அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram
நாட்டில் ஊழலை ஒழிக்க லஞ்ச ஒழிப்புத்துறை இருக்க வேண்டும். பல்லாயிரம் கோடி ரேஷன் கடை பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு குறைவான விலையில் கொடுக்காமல், மார்க்கெட் விலைக்கு கொடுப்பது மற்றும் தரம் குறைவான பொருட்களை கொடுப்பது, இது எல்லாம் ஏழை எளிய, நடுத்தர மக்களை முட்டாளாக்கும் வேலை.
இதை அதிமுக, ஆட்சியிலும் இந்த வேலையை செய்திருக்கிறார்கள். நல்ல அரிசி எல்லாம் வெளி மார்க்கெட்டில் விற்று விடுவார்கள். ஏன்? இந்த அரிசி கூட ரேஷன் கடை ஊழியர்கள் வியாபாரிகளுக்கு விற்றுவிட்டு, ஆடு, மாடுகளுக்கும், கோழிகளுக்கும் போடுகின்ற அரிசியை தான் கொண்டு வந்து ரேஷன் கடைகளில் விற்பார்கள். இதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
மேலும், அறப்போர் இயக்கம் இப்ப பிரச்சனையை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. அங்கே நீதிபதி கூட கேள்வி கேட்கிறார்களாம், இதைவிட என்ன ஆதாரங்கள் வேண்டும்? ஒரு கிறிஸ்டி நிறுவனம் மீது எப்பொழுது எஃப் ஐ ஆர் போட போகிறீர்கள்? என்று நீதிபதியே கேள்வி கேட்டுக் கூட,லஞ்ச ஒழிப்புத்துறை எஃப் ஐ ஆர் போடாமல் அரசுக்கு ஆதரவாக இருந்து வருவதாக அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு .
இப்படி திமுக ஆட்சியின் அப்பா கருணாநிதியின் ஆட்சியில் விஞ்ஞானபூர்வமாக இருந்தது போல், இப்போதும் அது தொடர்கிறதா? மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். அப்போது சொன்னால் மக்களுக்கு புரியாது. இப்போது எல்லாவற்றையும் செல்போனில் பார்த்து விடுகிறார்கள் . சொன்னால் புரிந்து கொள்வார்கள்.