வருங்காலத்தில் அரசியல் என்பது அரசியல் கட்சிகளுக்கு இனி கடினமான பாதை . மக்களின் எதிர்பார்ப்பு, அரசியலின் ஏமாற்றம், மக்களை கேள்வி கேட்க வைத்து விட்டதா?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் அரசியல் என்பது கடந்த காலங்களில் அதாவது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கௌரவத்திற்காக அரசியலுக்கு வந்தார்கள். அதற்குப் பிறகு வந்தவர்கள் தான் அரசியலில் ஊழலும், கொள்ளையும் நடந்துள்ளது .

1965 க்கு முன்னர் அரசியலில் ஊழல் என்ற வார்த்தை கூட மக்களுக்கு தெரியாது. 1965 க்கு பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், எப்படி பொய் கணக்கு எழுதுவது?  எப்படி அரசியலில் கொள்ளை அடிப்பது?  எப்படி சட்டத்தை ஏமாற்றுவது?  எல்லாம் இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த அரசியல் வரலாறு. இது ஆரம்பத்தில் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

 இதற்கு முக்கிய காரணம் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மக்கள் இவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி இருந்தார்கள். நம்பிக்கையும் வைத்திருந்தார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை .ஆனால், இவர்கள் எல்லாம் இந்த ஊழல்வாதிகளின் பின்னால் இயங்கக் கூடியவர்கள் என்பது தற்போது தான் குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு தெரியவந்துள்ளது .

இதனால், இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு இருந்த மதிப்பு மரியாதை, கௌரவம் எல்லாவற்றையும் குழி தோண்டி புதைத்து விட்டார்கள். இது தவிர ,இந்த கம்பெனி நிருபர்கள் அரசியலில் ஊழல்வாதிகள் உடன் ரகசிய கூட்டணி ,இவை எல்லாம் இன்றைய சோசியல் மீடியாக்கள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இது கூட எப்படி மக்களுக்கு தெரிந்தது?  என்றால், இதில் சில பத்திரிகை ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள், மற்றும் இணையதளங்கள் எல்லாம் தற்போது வெளிவந்துள்ள அதிமுக, திமுக அமைச்சர்களின் ஊழல் சொத்துக்கள் ,வெளிநாடுகளில் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள், எல்லாம் தற்போது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ எல்லாம் நடவடிக்கை எடுத்த காரணத்தால்,மக்களுக்கு உண்மை என்ன என்று குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு தெரியவந்துள்ளது .

மேலும் இந்த ஊழல்வாதிகள் அரசியலில் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்தால், தற்போது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ எல்லாம் வருகிறது .இது வரக்கூடாது. இது எப்படி எங்களை கேள்வி கேட்கலாம்? நாங்கள் பதவி அதிகாரத்தில் இருக்கிறவர்கள். பிஜேபி எங்களை பழிவாங்கும் அரசியல் செய்கிறது என்று இந்த மீடியாக்களில் புலம்புவார்கள். அதையும் இவர்கள் மக்களிடம் உண்மை என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள் .

இது தவிர , சென்னை உயர்நீதிமன்றம் இருக்கிறது. இவர்களுக்காக ஒரு சைட் சப்போர்ட். அடுத்த கட்டம், நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கைக்கு எதிரானதாக இருந்தால், நீதிமன்றத்திற்கும் இதே கதி தான். மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசியலில் ஊழல்வாதிகளுக்கு நீதிமன்றம் எக்காலத்திலும் துணை போகக்கூடாது. அது சட்டத்திற்கு எதிரானது .சட்டத்தை மதிக்காதவர்களுக்கு நீதிமன்றம் துணை போகிறது என்றால், சட்டத்தின் மதிப்பு, கௌரவம் ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல ,

தவிர,மக்கள் நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும், தற்போது அரசியலில் மக்கள் செய்யவில்லை என்றாலும் கேள்வி கேட்பார்கள். அதேபோல் தவறு செய்தாலும், ஊழல் செய்தாலும், கேள்வி கேட்பார்கள். அதனால், இனி வருங்கால அரசியல் கட்சிகளுக்கு ரவுடிகளை வைத்து ஏமாற்ற முடியாது. மேலும் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் பேசி அல்லது அறிக்கை விட்டு மக்களை ஏமாற்ற முடியாது. சட்டத்தின் ஓட்டைகளை வைத்து எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்? அதனால், மக்களிடம் மாற்றங்கள் ஆரம்பித்துவிட்டது. அரசியல்வாதிகள், அரசியல் கட்சியினர் மக்களுக்காக இனி மாறித்தான் ஆக வேண்டும் .வேறு வழி இல்லை .

அது மட்டும் அல்ல, இனி காசு கொடுத்தாலும் வாக்களிக்கும் மக்கள் சிந்திக்காமல் வாக்களிக்க மாட்டார்கள் .எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பணத்தை வாங்கிக் கொள்வார்கள். நோ கேரன்டி ஃபார் யுவர்  மணிஓட் (No guarantee for your money vote.) இது தவிர ,கார்ப்பரேட் மீடியாக்களில் அரசியல் செய்து கொண்டிருக்கும் திருமாவளவன், சீமான் ,ராமதாஸ், வைகோ இவர்கள் எல்லாம் இனி வேலைக்காக மாட்டார்கள். இவர்களுடைய அரசியல், தெரியாதவர்களிடம் தான் எடுபடும் .தெரிந்தவர்களிடம் இவர்களுடைய அரசியல் எடுபடாது.

எத்தனை நாளைக்கு மீடியாவில் அரசியல் செய்து கொண்டிருப்பார்கள்? பிரச்சனைகள் வரும்போது எட்டி பார்க்காமல், ஜாதியை பற்றியும், மதத்தை பற்றியும், அரசியல் செய்து கொண்டிருந்தால் யார் இவர்களை நம்புவார்கள்? அப்படி தான் திருமாவளவன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை எல்லாம் சமீபத்தில் பேசியிருக்கிறார் .அவர் சொல்வது போல், இந்திய சட்டம் இந்திய மக்களுக்காக தான் சட்டமே ஒழிய,

 வெளிநாட்டில் இருந்து எவன் வந்தாலும், இந்தியாவில் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்றால், அப்போது இங்கு இருப்பவர்கள் எங்கே போவார்கள்? மேலும், நடிப்பு அரசியலும் மக்களிடம் ஈடுபடாது .

 இந்த வித்தைக்கெல்லாம் இனி வருங்கால தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 ஏனென்றால் மக்களின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம் அரசியலில் அதிகரித்துவிட்டது. அது மட்டுமல்ல, அரசியல் கட்சியினர் சுயநலம் அதிகரித்து விட்டது .இவர்கள் தேர்தல் நேரத்தில் கைகளிலும், காலிலும் விழுந்தால், மக்கள் எப்படி நம்புவார்கள்?  மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, எல்லாவற்றையும் அரசியல் கட்சிகளால் நாம் ஏமாற்றப்படுகிறோமா ,என்ற கருத்து அரசியல் தெரிந்தவர்களிடம் வந்துள்ளது .அதனால் ,கிராமங்களில் கூட மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நகரங்களில் படித்த மக்கள் அதிகம். அதனால் அவர்கள் கேள்வி கேட்பது மட்டுமல்ல, சட்டத்தையும் பயன்படுத்துவார்கள். இனி அரசியல் கட்சிகளுக்கு அரசியல் என்பது கடினமான பாதை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *