
தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு ,கேரளா ,மேற்குவங்கம், அசாம் ,புதுச்சேரி, ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்,தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அமலாக்க விதிமுறைகள் சிலவற்றை தெரிவித்துள்ளது.
அதாவது தேர்தல் முடியும் வரை, எந்த ஒரு புதிய திட்டத்தையும் அரசு அறிவிக்க கூடாது. தவிர, அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து, தனிநபர் விமர்சனம் செய்யக்கூடாது .
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், அரசு ஊழியர்கள், பொதுத்துறை அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்யக்கூடாது. இது தவிர ,
அரசு விழாக்கள் நடத்தக் கூடாது. கட்சி பாகுபாடு இன்றி, பொது மைதானங்கள் பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் அறிவித்தவுடன் அமலாகும் தேர்தல் நடத்தை விதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.