
களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய ஸ்ரீ இருவரும், இன்ஸ்டா கிராமில் காதல், செய்து அந்த காதலில் விஜயஸ்ரீ மயங்கி
வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். இதில் தலையிட்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி,ஏ டி ஜி பி ஜெயராமன் மற்றும் மகேஸ்வரி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தவிர,இந்த வழக்கு சி பி சி ஐ டி க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தான் இதில் முக்கிய நபராக காவல்துறை தெரிவிக்கிறது. இவர் சொந்த சமுதாயம் என்று இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்துள்ளார்.

ஆனால்,,இது 650 கோடி சொத்து விவகாரமாக இந்த காதல் திருமணம் மாறி இருக்கிறது. ஒரு பக்கம் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்திக்கு இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.
மற்றோரு பக்கம் குற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் காவல்துறை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இதில் நீதிமன்றம் சட்டத்தின் பிடியில் தவறு செய்தவர்களுக்கு என்ன தண்டனையோ, என்ன விசாரணையோ அதை செய்து வருகிறது. இதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது. யாராக இருந்தாலும் சட்டப்படி என்ன விசாரணையோ,,அது நீதிமன்றம் நடத்தி வருகிறது. அதை குறை சொல்லும் அளவிற்கு இல்லை. மேலும்,
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில்
ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த சம்பவத்திற்கும், ஜெகன் மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் அவர், சம்பவம் நடைபெற்ற அன்று திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டார்.
தவிர, அவர்,
கடத்தப்பட்ட சிறுவனுக்கோ அல்லது காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கோ,எந்த சம்பந்தமும் இல்லை.இது, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கில் எனது மனுதாரரை சேர்த்துள்ளனர். மேலும் அவர்,சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மனுதாரர் தயாராக உள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதாடினார்.

போலீசார் சார்பில் ஆஜரான வக்கீல், ‘ஒட்டு மொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது,பூவை ஜெகன்மூர்த்தி தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இவருக்கு முன் ஜாமீன் வழங்கினால், ஆதாரங்களை கலைத்து விடுவார் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதனால்,
மேற்படி விசாரணை மற்றும் ஆதாரங்கள் பேரில் ஆய்வு செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் அவருடைய முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். இந்த நிலையில் அவர் தலைமறைவானதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். மேலும், இவரை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.