மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் இது எதனால்? அமெரிக்கா,இஸ்ரேல் போர் வெறியா? இல்லை, அந்த நாடுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தலா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

இன்று போர் பதற்றத்தில், தவிக்கின்ற அத்தனை மக்களும், தீவிரவாத செயலுக்கு, துணை போனவர்கள்.

குறிப்பாக சொல்லப் போனால் காமினி என்ற தீவிரவாத தலைவரின் ஆதிக்கத்தில், ஈரான் நாடு இருந்துள்ளது. அதையெல்லாம் சகித்துக் கொண்டு ,அந்த மக்கள் வாழப் பழகி விட்டார்கள்.

இதே தீவிரவாத செயல்கள் ,மற்ற நாடுகளிடம் அந்த கும்பல் செயல்படுத்தும் போது, அதனுடைய பலனை அந்த தீவிரவாதிகளும் அனுபவிக்கிறார்கள் .அந்த நாட்டு மக்களும் அனுபவிக்கிறார்கள். அப்படித்தான் பாகிஸ்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது ஈரானால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல நாடுகள் மற்றும் அந்த நாட்டு மக்கள் போர் பதற்றத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,

இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும். கிராமங்களில் ஒரு சில கெட்டவர்களால், அந்த கிராமத்திற்கு கெட்டதை செய்து, கிராமத்தின் பொது சொத்துக்களை அழித்து, பங்கு போட்டுக் கொண்டிருப்பார்கள். அதுதான் இன்றைய திமுகவின் அரசியல் கொள்கை.

திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்கள், ஐந்தாண்டுகளில் அதன் பலனை நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மட்டுமல்ல, பல ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகளும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதன் விளைவு , இன்று உழைப்பவர்கள் முன்னேற்றம் கேள்விக்குறி? படித்தவர்கள் முன்னேற்றம் கேள்விக்குறி? வேலையில்லை . வேலைக்கேற்ற ஊதியமும் இல்லை. மேலும்,தகுதியான பத்திரிக்கையாளர்களின் முன்னேற்றம் கேள்விக்குறி? இதையெல்லாம் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஊரை ஏமாற்றுபவன் முன்னேற்றம் மட்டுமே, முக்கிய வளர்ச்சியாக இருக்கிறது.மேலும்,

இதற்கு சில உதாரணம் இருக்கிறது. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், இடையே நாடு அதாவது சொத்து தகராறு ஏற்படும் போது, நாட்டு மக்கள் கௌரவர்களுக்காக துணைபோன ஒரே காரணத்தால், அவர்கள் அழியும்போது, இவர்களும் சேர்ந்து அழிந்தார்கள்.

யுகங்கள் மறைந்தாலும், உண்மைகளை மறைக்க முடியாது. விஞ்ஞானம் வளர்ந்தாலும், வாழ்க்கையின் உண்மை வரலாறுகள் அழியாது. மேலும்,அதிக விஞ்ஞான வளர்ச்சி ,ஆபத்து என்று சில தினங்களுக்கு முன் கூட எழுதினேன்.

அந்த அதிக விஞ்ஞான வளர்ச்சியால், தான் இன்று ஏவுகணைகளால் மக்கள் போர் பயத்தால், பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்ன படித்து என்ன பிரயோஜனம்? எவ்வளவு சொத்து வைத்திருந்து என்ன பிரயோஜனம்? ஒரு நொடியில் விஞ்ஞானம் அழித்து கொண்டிருக்கிறது.

இப்போதாவது மக்கள் திருந்துவார்களா? திருந்த மாட்டார்கள். அப்படி திருந்தாத மக்களாக வாழும்போது, இவர்கள் கெட்டவர்களின் ஆட்சியில் அல்லது அவர்களை தலைவர்களாக ஏற்று வாழும் போது ,அந்த கெட்டவனுக்கு கெட்ட காலம் வரும்போது, எல்லோரும் சேர்ந்து அழிவார்கள்.

இதுதான் மனித குல வாழ்க்கையின் உண்மையின் உருவம் !சத்தியத்தையும், தர்மத்தையும் காப்பாற்ற ,இறைவன் யாரோ ஒருவரை அனுப்பி, அதர்மத்திற்கு முடிவுரை எழுதுகிறான். இதுதான் யுகங்களின் உலக வரலாறு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *