
இலங்கையில் நீதிபதிகள் மீது களை எடுப்பு நடை வடிக்கை தொடரப்பட்டுள்ளது. அதில் இருபதுக்கு மேற்பட்ட நீதிபதிகள் ஊழல் வழக்குகளிலும், குற்ற வழக்குகளிலும், சிக்கியதாக இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் இந்தியாவில் இப்படிப்பட்ட நீதிபதிகள் மீது களை எடுப்பு நிகழ்த்தினால் ,நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது இந்த களை எடுப்பு நடத்த வேண்டி வரும். நீதித்துறை நாட்டில் வலுவானதாகவும் ,நேர்மையானதாகவும் ,இருந்தால்தான் ஜனநாயகத்தின் வலுவான துணாகவும், மக்களின் நம்பிக்கையாகவும், ஆட்சியாளர்களின் அதிகாரத்தை சமன் செய்து, மக்களுக்காக நீதிமன்றம் என்பதை நிலைநாட்ட முடியும்.

ஆனால், பல லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கிறது. பொதுநல வழக்குகள் போட்ட உடனே, அந்த வழக்குகள் டிஸ்மிஸ் செய்து விடுகின்றனர் என்கிறார்கள், பல வழக்கறிஞர்கள் .மேலும்,
அது எந்த நோக்கத்திற்காக போடப்பட்டது ?அதனுடைய உண்மைத் தன்மை என்ன? அதனால், உண்மையிலே பாதிக்கப்படுகிறார்களா? மக்கள் ,என்று ஆய்வு செய்யாமல், இந்த வழக்குகள் தள்ளுபடி செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

அப்படிப்பட்ட நீதிபதிகள் பொதுநல வழக்குகளை தள்ளுபடி செய்யும்போது, நீதித்துறை அது பற்றி பொதுநல வழக்குகள் போடப் பட்டவர்களிடம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அது உண்மையான நோக்கத்திற்காக? மக்களுக்காக? பயன் அளிக்க கூடியது என்றால்! மீண்டும் அதை வழக்கு விசாரணையில், கொண்டு வர வேண்டும் .

அப்போதுதான் நீதித்துறையில் நீதியை காப்பாற்ற முடியும். நீதித்துறை மக்களின் நம்பிக்கை பெற்ற துறையாக விளங்க முடியும். அதுதான் பொதுமக்களின் கோரிக்கை.