ஜூன் 15, 2024 • Makkal Adhikaram
மனித வாழ்க்கை மாட்டு வண்டியில் செல்லும்போது, மனிதன் பரபரப்பும் டென்ஷனும் இல்லாமல் வாழ்ந்தான். உடல் உழைப்பு தனக்குத் தேவை எதுவோ அது மட்டும் இருந்தால் போதும் என்று நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்த வாழ்க்கை அது. ஒருவேளை உணவு இல்லை என்றாலும், நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் குறைவில்லை.
ஆனால் கார் இருக்கிறது. பைக் இருக்கிறது .பங்களா இருக்கிறது. பணம் இருக்கிறது. சொகுசான வாழ்க்கை இருக்கிறது. எது இருந்தும் சொந்த பந்தங்களிடம் மனம் விட்டு பேச முடியாத நிலை . போலியான வாழ்க்கை . மனிதனுக்கு மனிதன் நம்பிக்கை இல்லாத ஒரு வாழ்க்கை, யார் எப்போது? நம்மை கவிழ்ப்பானோ என்ற சந்தேகத்தில் வாழ்க்கை .
அது அதிகாரியாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும், சாமானிய மனிதர்களாக இருந்தாலும், இந்த நிலைமைக்கு வாழ்க்கை காரணம்? மனித வாழ்க்கை அடுத்தவனை விட தான் முன்னேறி விட வேண்டும். எந்த வழியிலாவது இப்படி ஒரு குறுக்கு வழி, எப்போதும் யாருக்கும் அது பயன்படாது. அது அவர்களே அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை இழக்கும் நிலை . இதுதான் மனித வாழ்க்கையின் விஞ்ஞானம்.
இந்த விஞ்ஞானத்தால் மனிதன் முன்னேற்றம் நிரந்தரமானதா? இல்லை. அந்த நேரத்திற்கு தான் அது .ஏசி வைத்திருக்கிறார்கள் கரண்ட் இல்லை என்றால் அது ஓடாது .கார் வைத்திருக்கிறார்கள் பெட்ரோல் இல்லை என்றால் அது ஓடாது. இப்படி ஒவ்வொன்றிலும் அதன் இயக்கம் பொருட்செலவு இல்லாமல் மனித வாழ்க்கை விஞ்ஞானத்தில் இல்லை.
ஆனால், பழைய காலத்தில் 10 கிலோமீட்டர் ,15 கிலோமீட்டர் வரை கூட நடந்து சென்று முன்னோர்கள் வந்து சென்றது சொல்வார்கள். இப்போது அரை கிலோ மீட்டர் கூட நடப்பது கேவலம் என்று நினைக்கிறார்கள்.
இதைவிட வருங்கால தலைமுறைகள் இந்த வாழ்க்கை எல்லாம் கடந்து பறக்கும் நிலைக்கு மனித வாழ்க்கை மாறும் என்று ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட காலம் விரைவில் நிஜமாகப் போகிறதா? இந்த காணொளி .