
இந்து மதத்தில் சமத்துவம் தான் இருக்கிறது. இந்து மதத்தில் எல்லா ஜாதியும் கோயிலுக்கு செல்கிறார்கள். அங்கே சமத்துவமாக தான் சாப்பிடுகிறார்கள். சாமி கும்பிடுகிறார்கள். ஆனால், அதே இஸ்லாம் மற்றும் கிருத்துவத்தில் தான் பேதங்கள் அதிகரித்திருக்கிறது. அங்கே எதுவும் இல்லை, சித்தராமையாவுக்கு தெரியுமோ, தெரியாதோ ,தெரியவில்லை.
ஜாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் எல்லா மதத்திலும் இருக்கிறது .வெளியில் அரசியல்வாதிகள் பேசுவது வேறு, உள்ளே நடப்பது வேறு, இந்த உண்மைகள் இந்து மதத்தில் வெளிப்படையாக தெரியும். ஆனால், இஸ்லாமியத்திலும், கிறித்துவத்திலும் மூடி மறைத்து விடுவார்கள்.
இங்கே ஒரு செய்தி என்றால், அதை உடனடியாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் காட்டி விடுவார்கள். அங்கே மூடி மறைப்பார்கள். இவ்வளவு தான் வித்தியாசம். இங்கே இந்த தவறு செய்தது பிராமணர்கள். இதை வைத்து ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இப்பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று கூட தெரியவில்லை .அந்த அளவிற்கு அவர்கள் அதிலிருந்து மாறி விட்டார்கள். கொஞ்சம் பேர் இருக்கலாம் .அதை எல்லாம் நாம் கணக்கில் எடுக்க முடியாது.
ஆனால், இந்த மாற்றம் சமூகத்தில் நடந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த தீண்டாமை எதுவுமே இல்லை. ஆனால், அரசியலுக்காக மீண்டும் அதை பேசிக்கொண்டு, ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.
நாட்டின் பிரச்சனைகள் பல இருந்தாலும், அதை சரி செய்ய முடியாத சித்தராமையா! இதைப் பேசி என்ன நடக்கப் போகிறது? அரசியல் தெரியாத முட்டாள்கள் தான் கேட்டுக் கொண்டிருக்கும். அவர்கள் தான் இதையெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். அரசியலுக்கு தேவை ஜாதியும், மதமும் அல்ல! என்பதை இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?