விழித்துக் கொண்ட வன்னியர் சமுதாயத்திற்கு ,சமுதாய நலனுக்கு ,ஏ. கே . நடராஜன் ,இடத்தை சக்தி படையாட்சிபிடிப்பார ?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

 வன்னியர் மக்கள் கட்சி தலைவர் சக்தி படையாட்சி .

வன்னியர் சமுதாயம் பல ஆண்டுகளாக இட ஒதுக்கீடுக்கு போராடியும் அதிமுக ,திமுக ஆட்சியில் எத்தனையோ வன்னியர்கள் அமைச்சர் பதவிகளும், எம்எல்ஏ பதவிலும், எம் பி பதவியிலும் ,வன்னிய சமுதாயம் அமர்த்தியும் கூட அவர்களுக்கு எதுவும் செய்யாமல், இந்த 10.5 சதவீதம் கூட கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளது. இது சமூக மக்களிடையே பெரிய ஏமாற்றம்தான். இந்த ஏமாற்றத்திற்கு காரணம் வன்னியர் சமுதாயம் ஏமாந்த சமுதாயமாக இருந்து வருகிறது.

 இவர்கள் இதுவரை சமுதாய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசை நம்பி ஏமாந்து விட்டார்கள். இதைத் தொடர்ந்து பல அமைப்புகள், ஜாதி சங்கங்கள் ,அவரவர் சக்திக்கு தகுந்தார் போல், இந்த சமுதாயத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் .இவர்களுக்கு நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? ஏமாற்றுபவர்கள் யார்? எதுவும் தெரியாது.

 இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நன்றாக பேசினால் ,நன்றாக பேசி கவிழ்த்தால், நல்லவனாக நடித்தால், அது போதும். நல்லது செய்ய வேண்டியது இல்லை. நயவஞ்சகமாக பேசினாலும், ஏமாந்து கொண்டுதான் இருப்பார்கள். மேலும் நல்லவர்கள் வேஷத்தை இவர்கள் சாகும் வரை பார்த்து ஏமாந்து விட்டு தான் போவார்கள் .ஆனால், இந்த வேஷத்தை ராமதாஸும், ராமதாஸ் கட்சியினரிடமும் 80% மக்களுக்கு மேல் சுதாரித்துக் கொண்டு ,இவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டார்கள்.

 புரியாமல் 20 சதவீதத்திற்கும் கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறது .அவர்களுக்கு கட்சியும் தெரியாது. ஆட்சியும் தெரியாது .அரசியலும் தெரியாது. எவன் வந்தால் என்ன? எவன் போனால் என்ன? நமக்கு தேவை என்னவோ, அதுவரை பார்த்துக் கொள்ளலாம். அதனால்,இந்த சமுதாயம் வளர்ச்சி அடைந்த சமுதாயமாக வர வேண்டிய திறமைகள் இருந்தும், முன்னேற முடியாத ஒரு சமுதாயமாக உள்ளது. உழைப்பின் மீது நம்பிக்கை இருந்தும் ,முன்னேற முடியாமல் இருக்கிறது.

 இதற்கு வன்னியர் சமுதாய மக்களிடம் போட்டி,பொறாமை அதிகரித்து விட்டது.அதுமட்டும் அல்ல, சமூக மக்களையும், பொது சொத்துக்களையும் ஏமாற்றி வாழும் ஒரு கேவலமான நிலையை உருவாக்கி விட்டார்கள்.இது ராமதாஸ் எவ்வழியோ அவ்வழியே அனைவரும் பின் பற்றுகிறார்கள்.

மற்ற சமுதாயம் கேள்வி கேட்கும் .ஆனால், வன்னிய சமுதாயம் கேள்வி கேட்காது என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .இப்போது சமுதாயம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டது. அதனால், சமுதாயம் விழித்துக் கொண்டது. இப்போது சமுதாயத்திற்கு, சமுதாய நலனுக்கு யார் தகுதியான தலைவன்? என்பதை தேடிக் கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான தலைவர் ராமதாஸ் விட்ட பணியை, ஏ. கே. நடராஜன்,இடத்தை நிச்சயம் சக்தி படையாட்சி பிடிப்பார் அதில் மாற்றுக் கருத்து இல்லை. சமுதாய உணர்வோடு செயல்படும்போது சமுதாயமே அதை புரிந்து கொள்ளும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *