறைத்து விட்டார். அது மட்டுமல்ல,

எல்லா நாடுகளும் கொரோனாவுக்கு பிறகு பொருளாதார வீழ்ச்சியில், நலிவடைந்து இருக்கும்போது, இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. மேலும், மோடி ராணுவ தளவாடத்திற்கு வேண்டிய முக்கிய உபகரணங்கள் அந்நிய நாடுகளை எதிர்பார்த்து இருந்த இந்தியா, இன்று இந்தியாவில் இருந்து ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ஆகும் நிலையை உருவாக்கி விட்டார்.

 இதுயெல்லாம் அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி .மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மறைமுக அந்நிய நாடுகளின் ஆதிக்க சக்தி இருந்து கொண்டு தான் இருந்தது .அதற்கும் மோடி முற்றுப்புள்ளி வைத்து விட்டார் .அதனால் மோடி இருந்தால் இந்தியாவில் நாம் எந்த ஒரு சூட்சியும், எந்த ஒரு அரசியலும் செய்ய முடியாது. மேலும், இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துவிடும். இதற்கு என்ன வழி? என்று பல ஆண்டுகளாக திட்டம் போட்டு தான், இந்த வேலையை நடத்தி இருக்க வேண்டும்.

இதற்கு இங்கு இருக்கும் அரசியல் கட்சிகளும், இதற்கு மறைமுகமாக ஆதரவும், உளவும் தெரிவித்து இருப்பார்கள். இது காங்கிரஸின் அரசியல் சூழ்ச்சி, எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி, அமெரிக்காவின் ஆதிக்க சூழ்ச்சி, இவை எல்லாம் ஒன்று சேர்ந்துதான் இந்த திட்டம் நிறைவேற்றி இருக்க வேண்டும். இதற்கு பக்க வாத்தியம் வாசித்துக் கொண்டிருக்கிறது சோசியல் மீடியாக்கள் மற்றும் எதிர்க்கட்சி மீடியாக்கள்.

 இதனால் அதாணியின் பொருளாதாரம்தான் விழுந்ததே தவிர, இந்தியாவின் பொருளாதாரம் எக்காலத்திலும் வீழாது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள சமூக அக்கறை இல்லாத ஊடகங்கள் எதிர்கட்சிகள் போல் பேசிக் கொண்டிருக்கிறது சில ஊடகங்கள், சில சோசியல் மீடியாக்களும், மக்களிடம் மோடியின் மீது களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

மோடியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ,இந்த நாட்டை சரியான பாதையில் வழி நடத்திச் செல்லும் ஒரு தலைவன் மோடி. இது பற்றி இதற்கு எப்படி வேண்டுமானாலும், பேசுவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும்,அவர்களுக்கு உள்ள சுதந்திரம் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் ஆட்சி 50 ஆண்டுகால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், இதற்கெல்லாம் பதில் அவரவர் கிடைக்கும்.

 அரசியலில் நம்பர் ஒன் பிராடு கூட, தன்னை நேர்மையானவனாக மக்களிடம் காட்டிக் கொள்கிற போது, மோடி இதுவரை அப்படி காட்டிக் கொள்ளவில்லை. அவருடைய உண்மையான செயல்பாடு, அதற்குள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும்.ஆனால், வெளிவேஷம் போட்டுக் கொண்டிருக்கும் ராகுல், அதேபோல் வெளிவேஷம் போட்டுக் கொண்டிருக்கும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவர்களுக்கு எல்லாம் இந்த உண்மையை சொன்னாலும் புரியாது. அதை திசை திருப்பி அதற்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்துவது தான் அவர்களுடைய அரசியல்.

இப்போது கூட மோடி அதாணிக்கு வேண்டியவர் என்று சில உதவிகளை மறைமுகமாக கூட செய்திருக்கலாம். ஆனால்,அதாணியோடு சேர்ந்து மோடி ஊழல் பண்ணவில்லை .இதை நம் இந்திய மக்கள் நிச்சயம் உணர்வார்கள். மேலும், இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் என்றால் மக்களிடம் பொய்யை சொல்வது தான் அவர்களுடைய முக்கிய அரசியல் பணி. அதில் யார் அதிகம் பொய் சொல்வார்கள்? யார் குறைவாக பொய் சொல்வார்கள்? இப்படி தான் மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *