வருவாய்த் துறையை சீர் செய்ய வேண்டும், இல்லையென்றால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப் படுவது தொடர்கதை ஆகி வருகிறது. அதை சரி செய்ய வேண்டும் என்றால் வருவாய்த்துறையை சீர் செய்தாக வேண்டும்.
இவர்கள் ஒவ்வொரு சிறிய வேலைக்கும், மாத கணக்கில் அலைய வைக்கிறார்கள். ஆன்லைன் என்பது ஒரு பேச்சுக்கு தான் இருக்கிறதே ஒழிய, அது செயல்பாட்டில் இல்லை. மேலும், இந்த வருவாய்த் துறையின் கீழ்மட்டத்தில் மிகவும் பொதுமக்களை அலைக்கழிய விடுவது சர்வசாதாரணமாக இருக்கிறது.
இது முதலில் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து, வருவாய் ஆய்வாளர் முதல் இப்ப பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டும். முதலில் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள தலையாரிகளை, அவர்களுடைய சொந்த கிராமத்தில் ஒருபோதும் அவர்களை பணி செய்ய விடக்கூடாது. ஏனென்றால் அந்த காலத்தில் கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு, வீட்டு எலக்காரம் வண்ணனுக்கு தெரியும் என்பார்கள். அதை இன்று வரை அவர்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரையும் சுமார் 15 லிருந்து 20 கிலோமீட்டர் தங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து மாற்றம் செய்ய வேண்டும். மேலும் கிராம நிர்வாக அதிகாரி ஓராண்டுக்கு மேல் ஓரிடத்தில் பணி செய்ய விடக்கூடாது. அதேபோல் வருவாய்த்துறை ஆய்வாளர் அவர்களையும் ஓராண்டுக்கு மேல் பணி செய்ய விடக்கூடாது. இதனால் அந்தந்த கிராமங்களில் அல்லது அந்தந்த ஊர்களில் உள்ள அல்லது மக்களின் வீக்னஸ் தெரிந்துகொண்டு, இவர்கள் அதற்கேற்றார் போல் இருந்து வருகிறார்கள்.
அரசியல் நிர்வாகத்திற்கு உள்ளே வரக்கூடாது. அது எங்கும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களும் முக்கிய உளவாளிகளாக இவர்களுக்கு இருந்து வருவார்கள். அதனால் ஒரு சிறிய பிரச்சனைக்கு கூட பொதுமக்கள் மாத கணக்கில் அளைகழிக்கப்படுவதற்கு, இவர்களுடைய வருமானம் முக்கிய குறிக்கோளாக உள்ளது.
அதனால், இந்த மாற்றங்களை கொண்டு வராமல் வருவாய்த் துறையை சீர் செய்ய முடியாது. மேலும் மக்களின் கோரிக்கைகள், புகார்கள் ஆகியவற்றை எத்தனை கிராம நிர்வாகி VAO ஆன்லைனில் அதை ஏற்றி, அதற்கான நடவடிக்கைகளை அந்த வாரத்திற்குள் எடுத்திருக்கிறார்? என்பதை தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக ஆய்வாளர் அலுவலகம் இதைப் பற்றி ஒரு சர்வே எடுத்தால், தமிழகத்தில் உள்ள உயர்மட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கும், அதன் செயலாளர் குமார் ஜெயந்த் அவர்களுக்கும் ,இதன் உண்மை நிலவரம் புரியவரும்.
மேலும்,தமிழக அரசு பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை எத்தனை நாட்களில் பொதுமக்களுக்கு இவர்கள் அளித்திருக்கிறார்கள்? அதில் மீடியேட்டர்களாக எத்தனை தலையாரிகள் வேலை செய்திருக்கிறார்கள்? என்பது குறித்து தமிழக அரசு ஒரு சிறிய சர்வே எடுத்து பார்க்கட்டும்.
பொதுமக்கள் எவ்வாறு? என்னென்ன பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்? என்பது புரியவரும் .இது ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களும், இது பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பது பொதுமக்கள் சார்பாக மக்கள் அதிகாரபத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகையின் முக்கிய கோரிக்கை.