ராஜேஷ் தாஸ் ஒரு நல்ல மனிதர் .பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்ற ஆணவமோ, கர்வமோ அவரிடம் பார்த்ததில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் அவர் எஸ் பி யாக இருக்கும் போது, அவர் வீட்டுக்கே சென்று இருக்கிறோம். ஒரு குழந்தை மாதிரி பேசுவார். அவருடைய கெட்ட நேரம் அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது.
இதில் ஒரு பெண் நிருபர் இதை இந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன் . ராஜேஷ் தாசும் அலட்சியமாக இருந்துவிட்டார். வேறு ஒரு பெண் நிருபரும் எனக்கு தெரிந்தவர்தான் இந்த சம்பவம் இதை சுமுகமாக முடித்திருக்க முடியும். இருப்பினும் நான் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் நீண்ட நாள் இடைவெளியில் இருக்கிறேன்.
மேலும், எனக்குத் தெரிந்த பெண் நிருபர் தான் இதை வலுப்படுத்துகிறார்கள் என்று தெரிந்திருந்தால், நிச்சயம் அதை தடுத்து இருக்க முடியும் . அவருக்கு தண்டனை கிடைத்த பிறகு தான் என் காதிற்கு அது வந்தது.காலம் இதற்குள் விளையாடுகிறது.காவல்துறையில் இந்த விஷயம் பெரியதல்ல.
உண்மை இருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக் கொள்பவர்கள் ,சில நேரத்தில் ஏற்றுக்கொண்டு, சில நேரத்தில் பழி வாங்குகிறார்கள். இதனால், ஆண்கள் ஏமாந்து விடுகிறார்கள். அப்போது சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள். அப்படி இவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள். ராஜேஷ் தாஸ் கடவுள் பக்தி கொண்டவர் .நிறைய விஷயம் தெரிந்தவர் .அவருக்கே ஏதோ ஒரு ரூபத்தில் வந்தது ஒரு சோதனை.
நாட்டில் எவ்வளவோ பெரிய குற்றங்களை எல்லாம் செய்தவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். நான் கேள்விப்பட்டவரை, இதற்குள் உண்மை மறைக்கப்பட்டு இருக்கிறது. சட்டத்தின் பார்வையில் அவர் குற்றவாளி. ஆனால் மனசாட்சியின் படி விவாதித்தால் அவர் நிரபராதி.