பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அது எதை வலியுறுத்துகிறது? பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் ஒரு பொதுவான சட்டம் தான் பொது சிவில் சட்டம் .இது உண்மையிலே மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சட்டம். இதில் யாருக்கும் எந்த விதமான பாகுபாடு இல்லாமல், அனைத்து சாதி மத சமூகங்களுக்கும், ஒரு பொதுவான சட்டம். இது அப்போது டாக்டர் அம்பேத்கர் ஆல் ஏற்படுத்தப்பட்ட சட்டம் தான், அதை நடைமுறைப்படுத்தவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு, இந்தியாவில் ஜாதி மத பாகுபாடு அதிகம் இருந்தது. அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் அதுதான் சிறுபான்மை மக்களின் ஒரு அடிமைத்தனமான அரசியல் .அங்கே கடவுளை வழிபடுவதற்கு, சில கிறிஸ்தவ பாதிரியார்கள், முல்லாக்கள் அங்கே அரசியல் செய்கிறார்கள். தெய்வ வழிபாடு என்பது தனி. அரசியல் என்பது தனி. இது இரண்டும் எப்படி கோர்த்து வைத்து மக்களிடம் திணிக்கிறார்கள்? இதை புரிந்தவர்கள் உண்மையிலேயே இதை வரவேற்கிறார்கள்.
ஆனால், இந்த சிறுபான்மை மக்களை இந்த வழிபாட்டு முறைகள் மூலம் தொடர்ந்து அடிமைப்படுத்தி வருகிறார்கள். அங்கே வெள்ளிக்கிழமை ஆனால் இத்தனை மணிக்கு நீ வந்து தொழுகை நடத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஆனால் நீ பைபிளை தூக்கிக்கொண்டு சர்ச்சில் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது போன்ற நிபந்தனைகள் கிறிஸ்தவ ,முஸ்லிம் மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது .
ஆனால், இந்துக்களுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. பெரும்பான்மையான இந்துக்கள் இந்தியாவில் இருந்தும், மத வழிபாட்டு தளங்களில் எந்த விதிமுறையும் இல்லை. அவர்கள் எப்போது வேண்டுமானாலும், கோயிலுக்கு போகலாம். எப்போது வேண்டுமானாலும் இறை வழிபாடு செய்யலாம். இவர்கள் இன்று இத்தனை மணிக்கு கோயிலுக்கு வர வேண்டும் என்று எந்த நிபந்தனையோ விதிமுறையோ கிடையாது. ஒரு சுதந்திரமான வழிபாடு, இந்து மதத்தில் உள்ளது .அந்த வழிபாடு கிருத்துவத்திலும் ,இஸ்லாமிய மதத்திலும் இல்லை.
அங்கே தலாக் தலாக் என்று மூன்று முறை சொல்லி ,பெண்களை ஒதுக்கி விடுவார்கள். ஒருவர் எத்தனை பெண்களை வேண்டுமானாலும், கல்யாணம் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல்,அவர்களை நடுத்தெருவில் விட்டு விடலாம். இப்படி எல்லாம் இஸ்லாம் மதத்தில் நடந்து கொண்டிருக்கும் பல முரண்பாடான விஷயங்கள் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. அதை எல்லாம் பிரதமர் மோடி இன்று இஸ்லாமிய பெண்களுக்கு முத்தலாக் சட்டம் மூலம் அதில் விடுதலைப் பெற்றுத் தந்துள்ளார் .அதை இஸ்லாமிய பெண்கள் மிகவும் வரவேற்றுள்ளனர். ஆனால்,
மத தீவிரவாதிகள் ,பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பல்வேறு கருத்துக்களை சொல்லி மக்களை திசை திருப்ப கூறி வருகிறார்கள். பொது சிவில் சட்டம் யார் எந்த வழிபாட்டு முறையில் இறைவனை வணங்கினாலும், அது தடை செய்யப் போவதில்லை. ஆனால், மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது. மதத்தை வைத்து மதமாற்றம் செய்ய முடியாது. மதத்தை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது. ஆக கூடி இந்த சட்டம் மதத்தை வைத்து அரசியல் செய்வதற்கு இது ஒரு எதிரான சட்டம்.
மதம் என்பது இறை வழிபாட்டிற்கு உரியது .அங்கே அரசியல் தேவையில்லை. ஆனால் யாரெல்லாம் பிஜேபி மத அரசியல் செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் புலம்புகின்றனவோ ,அவர்கள் தான் இப்போது அந்த மத அரசியலை முன்னெடுக்கிறார்கள், மதவாதம் என்று சொல்லி மக்களிடம் ஏமாற்றுகிறார்களோ, அதே கட்சிகள் தான், இந்த பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள். அதனால், பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு அவசியம் தேவையான ஒன்று.
அப்போதுதான் மத பாகுபாடுகளை மக்களிடமிருந்து ஒழிக்க முடியும். மத பாகுபாடுகள் ஒழிந்தால், ஜாதி பாகுபாடுகள் ஒழியும். இவையெல்லாம் ஒழிந்தால் தான், மக்களுக்கு தகுதியான நேர்மையான அரசியலை நாட்டில் நிலை நிறுத்த முடியும்.அரசியல் தெரியாத மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இனியாவது உண்மையை புரிந்து கொண்டால் சரி.