எந்தவிதமான வரைமுறை இல்லாமலே பத்திரிக்கைகள்!இருப்பது ,இது எதிர்கால நலனுக்கு ஆபத்தானது. எல்லா மக்களும் எது உண்மை ?எது பொய்? என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் அல்ல.
நாட்டில் பத்திரிக்கை துறை 90% க்கு மேல் ,சுயநலமாக செயல்படுவதற்கு முக்கிய காரணமே, இந்த போலிகள் தான். மேலும், இந்த போலிகளால் சமூகத்திற்கு என்ன நன்மை? ஏன் ?இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் கவலைப்படாமல் இருக்கிறது?

RNI இருப்பதாலே ,அது பத்திரிக்கையாக ஆகிவிடுமா? இதைப் பற்றி எல்லாம் மத்திய மாநில அரசுகள் கவலைப்படாமல், நாட்டில் பத்திரிக்கை துறையை இன்று இந்த போலிகள், குப்பைக் கூளங்களாக, சமூக நன்மைக்கு பயன்படாமல், சமூக விரோத கும்பலுக்கு, மறைமுக ஆதரவாக இருந்து வருகிறது.

மேலும்,பெரும்பாலும் அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கிரிமினல்களுக்கே, இவர்கள் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஒரு கட்சிக்கு ஆதரவாகவும், இன்னொரு கட்சிக்கு விரோதியாகவும், சில அரசியல் கட்சிகளுக்கு எல்லோருக்கும் நல்லவர்களாகவும் ,இந்த பத்திரிகை, தொலைக்காட்சி வியாபாரம் மக்களிடம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் இந்த செய்திகள், பெரும்பாலும் தேவையற்ற செய்திகளாக, அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லாமலே, மக்களிடம் திணிக்கப்படும் செய்திகளாகத் தான் இருக்கிறது . அப்படி திணிக்கப்பட்ட செய்திகளை அதை நியாயப்படுத்துவது போல் கொடுக்கப்படும் வித்தை தான் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் வித்தை. இதற்கு என்ன முக்கிய காரணம்?

மக்களுக்கு பத்திரிக்கை என்றால், எந்த செய்தி கொடுத்தாலும் ,அது பத்திரிக்கை என்று ஒரு தவறான புரிதல மக்களிடம் இருந்து வருகிறது. இதற்கெல்லாம் பக்க பலமாக இருப்பது 50 ஆண்டுகளுக்கு முன் பத்திரிக்கை துறைக்கு போடப்பட்ட துருப்பிடித்த சட்டங்கள். அந்த சட்டங்கள் தான், தற்போது

பத்திரிக்கை துறையில் தவறான சர்குலேஷன் என்ற சட்டம்! ஒரு புறம், மற்றொரு புறம் தினசரி, வாரம் ,மாதம், இந்த கணக்கிற்குள் பத்திரிகையை கொண்டு வந்திருக்கிறார்கள். இது அத்தனையும் பத்திரிக்கை துறையின், ஓட்டை சட்டங்கள்.

இந்த ஓட்டை சட்டங்களை வைத்துக் கொண்டு, அரசியல் அதிகாரம் மிக்கவர்களின் பின்னால் ஒளிந்து கொண்டு, பத்திரிக்கை வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,பத்திரிகைகள் தான் இப்படி என்றால்! சோசியல் மீடியா, கட்சிக்காரனை விட மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ,ஐ .டி .விங் என்று ஏற்படுத்தி, மாறி ,மாறி அரசியல் கட்சிகளின் மேடையிலே தீட்டிக் கொள்வார்கள். அந்த நிலைமைக்கு youtube சேனல்களின் நிலைமை வந்து விட்டது. அதில் விரல் விட்டு, சொல்லக்கூடிய அளவில் தான், youtube சேனல்கள் வியாபார நோக்கமின்றி இருக்கிறது. மேலும்,

இதுவே நிலைமை இது என்றால்! இதில் வேலை செய்யக்கூடிய செய்தியாளர்களின் நிலைமை என்ன ? இந்த செய்தியாளர்கள் சங்கங்களை வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். மாவட்டங்களில் ,அது ஜாதி சங்கமாக கூட இருக்கிறது. வெளியில் அது பத்திரிக்கை ஆனால் உள்ளே ஜாதி சங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இது தவிர ,வெளியில் தெரியாத பத்திரிகைகளின் பெயர்களை எல்லாம் பத்திரிக்கை என்று சொல்லிக் கொண்டு , அது எதுக்கு பத்திரிக்கை? என்று கூட அந்த செய்தியாளர்களுக்கும் தெரியாது. பத்திரிக்கை நடத்துபவர்களுக்கும் தெரியாது.

இவர்களும், நிருபர்கள் போர்வையில் சங்கத்தில் இணைந்து, பத்திரிகையின் லேபிலில் வசூல் வேட்டை ஒரு பக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுக்கெல்லாம் என்ன காரணம்? திமுகவின் ஊழல் ஆட்சி! முக்கிய காரணம். ஏனென்றால்? ஆட்சியாளர்கள் சரியாக இருந்தால் தானே, தவறுகள் எது ?என்று தெரியும்.

திமுகவின் ஒட்டுமொத்த கூட்டமே! தவறான அரசியல் நிர்வாகத்தில் இயங்கும் போது, இவர்கள் எதை கண்டிப்பார்கள்? எது இவர்களுக்கு நல்லது ? என்று தான் யோசிப்பார்களே ஒழிய, மக்களுக்கு எது நல்லது? என்று யோசிக்க மாட்டார்கள். சமூகத்திற்கு எது நல்லது! என்று யோசிக்க மாட்டார்கள்.
இவர்களுடைய சுயநலத்திற்கு யாரெல்லாம் ஒத்து ஊதுகிறார்களோ, அல்லது இவர்களுடைய ஊழலுக்கு யாரெல்லாம் முட்டுக் கொடுக்கிறார்களோ, அதுதான் பத்திரிக்கை, தொலைக்காட்சி என்று சொல்லி, அந்த பத்திரிகைகளின் தலைமை நிருபர்கள், ஆசிரியர்கள், இவர்கள்தான் பத்திரிகை நல வாரியத்தின் முக்கிய நிர்வாகிகளாக ஆக்கிவிட்டார்கள்.

இப்படிப்பட்ட அரசியல் சுயநலம், பத்திரிக்கை துறையை எப்படி சரி செய்யும்? மேலும் ,இது எப்படி? சமூக நலன்களுக்காக இந்த பத்திரிகைகள் இருக்கும்? தவிர, இது எப்படி நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும்? மேலும்,அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கிரிமினல்களை மக்களிடம் வெளிக்கொண்டுவரும்?
தவிர,இந்த செய்தியாளர்கள் மற்றும் அவர்களுடைய பத்திரிகைகள், இதுவரை எப்படிப்பட்ட செய்திகளை கொடுத்துள்ளது? மக்கள் மத்தியில் அதனுடைய அங்கீகாரம் என்ன? இப்படிப்பட்ட பத்திரிகைகள் இணையதளத்தில் எத்தனை இருக்கிறது?

அதனுடைய பார்வையாளர்கள் என்ன? எதுவும் இல்லாமல், நானும் பத்திரிக்கை என்று பல பத்திரிகைகள், இன்று காப்பி to பேஸ்ட் என்று ஓட்டிக் கொண்டிருக்கிறது. மேலும், பத்திரிகை துறையில் போலிகள் அதிக அளவில் இருப்பதற்கு முக்கிய காரணமே சர்குலேஷன் சட்டம்.

இதில், போலியான சர்குலேஷன் கணக்குகளை காட்டி, தினசரி பத்திரிக்கை என்று சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அது எல்லாம் ஒரு பத்திரிக்கையா? என்று பொதுமக்கள் பேசும் அளவில் இருந்தால் கூட ,அதற்கும் செய்தி துறை சலுகை ,விளம்பரங்களை கொடுத்து வருவது பத்திரிக்கை துறைக்கே மிகப்பெரிய கேவலம்.

இப்படி தகுதியற்ற பத்திரிகைகளுக்கெல்லாம் அர்த்தமில்லாமல் , மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை, மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும்,இந்த பிரச்சனைகள் நீதிமன்றத்திற்கு போகாத வரை இது சரி செய்ய முடியுமா? என்பதுதான் சமூக நலன் பத்திரிகைகள் முக்கிய கேள்வி? அது மட்டுமல்ல,

இதற்குள் இருக்கின்ற அரசியல், மக்களுக்கு அவசியம் தெரிய வேண்டிய உண்மைகள் என்னவென்றால் ?ஒரு பக்கம் மக்கள் இந்தப் போலி பத்திரிகைகள் கூட்டத்திடம் ஏமாறுகிறார்கள். இன்னொரு பக்கம் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப் படுகிறது. இதை சரி செய்ய வேண்டுமென்றால், இந்த சட்டங்கள் சரி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு.

மேலும், இதற்குள் இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளின் அரசியல், தினசரி என்று இந்த சர்குலேஷன் சட்டத்தில் ஒலிந்து கொண்டிருக்கிறது. அதை எடுக்கக் கூடாது என்று போராடுவார்கள். ஆனால்,மக்கள் அதிகாரத்தில் பலமுறை இந்த செய்திகள், தொடர்ந்து வெளியிட்டு வருவதன் நோக்கமே ,சர்குலேஷன் சட்டம் என்பது பணம் மற்றும் சலுகை விளம்பரங்களை வைத்து நிர்ணயிக்கக் கூடிய ஒரு சட்டம்.

உதாரணத்திற்கு ஒருவனிடம் பணம் இருந்தால், 10 ஆயிரம் பிரதிகள் என்ன ?ஒரு லட்சம் பிரதிகள் கூட தினமும் அடிக்கலாம். ஆனால், அந்தப் பத்திரிகைகளின் நோக்கம் ,அது வியாபார நோக்கமா? அல்லது சமூக நோக்கமா? இதற்குள் தான் பத்திரிகைகள் அடங்கி இருக்கிறது. மேலும்,

இது ஊழலுக்கு எதிராக போராடுகிறதா? அல்லது ஊழல்வாதிகளை ஊக்குவிக்க வைக்க போராடுகிறதா? எது அதனுடைய நோக்கம்? இல்லை அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்காக அந்த பத்திரிகைகள் போராடுகிறதா? இதில் எது ?அந்த பத்திரிகைகளின் நோக்கம்? இது தெரியாமல் ,மத்திய, மாநில அரசின் செய்தித் துறை இந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்களை, இவர்களின் அரசியல் லாபங்களுக்காக கொடுத்து பல ஆயிரம் கோடிகளை வீணடித்துக் கொண்டிருக்கிறது.

மேலும்,இங்குதான் நீதித்துறை சரியான, நடுநிலையான ஓர் ஆய்வை மேற்கொண்டு, நீதி வழங்கினால் மட்டும் தான்! இந்த பத்திரிக்கை துறையை சரி செய்ய முடியும்.