
தமிழ்நாட்டில் மதிப்புமிக்க ,அரசின் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், ஏரிகள், குளங்கள், ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது அலட்சியம் காட்டக்கூடாது. உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நீதிமன்றம் தெரிவிக்கிறது.
ஆனால், அரசியல் கட்சிகளில் உள்ள கிரிமினல்கள், சமூக விரோத கும்பல்கள், ஆக்கிரமிப்பு செய்யவும், அவர்கள் நன்றாக அனுபவிக்கவும், அதிகாரிகள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டால் கூட, அவர்கள் புகார் தெரிவித்தால் கூட, ஒரு சில அரசு அதிகாரிகளை தவிர, மற்ற அரசு அதிகாரிகள் அலட்சியமாக தான் இருக்கிறார்கள். இதுதான் நாட்டில் ஊழலுக்கு முக்கிய காரணமாக இவர்கள் இருந்து வருகிறார்கள்.
மேலும்,ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது ஒவ்வொரு நகரத்திலும் நடக்கக்கூடிய இது போன்ற ஆக்கிரமிப்புகளுக்கும், அடாவடித்தனங்களுக்கும், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதனால், அவர்களுடைய தொழில் பாதிக்கிறது, வியாபாரம், பாதிக்கிறது, பணவிரையம் ஆகிறது, மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இவ்வளவு பிரச்சனைகளுக்கும் அதிகாரிகள் தான், இந்த கிரிமினல்களுக்கு முக்கிய காரணமாக நிற்கிறார்கள்.
மேலும்,தற்போது கூட, விடையூர் கிராமத்தில், சவுடு மண் குவாரி ஓட்டியதில் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி திருவள்ளூர் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு, கேட்ட போது, நாங்கள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டு, எவ்வளவு அதிக அளவு மண் எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து ரிப்போர்ட் கேட்டு உள்ளோம் என்றார்.

மேலும்,நீர் வளத் துறை அதிகாரிகள் எப்போது ரிப்போர்ட் கொடுப்பார்கள்? எப்போது அதிக அளவு எடுக்கப்பட்ட மண்ணுக்கு அபராதம் போடுவார்கள்? அதை எப்போது வசூல் செய்வார்கள்? ஒவ்வொரு பிரச்சனைக்கும், கிராம மக்கள் நீதிமன்றம் செல்வார்களா?
இது பற்றி மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் நீர்வளத் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு விடையூர் கிராம மக்கள், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மூலம் கொண்டு வந்துள்ளனர்.
இது தவிர, மாவட்ட ஆட்சியர் இந்த சவுடு மண் குவாரி நிறுத்தி, நான்கு நாட்களுக்கு மேலாகியும், அங்கேயே இரண்டு பொக்லின்கள் இருந்து வருகிறது. அவர்களைக் கேட்டால், வேலை இல்லை .அதனால் ,இங்கே வைத்துக் கொண்டிருக்கிறோம்.
இது ஒரு வேலை இரவில் திருட்டு மண் ஓட்டுவதற்கு இவர்கள் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால் உடனடியாக இவர்களை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கும், நீர் வளத்துறை செயற் பொறியாளருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக ஆர்வலர்களால் தொடரப்பட்ட வழக்காக இருந்தாலும், தமிழக முழுதும் உள்ள அரசு மதிப்பு மிக்க நிலங்களை ,அரசு அதிகாரிகள் பாதுகாக்க தவறி வருவதும், அலட்சியம் காட்டுவதுமாக இருப்பதால்,
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு சொத்துக்களை பாதுகாப்பதில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. அதனால், தாலுக்கா சட்டப் பிரிவை ஏற்படுத்த ஐ கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
எனவே,இப்போதாவது மாவட்ட ஆட்சியர்களும், வருவாய் துறை அதிகாரிகளும், நீர்வளத் துறை அதிகாரிகளும், உண்மை என்ன வென்று புரிந்து, நடவடிக்கை எடுப்பார்களா? தமிழக நலன் விரும்பிகள் மற்றும் சமூக நலன் பத்திரிகைகள்.