ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram
நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி 322 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு,நடைபெற உள்ளது.இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துகளிலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு. வருகிற 15-ம் தேதி காலை 11. 00 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விவாதத்திற்கு பொதுமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் என்ன?
கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம பஞ்சாயத்தின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இண்டர்நெட் வழியாக ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் சேவை, இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல்,போன்ற பல வேலைகள் இணையதள சேவையில் இருக்கும்போது, அந்த கிராம நிர்வாக கணக்கு, வழக்குகள் மட்டும் இணையதளத்தில் ஏன் மக்கள் பார்வைக்கு அதை கொண்டு வரவில்லை? இது அரசியல் உள்நோக்கமா?மேலும்,
தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (டிஎன்பாஸ்), தமிழ்நாடு உயிரிப் பல் வகைமை வாரியம், உயிரிப் பல்வகைமை மேலாண்மை குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஓடிஎப் பிளஸ் ரைசிங் வில்லேஜ், ஓடிஎப் பிளஸ் மாடல் வில்லேஜ், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.மேலும்,
கலெக்டர் உமா இது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கிராம ஊராட்சியில் வெளிப்படை நிர்வாகத்தை கொண்டு வர தான் இந்த கிராம சபை கூட்டம் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக நடைபெற்ற வருகிறது. ஆனால், எந்த கிராமத்தில் இது போன்ற விவாதங்கள் நடைபெறுகிறது? என்பது மட்டும்தான் கேள்விக்குறியாக உள்ளது?மேலும், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இந்தந்த பிரச்சனைகளாவது விவாதிக்க வேண்டும் என்று ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.
மேலும், கிராம ஊராட்சிகளில் இந்த கிராம சபை முறையாக நடக்கிறதா? அல்லது கேள்வி கேட்கும் உரிமையே மக்களுக்கு இல்லாமல் தான் இருந்து வருகிறதா? சில கிராமங்களில் இந்த கூட்டம் நடத்தியும், நடக்காமலும் பெயரளவில் கிராம சபை கூட்டம் நடப்பதாகவே செய்தித்தாள்களில் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடியும் . இது என்?
இப்படிப்பட்ட பிரச்சனைகள் இந்த கூட்டத்தில் ,விவாதிக்க முடியாமலும், அவை வெளிவராமலும் தடுக்க பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களை சுற்றி குடிகாரர்கள் ,அடாவடி பேர்வழிகள்,கட்ட பஞ்சாயத்து கூட்டத்தை வைத்துக் கொண்டுதான் நூற்றுக்கு 99 சதவீத கிராம சபை கூட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.மேலும்,
கிராமசபை கூட்டத்திற்கு அர்த்தம் தெரியாமல் தான் கிராம சபை கூட்டம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இது பற்றி உயர் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும், சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டால் காவல்துறையில் பொய் வழக்கு போடுவது, அங்கே சண்டை சச்சரவுகள், பிரச்சனைகள் ஏற்படுத்துவது ,இது போன்ற நிலைமை தான் பெரும்பாலான கிராமங்களில் இன்று வரை,கிராம சபை கூட்டத்தில் இருந்து வருகிறது.
இதையெல்லாம் மாவட்ட ஆட்சியர்கள் தமிழ்நாட்டில் தடுக்க நடவடிக்கை எடுத்தால் தான், கிராம சபை கூட்டத்தின் அர்த்தம் அந்த கிராமங்களுக்கு போய் சேரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதை வரும் கிராம சபைலாவது மாவட்ட ஆட்சியர்கள் இப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளிவைக்க ஒவ்வொரு கிராமத்தில் இருந்து ,அந்த கிராம சபையின் முழு வீடியோ மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொண்டு சென்று இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா ? – சமூக ஆர்வலர்கள்.